அடேங்கப்பா! தங்கம் வாங்கவே முடியாது போல…சவரனுக்கு ரூ.600 உயர்வு.!
ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்றம் அதிரடியாக ரூ.600 உயர்ந்துள்ளது.
தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதஹலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு.
பங்குசந்தை ஏற்றம் இறக்கம் கண்டால், தங்கம் விலையிலும் மாற்றம் ஏற்படும். இந்த நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
(20.10.2023) இன்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.45,280க்கும், கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.5,660க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ரூ. 77.50க்கும் கிலோ வெள்ளி ரூ.77,500க்கும் விற்பனையாகிறது.
(19.10.2023) நேற்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.200 உயர்ந்து ரூ.44,680 க்கும், கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.5,585 க்கும் விற்பனையானது. அதேபோல், ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசு குறைந்து ரூ.77.5 க்கும், கிலோ வெள்ளி ரூ.77,500க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.