ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவோம் என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.
பாஜக ஆட்சிக்கு வந்தால், வெளிநாடுகளில் இருக்கும் கறுப்புப்பணம் அனைத்தும் மீட்கப்பட்டு, இந்தியர்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் தலா 15 லட்சம் ரூபாய் விகிதம் செலுத் தப்படும் என்று 2014 மக்களவைத் தேர்தலின்போது, நரேந்திர மோடி வாக்குறுதி அளித்திருந்தார்.
ஆட்சிக்கு வந்தபின், 2016-ஆம் ஆண்டு, நவம்பர் 8-ஆம் தேதி இரவு திடீரென 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்த மோடி, இது கறுப்புப் பணம், கள்ளப்பணத்தை வெளிக்கொண்டு வரும் நடவடிக்கை என்று மக்களிடம் கூறினார்.
ஆனால், மோடி ஆட்சிக்கு வந்த நான்கரை ஆண்டுகள் முடிந்த நிலையிலும், பணமதிப்பு நீக்கத்தை அறிவித்தும் இரண்டாண்டுகள் ஆன பின்பும் இதுவரை, கறுப்புப் பணம் எவ்வளவு மீட்கப்பட்டுள்ளது; எத்தனை இந்தியர்களின் வங்கிக் கணக்கில் ரூ. 15 லட்சம் செலுத்தப்பட்டது என்ற விவரங்களை பிரதமர் மோடி வெளியிட்டதாக தெரியவில்லை.
இந்நிலையில் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே இந்தியர்களின் வங்கிக் கணக்கில் ரூ. 15 லட்சம் செலுத்தப்படுவது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவோம்.ஒரே தவணையில் அல்ல, மெல்ல மெல்ல. ஆர்.பி.ஐயிடம் கேட்டிருக்கிறோம் ஆனால் தர மறுக்கிறார்கள். ஏதோ தொழில்நுட்ப பிரச்சினைகள் என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 டி20 மற்றும்…
டெல்லி : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களுக்கு இடையே உள்ளஆண்டுகளில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான…
சென்னை : அமெரிக்காவின் ஹூஸ்டன் மாநகரத்தில் 1927ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும்…
சென்னை : நேற்று மத்திய அரசு கல்வி உரிமை சட்டத்தில் (RTE) ஒரு முக்கிய திருத்தத்தை கொண்டு வந்தது. அதன்படி,…
சென்னை : வழக்கமாகவே படங்களில் வரும் காட்சிகளை மட்டும் பிரமாண்டமாக எடுக்காமல் படத்தில் இடம்பெறும் பாடல்களையும் பிரமாண்டமாக எடுப்பவர் தான் பிரம்மாண்டத்திற்கு…
சென்னை : மறைத்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 37-வது ஆண்டு நினைவு நாள் இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 24) அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து,…