இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?
அதே நேரம், 24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.58,720 ஆகவும், கிராமுக்கு ரூ.7,340 ஆகவும் விற்பனையாகிறது.
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.
அதன்படி, இன்றைய நிலவரப்படி (20.09.2024) சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.55,080க்கும், கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,885க்கும் விற்பனையாகிறது.
அதே நேரம், 24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.58,720 ஆகவும், கிராமுக்கு ரூ.7,340 ஆகவும் விற்பனையாகிறது.
மேலும், சில்லறை விற்பனையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.97.50க்கும், கிலோ ரூ.97,500க்கும் விற்கப்படுகிறது.