ரிசர்வ் வங்கி வங்கிகள் கொடுத்த கடன் உத்தரவாதக் கடிதங்கள் தொடர்பான விவரங்களை அளிக்க உத்தரவு…
ரிசர்வ் வங்கி வங்கிகள் கொடுத்த கடன் உத்தரவாதக் கடிதங்கள் தொடர்பான விவரங்களை அளிக்க உத்தரவிட்டுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் மூலம் போலி உத்திரவாதக் கடிதம் பெற்று 11 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக மோசடி செய்ததாக வைர வியாபாரி நீரவ் மோடி மீது வழக்கு நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து வேறு பலரும் வங்கி உத்தரவாதக் கடிதம் பெற்று மோசடி செய்தது தொடர்பான புகார்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. இந்நிலையில் நாடு முழுவதும் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்த கடன் உத்தரவாதக் கடிதம் தொடர்பான விவரங்கள், கடன் வரம்புக்கான ஒப்புதல், இன்னும் திருப்பிச் செலுத்தப்படாமல் இருக்கும் தொகை உள்ளிட்ட விவரங்களை தாக்கல் செய்ய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.