வெங்காய விலை மீண்டும் ஏறுமுகமாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த சின்ன வெங்காயம் வரத்து குறைந்துள்ளதால் அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சேலத்தில் லீ பஜார் மொத்த வியாபார மார்கெட்டில் நேற்று ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.57 முதல் ரூ.87 வரை இருந்தது. இந்த சின்ன வெங்காயம் 5 தரமாக பிரித்து விற்பனை நடந்து வருகிறது. இந்த விலை ஏற்றதால் சேலம் சில்லறை மார்கெட்டில் கிலோ 80 முதல் 110 வரை விற்க்கபடுகிறது. source : […]
இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 காசுகள் சரிந்து ரூ.64.18 காசுகளாக உள்ளது. வங்கிகள் மற்றும் இறக்குமதியாளர்களிடையே அமெரிக்க டாலரின் தேவை சரிந்துள்ளது, உலகளவில் மற்ற நாணயங்களுக்கு எதிரான டாலரின் வலிமை மற்றும் உள்நாட்டு பங்குச்சந்தையில் காணப்படும் உயர்வு போன்ற காரணங்களால் இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு காணப்படுவதாக அந்நிய செலாவணி விநியோகஸ்தர் தெரிவித்துள்ளார். தற்போது வரை பங்கு சந்தை நிலவரம் 34,091.77 ஆகும் .. […]
இன்றைய தங்கம் விலை நிலவரம் : 22 காரட் ஆபரண தங்கம் : 1 கிராம்- Rs.2,765/- 1 சவரன்- Rs.22,120/- 24 காரட் தூய தங்கம் : 1 கிராம்- Rs.2,903/- 1 சவரன்- Rs.23,224/- இன்றைய வெள்ளி விலை நிலவரம் : 1 கிராம்- Rs.40.70/- 1 கிலோ- Rs.40,700/- source : dinasuvdu.com
இன்றைய பங்கு சந்தை சற்று உயர்ந்துதான் முடிந்துள்ளன. அதன்படி பங்குச்சந்தைகளின் விவரமானது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 70.31 புள்ளிகள் உயர்ந்து 34,010.61 புள்ளிகளுடன் முடிவடைந்தது. தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 38.50 புள்ளிகள் உயர்ந்து, 10,531 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்துள்ளது. source : dinasuvadu.com
விளைச்சல் அதிகரித்துள்ளதான் காரணமாக, தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தக்காளி மார்கெட்டில் ஒரு கிலோ தக்காளியின் விலை 3 ரூபாய் வரை சரிந்துள்ளது. பாலக்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பொப்பிடி, பெல்ரம்பட்டி, மாரண்டஅள்ளி, பேகாரஅள்ளி ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு தக்காளி விலை அதிகம் இருந்ததால், நடப்பு ஆண்டு விவசாயிகள் அதிக அளவில் தக்காளி பயிரிட்டிருந்தனர். அத்துடன் நல்ல மழையும் பொழிந்ததால் தக்காளி விளைச்சல் அமோகமாக இருந்தது. இதன்காரணமாக, […]
புதிய உச்சத்தில் மும்பை பங்குச்சந்தை நிலவரம்.மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 65.07 புள்ளிகள் உயர்ந்து 34000 என்ற நிலையில் வர்த்தகம் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 22.10 புள்ளிகள் உயர்ந்து 10,515.10 என்ற நிலையில் வர்த்தகம்.. நேற்றைய முடிவில் மும்பை பங்குசந்தை நிலவரம் 33,940.30 ஆகும் .தற்போது வரை மும்பை பங்கு சந்தை ஏற்றத்துடன் உள்ளது .அதுவும் சுமார் 65.07 புள்ளிகள் உயர்வுடன் உள்ளது .இது முதலீட்டார்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . source: dinasuvadu.com
