பெட்ரோல், டீசல் விலை பலமடங்கு உயர அதிக வாய்ப்பு!
சவூதி அரேபியா நாட்டில் உள்ள பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி ஆலை தாக்கப்பட்டதால் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயர வாய்ப்பிருக்கிறது என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
அதாவது, சவுதி அரேபியா நாட்டில் கச்சா எண்ணெய் அலை தாக்கப்பட்டதால் அந்நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தி பாதியாக குறைந்தது. இதன்மூலம் சர்வதேச அளவில் பெட்ரோல் விலை கடுமையாக உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சவூதி அரேபியாவில் இருந்து தினமும் 98 லட்சம் பேரல் பெட்ரோல் வெளிநாடுகளுக்கு உற்பத்தி செய்யப்படும். அப்படி பெட்ரோல் வாங்குவதில் இந்தியா தான் அதிகமாக இறக்குமதி செய்கிறது. இதனால் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது பிராண்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரல், 67 டாலரில் இருந்து 80 டாலராக உயர்ந்துள்ளது.