ஆட்டோமொபைலை தொடர்ந்து அடுத்ததாக ஆட்குறைப்பில் இறங்கும் பிஸ்கட் நிறுவனம்!
அண்மையில் ஆட்டோமொபைல் நிறுவனம் விற்பனை வெகுவாக குறைந்ததால் அவர்கள் கட்டாய விடுப்பு எடுக்க ஊழியர்களை கட்டயப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகின. அதே போல ஆட்குறைப்பில் ஈடுபட போவதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், தற்போது பிஸ்கட் மீதான வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், குறைந்த விலை பிஸ்கெட்டுக்கும் இதே வரி இருப்பதால் பிஸ்கெட்டின் விற்பனை விலை அதிகரிக்கபட்டதால், விற்பனை வெகுவாக குறைந்தது. என பார்லி பிஸ்கட் நிறுவனம் தகவல்கள் தெரிவித்துள்ளது.
மேலும், குறைந்த விலை பிஸ்கெட் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைக்க முடிவு எடுத்துள்ளதாகவும், அவர் இதனை மத்திய அரசு கருத்தில் எடுத்துக்கொள்ளாவிடில், நூற்றுக்காணாக்கனவர்கள் வேலை இழக்கும் சூழல் உருவாகும் என பார்லி நிறுவனம் சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.