இந்திய பங்குசந்தை இன்றும் உயர்வுடன் தொடங்கியுள்ளது.சற்று முன் வரை இந்திய பங்கு சந்தை 33601.04 உயர்வுடன் காணப்பட்டது. இது தான் இந்திய பங்கு சந்தையின் அதிக உயர்வுடன் காணப்படுகிறது.நேற்றைய முடிவில் பங்கு சந்தை 33600 உயர்வுடன் இருந்தது. மொத்தம் […]
நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா(SBI) கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இதன்படி வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் 5 பைசா குறைத்து ஆண்டுக்கு 8.30 சதவீதமாக நிர்ணயம் செய்துள்ளது. இதுபோல், வாகன கடனுக்கான ஆண்டு வட்டி விகிதம் 8.75 சதவீதத்தில் இருந்து 8.70 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. இந்த வட்டி குறைப்பானது நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்ததுவிட்டது. இதன் மூலம் கடன் பெறுவோர் எண்ணிக்கை அதிகமாகும் […]
இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஏறியுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதில் மானியம் அல்லாத சமையல் சிலிண்டர் ரூ.93 உயர்த்தப்பட்டு ௧௪.2 கிலோ மானியம் அல்லாத சிலிண்டர் 7௪2ஆகவும் அதேபோல் மானிய சிலிண்டர் ரூ. 4.50 உயர்த்தப்பட்டு ௪95.69ஆகவும் நிர்ணயம் செய்துள்ளன. இந்த விலை உயர்வானது புதன்கிழமை (நவ.1) முதல் அமலுக்கு வந்துள்ளது.அதேபோல் 19 கிலோ வணிக சிலிண்டரின் விலையும் புதன்கிழமை முதல் ரூ.1,310.50 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல எண்ணெய் நிறுவனங்கள், பிரதி மாதம் 1-ம் […]
தொழில் புரிவதற்கு சாதகமான சூழல் உள்ள நாடுகளின் பட்டியலானது உலக வங்கியால் செவ்வாய்க்கிழமை அன்று வெளியிட்டது. அந்த பட்டியலில் இந்தியா 100-வது இடத்தைப் பிடித்தது இதுவே முதல் முறை ஆகும். இதனால் நேற்றைய வர்த்தகத்தில் இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தைத் தொட்டன. நேற்றய வர்த்தகத்தின் முடிவில் சென்செக்ஸ் 387 புள்ளிகள் உயர்ந்துள்ளது. இதனால் சென்செக்ஸ் 33600 புள்ளியில் முடிவடைந்தது. இதற்கு முன் சென்செக்ஸ் 33266 புள்ளிகளில் முடிவடைந்தது அதிகபட்சமாக இருந்தது. அதேபோல் நிப்டியும் 105 புள்ளிகள் உயர்ந்து […]
மக்களின் அத்தியாவசிய பொருள்களான சர்க்கரை மற்றும் மானிய சமையல் சிலிண்டர் விலை உயர்த்தபட்டது.இநிலையில் அது இன்று முதல் அமலுக்கு வருகிறது. மானிய சமையல் சிலிண்டர் விலை ரூ.4.58 உயர்ந்து ரூ.483.69 ஆக இன்று முதல் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. வீட்டு உபயோகத்துக்கான மானியம் அல்லாத சிலிண்டர் மற்றும் சர்க்கரை விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. சென்னையில் வீட்டு உபயோகத்துக்கான மானியம் அல்லாத சிலிண்டரின் விலை நவம்பர் 1-ஆம் தேதி புதன்கிழமையான இன்று முதல் […]
நடப்பு நிதியாண்டில் தற்போது இரண்டாவது காலாண்டு வரை எண்ணெய் மற்றும் எரிவாயு கார்ப்ரேஷன் (ONGC) நிறுவன நிகர லாபம் 3.1 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே நடப்புநிதியாண்டில் இரண்டாவது காலாண்டில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.5,131 கோடியாக இருக்கிறது. கடந்த நிதியாண்டில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் நிகர லாபமானது ரூ.4,975 கோடியாக இருந்தது. வெளிநாட்டு சந்தை கணிப்பு நிறுவனமான நொமுரா, ஓஎன்ஜிசி நிறுவனம் இரண்டாவது காலாண்டில் ரூ.4,070 கோடியை நிகர லாபமாக ஈட்டும் என்று கணித்திருந்தது. ஆனால் கணிதத்தை விட […]
இத்தாலி பிரதமர் பாலோ ஜென்டிலோனி மற்றும் அவரது மனைவியுடன், அரசு முறை பயணமாக இந்தியா வந்தார். அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்ப்பு அளிக்கப்பட்டது. குடியரசு தலைவர் மாளிகையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து,பின் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இரு நாடுகளுக்கு இடையில் வர்த்தக உறவை மேம்படுத்தும் வகையில் வர்த்தகம், எரிசக்தி, தொழில் மேம்பாடு போன்ற துறைகளில் ஒப்பந்தங்கள் அமைய உள்ளன. இருநாடுகளுக்கும் இடையேயான அரசியல் மற்றும் பொருளாதார உறவை மேம்படுத்துவது குறித்து […]
