புதிய 10 ரூபாய் நோட்டுகளை விரைவில் விநியோகிக்க ரிசர்வ் வங்கி முடிவு!
புதிய 10 ரூபாய் நோட்டுகள், சாக்லேட் நிறத்தை அடிப்படையாக கொண்டும், கோனார்க் தங்க கோவிலின் படத்துடனும் அச்சடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, 1 பில்லியன் 10ரூபாய் நோட்டுக்களை அச்சடித்துவிட்டதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. புதிய 10 ரூபாய் நோட்டுகளை விநியோகம் செய்வதற்கான மத்திய அரசின் ஒப்புதலை பெற்றுள்ளது ரிசர்வ் வங்கி.
கடந்த ஆகஸ்ட் மாதம் புதிய 200 மற்றும் 50 ரூபாய் நோட்டுக்களை விநியோகித்த ரிசர்வ் வங்கி, போலி நோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்தவே புதிய ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடுவதாக தெரிவித்துள்ளது.
2016 நவம்பர் மாதம், இந்திய அரசால், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த நிலையில், 17.9 ட்ரில்லியன் ரூபாய் நோட்டுகள் சுழற்சியில் இருந்தது.
இதையடுத்து, புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து விநியோகம் செய்தது. அதன்பின்னர், ரூபாய் நோட்டுகளின் புழக்கம் 11.1 % அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை இன்னும் எண்ணி முடிக்கவில்லை என ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது.
source: dinasuvadu.com