வெளிநாடு செல்லத் கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது தடை விதிக்க வாய்ப்பு!
தொழிலதிபர்கள் 91 பேர் வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்தாத வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
பொதுத்துறை வங்கிகளில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன்பெற்ற பெருந்தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் நாட்டைவிட்டு வெளியேறி வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் வங்கிகளில் பெருந்தொகை கடன் வாங்கிவிட்டு, அதை திருப்பிச் செலுத்தாதவர்களின் பட்டியலை அரசு தயாரித்துள்ளது.
அதுபோல் ஐம்பது கோடி ரூபாய்க்கு மேல் கடன்பெற்றவர்களின் கடவுச் சீட்டு விவரங்களை வங்கிகள் கேட்டுப் பெற்று வருகின்றன. கடனைத் திருப்பிச் செலுத்தத் தகுதி இருந்தும் செலுத்தாத நானூறு நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. கடனைத் திருப்பிச் செலுத்தாத நிறுவனங்களில் இயக்குநர்கள், உரிமையாளர்களாக உள்ள 91 பேரின் பட்டியலும் தயாரிக்கப்பட்டுள்ளது. நாட்டை விட்டு வெளியே செல்ல அவர்களுக்குத் தடை விதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.