பெட்ரோல்,டீசல் விலை தொடர்ந்து உயர்வு.!

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 92.25ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 85.63 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது.கடந்த 6, 7 மற்றும் 8-ஆம் தேதிகளில் விலை மாற்றமின்றி விற்பனையான பெட்ரோல், டீசல் விலையானது 9-ஆம் தேதியில் இருந்து கிடுகிடுவென மீண்டும் உயரத் தொடங்கியது.
அதன்படி நேற்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 91.98ரூபாயும்,டீசல் விலை லிட்டருக்கு 85.31ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று காலை முதல் இரண்டின் விலையும் உயர்ந்துள்ளது.அதாவது சென்னையில் இன்று காலை முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு 27 காசுகள் உயர்ந்து 92.25 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 32 காசுகள் அதிகரித்து 85.63ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.இதனால் வாகன ஓட்டிகள் இடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இன்று இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…வெப்பநிலை இப்படிதான் இருக்கும்! வானிலை மையம் தகவல்!
April 5, 2025
‘தமிழ்நாட்டில் கால் வை பார்க்கிறேன்’..எச்சரித்த வைகோ…பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்!
April 5, 2025