ரிசர்வ் வங்கி, வங்கிகள் கடன் பொறுப்பேற்புக் கடிதம் வழங்கும் நடைமுறையைக் கைவிட முடிவெடுத்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு காரணமாக இத்தகைய கடுமையான முடிவை ரிசர்வ் வங்கி எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், அங்கீகாரம் பெற்ற இறக்குமதியாளர்களுக்கு, கடன் பொறுப்பேற்புக் கடிதம் வழங்கும் நடைமுறையை கைவிட முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிரவ் மோடியின் மோசடி அம்பலமானதை அடுத்து பல வங்கிகள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் வர்த்தக பரிவர்த்தனைகளுக்கு கடன் பொறுப்பேற்புக் கடிதம் வழங்குவதை ஏற்கனவே நிறுத்திவிட்டன.
இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மூலம், கடன் பொறுப்பேற்புக் கடிதம் வழங்கும் நடைமுறையை வங்கிகள் முற்றிலுமாக கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கடன் பொறுப்பேற்பு கடிதங்களை நம்பி இறக்குமதி செய்து வரும் நிறுவனங்களும், வர்த்தகர்களும் நேரடியாக பாதிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…