போன்பே QR கோட் எரிக்கப்பட்டதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை… பே.டிஎம் விளக்கம்.!

Default Image

போன்பே QR கோட் எரிக்கப்பட்டதற்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என பேடிஎம் விளக்கம் அளித்துள்ளது. 

இந்தியாவில் பிரபலமாக இருக்கும் பண பரிவர்த்தனை ஆப்களில் மிக முக்கியமானவைகளில் போன்பே மற்றும் பேடிஎம் முக்கியமானவை.

இதில் போன்பே முன்னாள் ஊழியர்கள் சிலர் போன் பே QR கோட்-களை எறித்ததாக அவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டு இருந்தது. தற்போது அவர்கள் பேடிஎம் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகின.

இது குறித்து, பதிலளித்துள்ள பேடிஎம், எங்களுக்கும் இந்த சம்பவத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த பிரச்னை அந்த ஊழியர்களுக்கும், அவர்களின் முன்னாள் முதலாளிக்குமானது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துவிட்டு,சம்பந்தப்பட்ட ஊழியர்களை நாங்கள் சஸ்பெண்ட் செய்துவிட்டோம் .

இப்படிப்பட்ட எந்தவொரு தவறான நடத்தையையும் நாங்கள் பொறுத்து கொள்ள மாட்டோம். பணி நெறிமுறைகளின் எப்போதும்  தரத்துடன் இருக்கிறோம். QR குறியீடு பரிவர்த்தனையில் நாட்டின் முன்னோடியாக Paytm உள்ளது. இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பில் Paytm இருப்பதில் பெருமை கொள்கிறது. என தங்கள் தரப்பு விளக்கத்தை பேடிஎம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்