உலக அளவில் புகழ் பெறுவது சாதாரண காரியம் இல்லை .அந்த அளவில் உலக பணக்காரர் பட்டியலை வருடம்தோறும் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வருடத்திற்கான உலகத்தில் முதல் இடத்தில உள்ள பணக்காரர் பட்டியல் வெளியிடபட்டது.இதில் இந்த ஆண்டும் கடந்த ஆண்டு முதல் இடம் பிடித்த அமேசான் நிறுவனர் ஜெப் போசோஸ் இந்த ஆண்டும் அவர் தான் முதல் இடம் பிடித்துள்ளார். ஆய்வு முடிவில் இவர் தான் முதல் இடத்துக்கு வந்துள்ளார் .அமேசான் மிகவும் உலக அளவில் பிரபலம் […]
ஐசிஐசிஐ வங்கியின் நிகர லாபம் நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டு முடிவில் 30 சதவீதமாக சரிந்துள்ளது இந்த லாபம் ரூபாய்.2,071 கோடியாக உள்ளது. வாராக்கடன் அதிகரித்ததன் காரணமாக செப்டம்பர் காலாண்டில் நிகர லாபம் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே காலாண்டில் ஐசிஐசிஐ வங்கியின் நிகர லாபம் கடந்த நிதியாண்டில் 2,979 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. நடப்பு காலாண்டில் ஜுலை முதல் செப்டம்பர் மாதம் வரை ஐசிஐசிஐ வங்கியின் மொத்த வருமானம் ரூபாய்.30,191 கோடியாக சரிவு ஏற்பட்டுள்ளது. […]
நஷ்டத்தில் இயங்கும் 34 பொதுத்துறை நிருவனங்களை தனியாருக்கு விற்க நிதி அயோக் பரிந்துரை செய்துள்ளது. கிரைஸில் இந்தியாவால் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் பேசும்போது நிதி ஆயோக் சிஇஓ அமிதாப் காந்த் இதனைக் தெரிவித்தார். இந்த மாநாடு உள்கட்டமைப்பு சார்ந்து அமைக்கப்பட்டது. அவர் மேலும் கூறுகையில்: நட்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை தொடர்ந்து இயக்குவது குறித்து பிரதமர் அலுவலகத்துக்கு கருத்து கேட்கப்பட்டது. இதனையடுத்து நிதி ஆயோக் சில பரிந்துரைகளை தெரிவித்துள்ளது. குறிப்பாக நட்டத்தில் இயங்கி வரும் 34 பொதுத்துறை […]
தற்போது உலகில் பெரும்பாலானோர் உபயோகிக்கும் செயலியாக உருவெடுத்து வருகிறது WHATSAPP. இந்நிறுவனம் அவ்வபோது தனது செயலியை புதுபித்து கொண்டு வருகிறது. இந்நிலையில் அடுத்ததாக தனது செயலியில் புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அதன்படி இனி நாம் அனுப்பும் செய்திகள் தவறாக மாற்றி அனுப்பி விட்டால் அதனை கண்டு பயப்பட தேவை இல்லை ஏனென்றால் இனி அப்படி தவறுதலாக அனுப்பப்பட்ட தகவல்களை 7 நிமிடத்துக்குள் அழித்துவிடலாம், இது அந்த செய்தியை அனுப்பியவர் பெற்றவர் என இருவருக்கும் அந்த செய்தி […]
பங்கு சந்தை நிலவரமானது அவ்வபோது ஏற்ற இறக்கதோடு தான் உள்ளது.ஆனால் இன்று தொடக்கக் முதலே ஏற்றதுடன் காணப்பட்டது வர்த்தக தொடக்கத்தில் இந்திய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 33,000 புள்ளிகளை தாண்டி சாதனை படைத்துள்ளது. நிப்பிடி 54 புள்ளிகள் உயர்ந்து 10,262 புள்ளிகளாக உள்ளது. இதுதான் இந்திய வர்த்தக மையத்தின் அதிக பட்ச புள்ளிகள் ஆகும்.
பங்குச்சந்தை வர்த்தகர்கவாசிகளுக்கு 1987-ம் ஆண்டு மறக்க முடியாத ஆண்து தான். 30 வருடத்துக்கு முன்பு 1987-ம் ஆண்டு அக்டோபர் 19-ம் தேதி அமெரிக்க பங்குச்சந்தை கடுமையான உருவானது. 1929-ம் ஆண்டு சர்வதேச பெரு மந்த நிலை ஏற்பட்ட போது உருவான சரிவை விட இது அதிகம். 1987-ம் ஆண்டு ஒரே நாளில் டோ ஜோன்ஸ் 22.6 சதவீதம் சரிவு ஏற்பட்டது. இதற்கு முன்னும், பின்னும் இவ்வளவு பெரிய சரிவு பங்குச் சந்தைகளில் உருவானது இல்லை. இதற்க்கு காரணம், […]
வங்கிகளுக்கு புதிய கட்டுப்பாடு மத்திய அரசு அறிவிப்பு . ரூ.50,000க்கும் மேல் டெபாசிட் செய்தால் அசல் ஆவணம் கட்டாயம் . இனி வங்கியில் ரூ.50,000க்கும் மேல் பணத்தை டெபாசிட் செய்வது, புதிதாக வங்கி கணக்கு தொடங்குவது, கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கு வாடிக்கையாளர்கள் தங்கள் அடையாள ஆவணத்தின் அசலை எடுத்துச் செல்ல வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பங்குச்சந்தை முகவர்கள், சீட் நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகள், வீட்டு கடன் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றிற்கும் இந்த உத்தரவு பொருந்தும். புதிதாக வங்கி […]