நம் நாட்டு நிதி நிலைமையை சரிகட்டவும், பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டுவரவும் ரிசர்வ் வங்கியிடம் இருந்து உபரி நீதியை வருடந்தோறும் ஆகஸ்ட் மாதம் மத்திய அரசானது பெறுவது வழக்கம்.
இந்த உபரி நிதி மற்ற நாடுகளில் 14% வைத்திருக்கப்படும். நம் நாட்டின் உபரி நிதி அளவானது 28 சதவீதமாக உள்ளது. இந்த உபரி நிதியை மத்திய அரசு கோரி இருந்ததால் தான் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சுர்ஜித் படேல் ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. அதன்பின்னர் நம் நாட்டில் எவ்வளவ உபரி நிதியை வைத்துக் கொள்ளலாம் என வரையறுக்க மத்திய அரசானது, இதனை கலந்தாலோசிக்க முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் பீமல் ஜாலான் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவானது, கடந்த வருடம் டிசம்பர் முதல் ஆய்வு மேற்கொண்டது.
இந்த ஆய்வின் முடிவுகளை பீமல் ஜாலான் தலைமையிலான குழு, கடந்த 14-ம் தேதி ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைத்தது. இதனை நேற்று மும்பையில் ரிசர்வ் வங்கியின் முக்கிய நிர்வாகிகளுடன் ரிசர்வ் வங்கியின் இயக்குனர்கள் கலந்தாலோசித்து உபரி நிதியை மத்திய அரசுக்கு கொடுக்க ஒப்புதல் வழங்கினர்.
இதன்மூலம் 2018 – 2019 ஆம் ஆண்டில் கிடைக்கப்பெற்ற ஒரு லட்சத்து 23 ஆயிரம் கோடி ரூபாயும், மாற்றியமைக்கப்பட்ட பொருளாதார முதலீட்டு வழிகாட்டுதலின்படி கண்டறியப்பட்ட உபரி நிதி 53 ஆயிரம் கோடி ரூபாயும் சேர்த்து ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் நிதி மத்திய அரசுக்கு வழங்கப்பட உள்ளது.
இந்த ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் பல தவணைகளாக ரிசர்வ் வங்கியிடமிருந்து மத்திய அரசு பெற உள்ளது. இதன் மூலம் உள்நாட்டு உற்பத்தி பற்றாக்குறை 3.3 சதவீதமாக தக்கவைக்கப்படும என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி அளித்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…