பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.1.50 குறைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. இதனால் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வந்த எண்ணெய் நிறுவனங்கள் நாளுக்கு நாள் அதன் விலையை அதிகரித்து வந்தது .
இதனிடையே கடந்த சில வாரங்களாகாவே பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை எட்டியது.லிட்டருக்கு ரூ.85-ஐ தாண்டியுள்ள பெட்ரோல் விலையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ஆனால் மத்திய அரசு அளித்த விளக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவாலேயே பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது என்று தெரிவித்தது.
இந்நிலையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது .பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து பிரதமருடனான ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி,பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.1.50 குறைக்கப்படும் அறிவித்தார்.இந்த வரி குறைப்பு உடனடியாக அமலுக்கு வருவாதாவும் அறிவித்தார். மேலும் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலையினை 1 ரூபாய் வரை குறைக்கும் என்றும் தெரிவித்தார்.
பெட்ரோலிய பொருட்கள் மீதான உற்பத்தி வரி ரூ.1.50 குறைக்கபடுவதால் சாமானிய மக்களுக்கு லிட்டருக்கு ரூ.5 வரை பலன் கிடைக்கும்.தற்போதைய பொருளாதார நிலையை அரசு மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறது .ரூபாய் மதிப்பு சரிவை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் இந்த முடிவினால் நாளை முதல் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலை 2.50 ரூபாய் வரை குறைய உள்ளது.
புதுச்சேரி : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று (டிசம்பர் 28) புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ்சாலையில்,…
மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும் "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம்…
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…