60-க்கும் மேற்பட்ட அமைப்புகள் தங்களது சொத்துகளை விற்க தடை!
தேசிய நிறுவனங்கள் சட்டத் தீர்ப்பாயம், பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி விவகாரத்தில் நீரவ் மோடி, மெகுல் சோக்சி போன்ற தனிநபர்கள், கம்பெனிகள், எல்எல்பிக்கள் உட்பட 60-க்கும் மேற்பட்ட அமைப்புகள் தங்களது சொத்துகளை விற்க தடைவிதித்துள்ளது.
பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம் நிறுவன சட்டத் தீர்ப்பாயத்துக்கு அளித்த மனுவைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கில்லி இந்தியா,கீதாஞ்சலி ஜெம்ஸ்,நக்ஷத்ரா பிராண்ட்ஸ், ஃபயர்ஸ்டார் டயமண்ட், சோலார் எக்ஸ்போர்ட்ஸ், ஸ்டெல்லார் டயமண்ட்ஸ் போன்ற நிறுவனங்களின் சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன. தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களைச் சேர்த்து மொத்தமாக 64 அமைப்புகளின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான விசாரணைக்காக சம்பந்தப்பட்ட அமைப்புகள் மற்றும் நபர்கள் மார்ச் 26-ம் தேதி அன்று நிறுவனங்கள் சட்டத் தீர்ப்பாயத்தில் ஆஜராக வேண்டுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.