ஜெய்ப்பூரில் 100 ரூபாயை தாண்டியது பெட்ரோல் விலை..!!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.100 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை நிர்ணயித்துக்கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி,தினமும் பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.
இந்நிலையில், இன்று (27.05.2021) வியாழக்கிழமை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை 16 பைசா உயர்ந்து ரூ.100.05க்கும், ஒரு லிட்டா் ரூ.93.36 க்கும் விற்பனையாகி வருகிறது. மேலும் மகாராஷ்டிர மாநிலத்தின் தானேவில் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100.06க்கும், டீசல் ரூ.99.94க்கும் விற்பனையாகி வருகிறது.