எஸ்பிஐ வங்கியின் வாராக்கடன் மதிப்பு 2016 – 2017 நிதியாண்டில் அதிகரிப்பு!
கடந்த 2016 – 2017 நிதியாண்டில் பாரத ஸ்டேட் வங்கியின் வாராக்கடன் மதிப்பு 20 ஆயிரத்து 339 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கியுடன், பிற பொதுத்துறை வங்கிக் கிளைகளை இணைப்பதற்கு முந்தைய வாராக்கடன் மதிப்பு இதுவென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்பிஐ வங்கிக்கு அடுத்தபடியாக பஞ்சாப் நேஷனல் வங்கியின் வாராக்கடன் மதிப்பு 9 ஆயிரத்து 205 கோடி ரூபாயாகவும், பேங்க் ஆப் இந்தியாவின் வாராக்கடன் மதிப்பு 7 ஆயிரத்து 346 கோடியாகவும், கனரா வங்கியின் வாராக்கடன் 5 ஆயிரத்து 545 கோடியாகவும், பேங்க் ஆப் பரோடாவின் வாராக்கடன் 4 ஆயிரத்து 348 கோடியாகவும் உள்ளது.
2012- 2013 ஆம் ஆண்டு 27 ஆயிரத்து 231 கோடி ரூபாயாக இருந்த ஒட்டுமொத்த பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் மதிப்பு, கடந்த 5 ஆண்டுகளில் 81 ஆயிரத்து 683 கோடியாக 3 மடங்கு அதிகரித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.