ரூ 3,00,00,00,00,000 அரசுக்கு இலாபம்: பெட்ரோல் விலை ரூ 43 தான்..!! வெளுத்து வாங்கிய பத்திரிக்கையாளர்.

Published by
Dinasuvadu desk

புதுடெல்லி, செப். 23- -ஒரே நாடு, ஒரே வரி என்றெல்லாம் கூறி ஜி.எஸ்.டி.யைக் கொண்டு வந்த மோடி அரசு, பெட்ரோல் – டீசலை மட்டும் ஜி.எஸ்.டி. வரம் புக்குள் கொண்டு வராமல் மக்களை ஏமாற்றி வருவதாக புகழ்பெற்ற எழுத்தாளரும், மூத்த பத்திரிகையாளருமான சேத்தன் பகத் கடுமையாக சாடியுள்ளார்.

இதுதொடர்பாக பத்திரிகை ஒன்றில் எழுதி யுள்ள கட்டுரையில் அவர் மேலும் கூறியிருப்ப தாவது:- பெட்ரோல் லிட்டருக்கு 85 ரூபாயாகவும், பெட்ரோலை விட அதிக அளவு இந்தியர்கள் பயன்படுத்தும் டீசலின் விலை 78 ரூபாயாகவும் உயர்ந்திருக்கிறது. இது உண்மையாகவே நடந்த விலை ஏற்றமாக இல்லை. மத்திய அரசின் கமுக்கமான ஏமாற்று வேலை இதற்குள் இருக்கிறது. மத்திய அரசு பெட்ரோல் மீது லிட்டருக்கு 20 ரூபாயை நேரடி வரியாக விதிக்கிறது. மாநிலங்களும் பெட்ரோல் மீது தங்களுக்குத் தோதாக வரி விதிக்கின்றன.

இதன் காரணமே பெட்ரோல் -டீசல் விலை உயர்வு! உதாரணமாக தில்லி யை எடுத்துக் கொண்டால் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு- அங்குள்ள அரசு 17 ரூபாய் வரி விதிக்கிறது. இந்த 2 வரிகளையும் (37 ரூபாய்) கழித்துக் கொண்டால் பெட்ரோலின் அசல் விலை அல்லது உற்பத்தி செய்து பெட்ரோல் பங்குகளின் லாபத்தையும் சேர்த்து, ஒரு லிட்டருக்கு விற்க வேண்டிய விலை வெறும் 43 ரூபாயாகி விடும்.

கடந்த நான்கு வருடங்களில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து சரிந்து கொண்டே இருந்தது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 25 டாலருக்கு கீழே எல்லாம் போயிருக்கிறது. அப்போது எல்லாம் மத்திய அரசு தந்திரமாக விலையை குறைக்காமல், தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டங்களை சரிகட்டிக் கொண்டது. கச்சா எண்ணெய் மற்றும் அதனைச் சார்ந்த பொருட்களான பெட் ரோல், டீசல் மீதான வரிகள் மூலம் மட்டும் மூன்று லட்சம் கோடி ரூபாயை வரியாக சம்பாதித்தது. அரசின் வருமானம்தான் அத்தனை முக்கியமா? இப்போது கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் போது மட்டும் நேரடியாக விலையை மக்கள் மீதே திணிக்கிறது. வரிகளை யாருக்காக வசூலிக்கிறார்கள்…? மக்களுக்காகத் தானே. அந்த மக்களே இங்கு விலை ஏற்றத்தால் அவதிப்படும் போதும் கூட. அரசின் வருமானம் அத்தனை முக்கியமா, என்ன…? பெட்ரோல் மீது இரு அரசுகளும் 86 சதவிகிதம் வரி விதிக்கின்றன. இதுவே பெட்ரோல் மற்றும் டீசலுக்கு ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டால் 47 ரூபாய் 36 காசுகளுக்கு பெட்ரோல் கிடைக்கும்.இந்தியாவில் பெரும்பாலான பொருட்கள் ஜி.எஸ்.டி-க்குள் வந்து விட்ட பிறகும், கச்சா எண்ணெய், பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற சில பொருட்களை மட்டும் ஜி.எஸ்.டி.க்குள் சேர்க்க மறுக்கிறார்கள். மக்களிடம் இருந்து வரும் வரி வருவாய் தான் ஒரு நாட்டுக்கு மிக அவசியமான வருவாய். அது இல்லாமல் எந்த அரசும் நிர்வாகம் செய்ய முடியாதுதான். ஆனால் இன்று அரிசி பருப்புக்கு இணையான அத்தியாவசியப் பொருளாக பெட்ரோல், டீசல் இருக்கும்போது, அதன் மீதான விலையை உயர்த்துவது ஒட்டு மொத்த இந்தியாவின் பொருளாதாரத்தையும் நிச்சயமாக மிக மோசமாகப் பாதிக்கும். இவ்வாறு சேத்தன் பகத் கூறியுள்ளார்.

DINASUVADU

Published by
Dinasuvadu desk

Recent Posts

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : 20 காளைகளை அடக்கி காரை வென்ற அபி சித்தர்!

சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில்…

6 minutes ago

“சஞ்சு சாம்சன் வேண்டாம்” சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியை தேர்வு செய்த ஹர்ஷா போக்லே!

மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…

57 minutes ago

கர்நாடகா ஸ்பெஷல் போண்டா சூப் செய்வது எப்படி.? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!

சென்னை :கர்நாடகா ஸ்பெஷல் போண்டா  சூப் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; உளுந்து…

1 hour ago

மன்னராட்சி மன நிலைக்கு மக்கள் முடிவு கட்டுவார்கள் – அண்ணாமலை காட்டம்!

சென்னை : பொங்கல் பண்டிகையொட்டி பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு…

2 hours ago

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்! 8வது ஊதிய கமிஷனுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

டெல்லி : மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியம், அலவன்ஸ், ஓய்வூதியம் உள்ளிட்ட மற்ற சலுகைகள் தொடர்பான முடிவுகள் பற்றி ஆய்வு…

2 hours ago

‘இந்தியன் 3 வேலை ஆரம்பிக்கப்போறோம்’…இயக்குநர் ஷங்கர் கொடுத்த அப்டேட்!

சென்னை : நம்ம பிரமாண்ட இயக்குநர் ஷங்கருக்கு என்னதான் ஆச்சு? என்கிற வகையில், தொடர்ச்சியாக அவர் இயக்கும் படங்கள் தோல்வி அடைந்து…

2 hours ago