ரூபாய் 90யை தாண்டியது பெட்ரோல் ..!!
சென்னை,
பெட்ரோல்-டீசல் விலை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்த மாற்றம் செய்யப்படுகிறது. சென்னையில் நேற்று பெட்ரோல் விலை 23 காசுகள் அதி ரித்து ஒரு லிட்டர் ரூ.86.51 ஆக உயர்ந்தது. நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.86.28-க்கு விற்கப்பட்டது. கடந்த 19-ந்தேதி பெட்ரோல் விலை ரூ.85.41 ஆக இருந்தது. 9 நாளில் ஒரு ரூபாய் 10 காசுகள் அதிகரித்துள்ளது. பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே புதிய உச்சத்தை எட்டி யுள்ளது. டீசல் விலையில் 20 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.78.69-க்கு விற்கப்படுகிறது. நேற்று ஒரு லிட்டர் டீசல் ரூ.78.49 ஆக விற்கப்பட்டது. டீசல் கடந்த 19-ந்தேதி 78.10 ஆக இருந்தது. 9 நாளில் 59 காசுகள் அதிகரித்துள்ளது. டெல்லியில் டீசல் ரூ.74.42-க்கும், பெட்ரோல் ரூ.83.22-க்கும் விற்கப்படு கிறது. மும்பையில் கடந்த 24-ந்தேதியே பெட்ரோல் ரூ.90-ஐ தாண்டியது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU