பண மழையில் ஜியோ! அமெரிக்க நிறுவனத்துக்கு தனது 1% பங்கை 5,655 கோடிக்கு விற்றுவிட்டது.!
அமெரிக்காவை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் ஜியோவின் 1% பங்கை சுமார் 5,655.75 கோடிக்கு வாங்கியுள்ளது .இரண்டு வாரத்திற்கு முன்னர் தான் பேஸ்புக் நிறுவனம் ஜியோவின் 10% பங்கை 45,000 கோடிக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது .
இந்த ஒப்பந்தத்திற்கு இரண்டு வாரத்திற்கு முன்னர் தான் பேஸ்புக் நிறுவனம் ஜியோவில் 9.9% பங்கை சுமார் 45,000 கோடிக்கு வாங்கியது . இந்த பேஸ்புக் – ஜியோ வின் ஒப்பந்தம் 2014 ஆண்டில் பேஸ்புக் வாட்ஸ்ப்பை 22 பில்லியனுக்கு வாங்கியதை விட மிகப்பெரிய தொகை என்பது குறிப்பிடத்தக்கது.
“சில்வர் லேக் நிறுவனமானது, தொழில்நுட்பம் மற்றும் நிதி ஆகியவற்றில் மிகவும் மதிக்கப்படும் நிறுவனமாகும். இந்தியாவின் தொழிநுட்ப சமூகத்தில் மாற்றத்திற்கான அவர்களின் உலகளாவிய தொழில்நுட்பம் சார்ந்த நுண்ணறிவுகளை பயன்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,” என்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சில்வர் லேக் நிறுவனம் ஜியோவின் 1% பங்கை சுமார் 5,655.75 கோடிக்கு வாங்கியுள்ளது .சில்வர் லேக் சுமார் 40 பில்லியன் டாலர் சொத்து மதிப்புகளை கொண்டுள்ளது. இது உலகின் சிறந்த தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த படைப்புகளை உருவாக்க பல முதலீடுகளை செய்துள்ளது .இதில் மிகப்பெரிய நிறுவனங்களான அலிபாபா,டெல் டெக்னாலஜிஸ், ட்விட்டர் மற்றும் பல உலகளாவிய தொழில்நுட்ப தலைவர்கள் இதில் உள்ளனர் .
பிராட்பேண்ட் இணைப்பு, ஸ்மார்ட் சாதனங்கள், கிளவுட் மற்றும் எட்ஜ் கம்ப்யூட்டிங், பிக் டேட்டா அனலிட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, ஆகிய தொழில்நுட்பங்களால் இயங்கும் ஜியோ உருவாக்கிய உலகத் தரம் வாய்ந்த டிஜிட்டல் தளத்திற்கு சில்வர் லேக்கின் முதலீடு முக்கிய பங்காக பார்க்கப்படுகிறது.