பெட்ரோல், டீசல் விலை உயர்வு..! இன்றைய விலை நிலவரம் இதோ.!

Default Image

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர லிட்டருக்கு ரூ.97.91-க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.04-க்கு விற்பனை செய்யபடுகிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை நிர்ணயித்துக்கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, தினமும் பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

இந்தியாவில் கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, மக்களின் அன்றாட வாழ்க்கை பாதித்துள்ள நிலையிலும்,பெட்ரோல்,டீசல் விலையானது ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில், நேற்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.97.69க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.91.92க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று உயர்ந்துள்ளது, அதன்படி இன்று பெட்ரோல் லிட்டருக்கு 22 காசுகள் அதிகரித்து லிட்டர் ரூ97.91க்கும் , டீசல் விலை லிட்டருக்கு 12 காசுகள் அதிகரித்து ரூ.92.04க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்