SEBI அதிரடி முடிவு…! மோசடி நிறுவனங்களுக்கு துணைபோனால் கடும் நடவடிக்கை …!
பங்குசந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி(SEBI) மோசடி நிறுவனங்களுக்கு துணைபோகும் பட்டய கணக்காளர், நிறுவன செயலாளர்கள் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு, வாட்சப்பில் நிறுவனங்களின் ஆண்டு அறிக்கை விவரங்கள் கசிந்தது போன்ற முறைகேட்டில் தொடர்புடைய பட்டாய கணக்காளர்கள் செபியின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். மோசடிக்கு துணை போயிருந்தால் அவர்கள் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதே போன்று மோசடியாக நிறுவனங்கள் பெற்ற லாபத்தை திரும்ப பெறுவதுடன், ஆண்டுக்கு 12 சதவீத வட்டியும் வசூலிக்க செபி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான விதிமுறைகளை பங்கு சந்தை முதலீட்டாளர்கள் நலன் கருதி, செபி இறுதி செய்ய இருக்கிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.