பெட்ரோல்,டீசல் விலை உயர்வு.!
சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 90.96 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 84.16ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது.ஊரடங்கால் மே வரை மாற்றமின்றி விற்பனையான பெட்ரோல், டீசல் விலையானது ஜூன் முதல் அதிகரித்து வந்தது .இதனால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி இருந்தனர் .
கடந்த 6, 7 மற்றும் 8-ஆம் தேதிகளில் விலை மாற்றமின்றி விற்பனையான பெட்ரோல், டீசல் விலையானது 9-ஆம் தேதியில் இருந்து மீண்டும் உயரத் தொடங்கியது.
அதன்படி நேற்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 90.70ரூபாயும்,டீசல் விலை லிட்டருக்கு 83.86ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று காலை முதல் இரண்டின் விலையும் உயர்ந்துள்ளது.அதாவது சென்னையில் இன்று காலை முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு 26 காசுகள் உயர்ந்து 90.96 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 30 காசுகள் அதிகரித்து 84.16 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.