பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ .8.5 குறைக்க முடியும் – ஆய்வாளர்கள் கருத்து இதோ
பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டுதான் செல்கிறது குறைந்தபாடில்லை.இதில் சிலிண்டர் விலை இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது.
கடந்த ஒன்பது மாதங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக அதிகரித்ததன பின்னர் மிக உயர்ந்த அளவில் உள்ளது. நுகர்வோர் மீதான சுமையை குறைக்க கலால் வரியைக் குறைக்க எதிர்க்கட்சிகளும் சமூக அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் இந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலையேற்றத்தை பற்றி கூறியுள்ள மதிப்பீட்டாளர்கள், அரசானது வரியிலிருந்து வருவாய் வசூலிக்கும் இலக்கை பாதிக்காமல் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ .8.5 வரை குறைக்க அரசுக்கு வாய்ப்பு உள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
வாகன எரிபொருட்களுக்கான கலால் வரியை FY22 இல் மதிப்பிடுகிறோம் (ஏப்ரல் 2021 முதல் மார்ச் 2022 வரை) நீங்கள் அதை குறைக்கவிட்டாலும் ரூ 4.35 லட்சம் கோடியாக கிடைக்கும் , பட்ஜெட் மதிப்பீடு 3.2 லட்சம் கோடி ரூபாய் இருக்கிறது.
ஆகவே, ஏப்ரல் 1, 2021 அல்லது அதற்கு முன்னதாக கலால் வரி லிட்டருக்கு ரூ .8.5 குறைக்கலாம் அவ்வாறு குறைப்பதினால் வரியின் மூலம் கிடைக்கும் வருவாயில் எந்தவித பாதிப்பும் இருக்காது , என்று ஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட்டீஸ் தெரிவித்து இருப்பதாக ஒரு குறிப்பில் பி.டி.ஐ. குறிப்பிட்டுள்ளது.
மார்ச் 2020 முதல் 2020 மே வரை பெட்ரோல் மற்றும் டீசல் மீது கலால் வரி லிட்டருக்கு ரூ .13 மற்றும் ரூ .16 உயர்த்தப்பட்டது, இப்போது டீசலுக்கு ரூ .31.8 ஆகவும், பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூ .32.9 ஆகவும் உள்ளது.