திடீர் உச்சத்தில் தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?
சென்னை : இல்லத்தரசிகள் ஷாக் ஆகும் வகையில், 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது.
கடந்த சனிக்கிழமை முதல் தங்கம் விலையில் எந்தவித மாற்றமில்லாமல், திங்கட்கிழமை வரை அதே விலையிலேயே விற்பனையானது. ஆனால், நேற்றைய தினம் சவரனுக்கு வெறும் 8 ரூபாய் குறைந்த நிலையில், இன்றைய தினம் மளமளவென உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்றைய நிலவரப்படி (28-08-2024) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலைசவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.53,720-க்கும், கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.6,715-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8 குறைந்து ரூ. 57,360 ஆகவும் கிராம் ஒன்று ரூ.1 குறைந்து ரூ.7,170 ஆகவும் விற்பனையாகிறது. அதே நேரம், வெள்ளி விலையில் மாற்றமில்லாமல், ஒரு கிராமுக்கு ரூ.93.50க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.93,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.