சென்செக்ஸ் 1,100 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி..!
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1178 புள்ளிகள் சரிந்து 48,851 புள்ளிகளாக வீழ்ச்சி அடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 346 புள்ளிகள் சரிந்து 14,520 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 27 நிறுவன பங்குகள் விலை குறைந்து வவர்த்தகமாகின்றன.இன்ஃபோசிஸ், டி.சி.எஸ், எச்.சி.எல். டெக் ஆகிய நிறுவன பங்குகள் மட்டுமே விலை அதிகரித்துள்ளன. இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் புதிய கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்துள்ளது.
இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து உள்ளதால் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. மீண்டும் ஊரடங்கு பிறப்பித்தால் தொழில் வளர்ச்சி முடங்கும் அபாயம் உள்ளதால் பங்குசந்தையில் சரிவு ஏற்பட்டுள்ளது.