புதிய உச்சத்தில் தங்கம் விலை…சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

gold price

Gold Price: இதுவரை இல்லாத அளவிற்கு ஆபரணத் தங்கத்தின் விலை கிடுகிடுவென்று உயர்ந்துள்ளது.

சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, ​​தங்கத்தின் விலையும் உயர்கிறது. அதன்படி, இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் பற்றி பார்க்கலாம்.

கடந்த 10 நாள்களில் மட்டும் தங்கத்தின் விலை ரூ.2760 அதிகரித்துள்ளதால், மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதன் படி, சென்னையில் இன்றைய நிலவரப்படி (04-04-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.52,360க்கும், கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.6,545க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், வெள்ளியின் விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.84க்கு விற்பனையாகிறது.

சென்னையில் நேற்றைய நிலவரப்படி (03-04-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.52,000-க்கும், கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.6,500-க்கும் விற்பனை விற்பனையானது. அதே நேரம் வெள்ளியின் விலை கிராமுக்கு 2 ரூபாய் அதிகரித்து ரூ.84-க்கும், கிலோ வெள்ளி ரூ.2000 அதிகரித்து ரூ.84,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்