ரஃபேல் போர் விமான ஊழல் …!விவரத்தை வெளியிட அரசுக்கு உத்தரவிட வேண்டும்..!உச்சநீதிமன்றத்தில் மனு
ரஃபேல் போர் விமானம் வழங்கியது பற்றி விசாரிக்கக் கோரி வழக்கு 2 பேர் தாக்கல் செய்தனர்.
ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில், நாட்டின் பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸை, திட்டமிட்டே வெளியேற்றிவிட்டு, அந்த இடத்தில் ‘ரிலையன்ஸ் டிபென்ஸ்’ இணைக்கப்பட்டு இருப்பதாகவும், இதில் ரூ. 40 ஆயிரம் கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றது.இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட், நாட்டின் பாதுகாப்புக்கான தளவாடங்கள் தயாரிப்பில் 70 ஆண்டுகள் அனுபவம் கொண்ட நிறுவனம் எனும்போது, வெறும் 5 லட்ச ரூபாய் முதலீட்டில், ஆரம்பித்து 1 மாதம் மட்டுமே ஆகக்கூடிய ‘ரிலையன்ஸ் டிபென்ஸ்’ எவ்வாறு, ரபேல் விமான ஒப்பந்தத்திற்கு தகுதி பெற்றது என்ற கேள்விகளையும் தலைவர்கள் எழுப்பி வருகின்றனர். ஆனால், மத்திய பாஜக அரசிடம் தற்போது வரை தெளிவான பதில் அளிக்கவில்லை.
ஆரம்பத்தில், பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட்-டின் கூட்டு நிறுவனமாக ரிலையன்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டது தங்களுக்கே தெரியாது; அதற்கும் தங்களுக்கும் சம்மந்தம் இல்லை என்று பாஜக சார்பில் தெரிவித்தனர்.
பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி பிரான்காய்ஸ் ஹாலண்டே இது தொடர்பாக கூறுகையில், இந்திய அரசு கூறியதன் அடிப்படையில்தான் பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் நிறுவனத்தின் கூட்டு நிறுவனமாக ‘ரிலையன்ஸ் டிபென்ஸ்’ நிறுவனத்தை இணைத்தோம்” என்று உறுதிப்படுத்தினார்.
“போர் விமான ஒப்பந்தத்தில் உதிரிபாகங்களை தயாரிப்பதற்கு இந்தியாவின் சார்பில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் மட்டுமே சிபாரிசு செய்யப்பட்டது; எங்களுக்கு வேறு வாய்ப்பு எதுவும் அளிக்கப்படவில்லை” என்று தெரிவித்தார்.
இந்நிலையில் ரஃபேல் போர் விமானம் வழங்கியது பற்றி விசாரிக்கக் கோரி வழக்கு 2 பேர் தாக்கல் செய்தனர்.இந்த வழக்கை உச்சநீதிமன்றம் நாளை மறுநாள் விசாரிக்கிறது என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. போர் விமான கொள்முதல் விவரத்தை வெளியிட அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.