பேடிஎம் விவகாரம்… தேசிய கட்டணக் கழகத்திற்கு உத்தரவிட்ட ரிசர்வ் பேங்க்.!
Published by
மணிகண்டன்
கூகுள் பே (Google Pay), போன் பே (Phonepe) போன்ற UPI பரிவர்த்தனை செயலிகள் மூலம் பயனர்கள் தங்கள் வங்கி கணக்குகளை இணைத்து அதன் மூலம் பரிவர்த்தனைகளை மிக எளிதாக கையாண்டு கொள்ள முடியும். அதுபோல ஒரு செயலி தான் PayTM செயலியும் செயல்பட்டு வந்தது.
ஆனால் மேற்கண்ட மற்ற செயலிகளிடம் இருந்து பேடிஎம் செயலி மாறுபட்டது. இதில் ஒரு அக்கவுண்ட் உண்டு. அதிலும் நாம் பணம்ஏற்றிக்கொண்டு அதனை தனி கணக்காக, சுருக்கமாக சொல்வதென்றால் ஒரு மினி பேங்க் அக்கவுண்ட் போல செயல்படுத்தி கொள்ளலாம்.
அங்கு தான் பேடிஎம்க்கு பிரச்சனை ஆரம்பித்தது. என்றால் வங்கி செய்யக்கூடிய செயலை அதற்குரிய அனுமதியின்றி பேடிஎம்செயல்படுத்தி வந்ததை கண்டு ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா அதற்கு தடை விதித்தது. வரும் மார்ச் 24, 2024க்கு பின்னர் PayTM Payments Bank மூலம் வாடிக்கையாளர்களிடம் பணம் பெற தடை விதித்துள்ளது. இதற்காக பெரும் தொகை அபராதமும் விதிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, Paytm செயலியின் தாய் நிறுவனமான One97 Communication Ltd (OCL) மூலம் ரிசர்வ் பேங்க்கிற்கு ஒரு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Paytm செயலி UPI பரிவர்த்தனை மேற்கொள்ள அனுமதிக்க அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதனை தொடர்ந்து, Paytm செயலி UPI சேனலை பயன்படுத்தி வங்கி பரிவர்த்தனை மேற்கொள்ள ஆய்வு செய்யுமாறு இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இன்று இந்திய தேசிய கட்டணக் கழகத்தை (NPCI) கேட்டுக்கொண்டது.
அதன் மூலம் PayTM Payments Bankஇல் கணக்கு வைத்து இருக்கும் வாடிக்கையாளர்களின் கணக்குகளை அதிக பரிவர்த்தனை கொண்டுள்ள 4-5 வங்கிகளுடன் “@paytm” என்ற பெயருடன் இணைத்து மற்ற வங்கிகளுடன் UPI பரிவர்த்தனை மேற்கொள்ள ஏதுவான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டது.