ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது!
கடனுக்கான வட்டி விகிதத்தைப் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா புள்ளி இரண்டு விழுக்காடு முதல், கால் விழுக்காடு வரை உயர்த்தியுள்ளது. 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குப் பின் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா முதன்முறையாகக் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.
ஓராண்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 7 புள்ளி ஒன்பது ஐந்து விழுக்காட்டில் இருந்து 8புள்ளி ஒன்று ஐந்து விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுக் கடனுக்கான வட்டி விகிதம் எட்டு புள்ளி பூச்சியம் ஐந்து விழுக்காட்டில் இருந்து எட்டேகால் விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது.
மூன்றாண்டுக் கடனுக்கான வட்டி விகிதம் எட்டு புள்ளி ஒரு விழுக்காட்டில் இருந்து எட்டு புள்ளி மூன்று ஐந்து விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அடக்கவிலை அடிப்படையிலான கடன்களுக்கு மாதந்தோறும் செலுத்தும் தவணைத் தொகை சிறிதளவு உயரும்.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வட்டி விகிதத்தை உயர்த்தியதை அடுத்து மற்ற வங்கிகளும் கடனுக்கான வட்டியை உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.