தங்கம், வெள்ளி சந்தையில் இன்றைய மாலை நேர முடிவின் படி ஒரு கிராம் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.2,755-க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.8 அதிகரித்து, ரூ.22,040-க்கும், மேலும், 24 காரட் தூய தங்கம் ஒரு கிராமுக்கு, ரூ.2893-க்கும், ஒரு சவரன் தூயதங்கம் ரூ.23,144-க்கும் விற்க்கபடுகிறது. அதேபோல் ஔ கிராம் வெள்ளி ரூ.40.10-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.40,100-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு விற்க்கபடுகிறது. source : dinasuvadu.com
பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள உலக பொருளாதார அமைப்பின் கூட்டத்தில் கலந்துகொள்கிறார். ஜனவரி 22-ஆம் தேதி சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் சுமார் 100 பெருநிறுவனத் தலைவர்களும், தொழில்துறை வல்லுநர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். கடந்த 1997-ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் தேவகவுடா உலக பொருளாதார அமைப்பின் கூட்டத்தில் கலந்துகொண்ட நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பின் உலக பொருளாதார அமைப்பின் கூட்டத்தில் கலந்துகொள்ளும் முதல் பிரதமர் நரேந்திர மோடியாவார். source: […]
இன்றைய நிலவரபடி பெட்ரோல் மற்றும் டீசல் விலைகுறித்து எண்ணெய்நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி பெட்ரோல் விலை 10 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ருபாய் 72.19 காசுகளாகவும்,டீசல் நேற்றைய விலையிலிருந்து 9 காசுகள் உயர்ந்து ரூபாய் 62.36 காசுகளாகவும் உள்ளன .இந்த விலை இன்று (டிசம்பர்.25 ) காலை 6 மணிமுதல் அமலுக்கு வந்தது. source-
எந்த ஒரு பொதுத்துறை வங்கியையும் மூடும் திட்டமில்லை – ரிசர்வ் வங்கி .சமூக வலைதளங்களில் வங்கிகளை மூடுவதாக பரவும் தகவல் உண்மையில்லை – ரிசர்வ் வங்கி விளக்கம் source: dinasuvadu.com
கடந்த வாரம் பிட்காயின் exchange-ல் ஈடுபடும் 9 நிறுவனங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது. இதில் கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் வரை வரி ஏய்ப்பு செய்த பணத்தை பிட்காயினில் முதலீடு செய்திருப்பதாக தெரியவந்துள்ளது. இதில் 22 ஆயிரம் பேருக்கு மேல் தமிழர்கள் என கூறப்படுகிறது. இந்நிலையில் பிட்காயின் என்றால் என்ன? அதில் இருக்கும் ஆபத்து மற்றும் ஆதாயம் பற்றி அலசுகிறது இத்தொகுப்பு. 2009ம் ஆண்டும் அறிமுகப்படுத்தியபோது 25 டாலராக இருந்த பிட்காயினின் மதிப்பு தற்போது 18,000 […]
தங்கம் வெள்ளி சந்தையில், இன்றுகாலை வரை நிலவரம் 22 காரட் ஆபரண தங்கம் 1கிராம் விலை ரூ.2,740-க்கும், ஒரு சவரன் ரூ.16 குறைந்து, ரூ.21,920-க்கும்,மேலும், 24 காரட் தங்கம் ரூ.2,877-க்கும், ஒரு சவரன் ரூ.23,016-க்கும் விற்க்கபடுகிறது. ஒரு கிராம் வீள்ளியின் விலை ரூ.40.10-க்கும், பார்வெள்ளி 1 கிலோ ரூ.40,100-க்கும் விர்க்கபடுகிறது.
எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பெட்ரோல் விலை 8 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு விலை 72.03 ரூபாயாக உள்ளது. டீசல் விலை 6 காசுகள் உயர்ந்து, 62.05 ரூபாயாக உள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமல்படுத்தப்பட்டது.
