ஏடிஎம்மில் பணம் எடுப்பவர்களுக்கு ஓர் நற்செய்தி! இனி அனாவசிய கட்டணம் ஏதும் கிடையாது!
ஏடிஎம்மில் பணம் மூன்று முறைக்கு மேல் எடுத்தால் வங்கியிலிருந்து சேவை கட்டணமாக குறிப்பிட்ட தொகை எடுக்கபட்டு விடும். அதிலும் மற்ற வங்கி ஏடிஎம்களில் பணம் எடுத்தால் அதிகமாக சேவை கட்டணம்.
மேலும், சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சில சமயம் பணம் ஏடிஎம்மில் பணம் இல்லை என்றாலும் பணம் எடுத்ததாக குறுந்செய்தி வந்துவிடும். இதனை தடுக்க தற்போது புதிய விதிமுறைகளை ஆர்பிஐ கொண்டு வந்துள்ளது.
இதன்படி பணம் எடுக்காமல் பணம் எடுத்து போல குறுஞ்செய்தி வர கூடாது. அதே போல ஏடிஎம்மில் பணம் எடுத்தால் அதில் கட்டணம் வசூலிக்க கூடாது என பல விதிமுறைகளை ஆர்பிஐ விதிக்க உள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும்!