பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண்டும் என்பதே எனது விருப்பம் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. இதனால் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வந்த எண்ணெய் நிறுவனங்கள் நாளுக்கு நாள் அதன் விலையை அதிகரித்து வந்தது .
இதனிடையே கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. லிட்டருக்கு ரூ.80-ஐ தாண்டியுள்ள பெட்ரோல் விலையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ஆனால் மத்திய அரசு அளித்த விளக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவாலேயே பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது என்று தெரிவித்தது.
இந்நிலையில் இது தொடர்பாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண்டும் என்பதே எனது விருப்பம். ஜிஎஸ்டி கவுன்சிலில் மத்திய அரசை விட மாநில அரசுகளுக்கே அதிக அதிகாரம் உள்ளது .பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை சில மாதங்களுக்கு முன்னர்தான் மத்திய அரசு குறைத்தது என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…