பிரபல இணைய தள விற்பனை நிறுவனமான மைன்ட்ரா அதிகபட்சமாக நிமிடத்திற்கு 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.
இன்று இணையம் வழியாக சமையல் பொருட்கள் முதல் நாம் அணியும் உடை வரை அனைத்துமே ஆன்லைன் நிறுவனங்கள் மூலம் பெற முடிகிறது. அந்த வகையில் 5 நாட்களில் 32 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு 1.1 கோடி பொருட்களை விற்பனை செய்துள்ளது. பிரபல இணைய தள விற்பனை நிறுவனமான மகேந்திரா அதிகபட்சமாக நிமிடத்திற்கு 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏறக்குறைய 4.3 கோடி தனித்துவமானவர்கள் இந்த தளத்தை பார்வையிட்டு, 54% புதிய வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கி உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த தளத்தில் பெண்களின் மேற்கத்தி உடைகள் 2.5 மில்லியனுக்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. பெண்களின் மேற்கத்திய உடைகள் தவிர ஆண்கள் ஜீன்ஸ் மற்றும் உடைகள் சாதாரண மற்றும் விளையாட்டு பாதணிகள் என வாடிக்கையாளர்கள் அதிகமாக வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்த ஒட்டுமொத்த ஆர்டர்கள் திட்டத்திற்கு 48% ஆண்கள் நுகர்வோருக்கும், 52% பெண்கள் நுகர்வோருக்கும் வழங்கப்பட்டுள்ளது. விற்பனை பட்டியலில் டெல்லி, பெங்களூரு, மும்பை, ஹைதராபாத் மற்றும் புனே முதலிடத்திலும், லக்னோ, பாட்னா, ஜெய்ப்பூர், டெஹ்ராடூன், எர்ணாகுளம் மற்றும் நாசிக் ஆகியவை 2-வது மற்றும் 3-வது இடத்திலும் உள்ளது.
குஜராத்: இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட…
ராமேஸ்வரம்: தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கையின் தொடர் கைது நடவடிக்கை, மீனவ குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மீண்டும், எல்லை தாண்டி…
சென்னை: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு தண்டையார்பேட்டை மெட்ரோ ரயில் சுரங்க…
தெலங்காணா: கடந்த டிசம்பர் 4-ம் தேதி 'புஷ்பா 2' சிறப்பு காட்சியின் திரையிடலின் போது, சந்தியா திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட…
டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…
கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை,…