2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், பங்குச் சந்தையில் சன் டிவியில் பங்கு விலைகள் ஏற்றம் கண்டுள்ளன. சன் டிவி நெட்வொர்க் பங்குகள் 6 சதவீதம் வரை ஏற்றம் கண்டன. source: dinasuvadu.com
மும்பையில் இன்று முதல் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள் 24 மணிநேரமும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே உள்ள சட்டத்தின்படி மும்பையில் கடைகள் இரவு பத்துமணி வரையும், உணவகங்கள் இரவு 12:30 மணி வரையும் திறந்திருக்க அனுமதி இருந்தது. இரவிலும் பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருவது, இரவில் பயணம் மேற்கொள்வோரின் வசதி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கடைகள், வணிக நிறுவனங்கள் 24மணிநேரமும் செயல்படுவதற்கு ஏற்ற வகையில், கடந்த ஆகஸ்டு மாதம் புதிய சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்தச் […]
வடகொரியாவுக்கு மேலும் நெருக்கடி தரும் விதமாக ஜப்பான் அரசு வடகொரியாவின் மீது மீண்டும் பொருளாதாரத் தடை விதித்துள்ளது. இதனால் வடகொரியாவின் 19 நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் சொத்துக்கள் முடக்கப்படும் என ஜப்பான் அறிவித்துள்ளது. ஜப்பானின் இந்தப் புதிய நெருக்கடியால் வடகொரியாவில் இருக்கும் பெரிய வர்த்தகர்கள் பெரும் அளவில் பாதிக்கப்படும் .
இந்திய பங்குச்சந்தையின் இன்று சரிந்து காணப்பட்டது. அதே போல் இந்திய ரூபாயின் மதிப்பும் சரிந்து காணபடுகிறது. அன்னிய செலவாணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 காசுகள் குறைந்து, 64.45 ஆக உள்ளது. நேற்று இந்திய ரூபாயின் மதிப்பு 64.37 ஆக இருந்தது.
உற்பத்தி துறையின் வளர்ச்சியானது, நவம்பர் மாதம் அதிகரித்து காணபடுகிறது. கடந்தாண்டு நவம்பரில் கொண்டு வரப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின் தற்போது வளர்ச்சி வேகமாக உள்ளது என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இதனை தொடர்ந்து வெளியாகியுள்ள தகவல்களின்படி, பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் உற்பத்தி துறையில் தேக்கம் இருந்தது. இருப்பினும் புதிய ஒப்பந்தங்கள் காரணமாக உற்பத்தித் துறை வேகமாக தேக்கத்திலிருந்து மீண்டு வந்துள்ளது. தேவைகள் அதிகரித்துள்ளதன் காரணமாக உற்பத்தி துறையின் வளர்ச்சி தொடர்ந்து நான்கு மாதங்களாக ஏற்றம் கண்டு வருகிறது. […]
இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு நிகராக இன்று காலை 10 காசுகள் சரிந்ததால் 64.51 ஆக இருந்தது. சர்வதேச சந்தையில் வங்கிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அதிகமாக டாலர்களை வாங்கியதால் டாலரின் தேவை அதிகரித்தது. அதனால் டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 10 காசுகள் சரிந்து காலை நேர நிலவரத்தின்ப்படி, 64.51 ரூபாயாக இருந்தது.
ஜீஎஸ்டி அமலுக்கு பின் உள்ளீடு பொருட்களின் விலை ஏற்றத்தால் குளிர்சாதன பொருட்களின் விளையும் 3% முதல் 4% வரை உயர வாய்ப்புள்ளது. உற்பத்தியாளர்கள் சில மாதங்களுக்கு முன்பே விலையை உயர்த்த திட்ட்டமிட்டனர். ஆனால் அது ஜிஎஸ்டி வந்ததால் சாத்தியப்படவில்லை எனவே ரீடேயில் கடைகாரர்கள் தீபாவளியின் போது முடிந்த வரை விற்று விட்டனர். மேலும் அடுத்த விலை உயர்வை எதிர்நோக்குகின்றனர். ஸ்டீல், காப்பர் போன்ற பொருட்களின் விலை வுயர்ந்து வருவதால் குளிர்சாதன பொருட்களான ஏ.சி, ப்ரிட்ஜ் போன்ற பொருட்களின் […]