பெட்ரோல்,டீசல் விலை நாளுக்குநாள் உயர்ந்து வருவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.இந்நிலையில் இது குறித்து வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் . பெட்ரோல் விலையைத் தீர்மானிப்பது 2010ஆம் ஆண்டும், டீசல் விலையைத் தீர்மானிப்பது 2014ஆம் ஆண்டும் அரசின் கட்டுப்பாட்டில் இருந்து எண்ணெய் நிறுவனங்களின் கைக்குச் சென்றன. 2013-2014ஆம் ஆண்டில் பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரிமூலம் மத்திய அரசுக்கு ஒரு லட்சத்துப் பத்தாயிரம் கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இதில் 80ஆயிரம் கோடி ரூபாயைப் பெட்ரோலியப் பொருட்களுக்கான மானியமாகச் செலவிட்டது போக 30ஆயிரம் […]
இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பால் உற்பத்தித்திறனில் பல நூறு கோடி டாலர்கள் அளவுக்கு பெரும் இழப்பு ஏற்படும் என ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. புற்றுநோய் பரவல் தொடர்பான ஆய்விதழில், புற்றுநோயால் மனித வளத்திற்கு ஏற்படும் பாதிப்புகள், இதனால் உற்பத்தித் திறனில் ஏற்படும் இழப்பு பற்றிய ஆய்வுக் கட்டுரை வெளியாகியுள்ளது. அதன்படி, கடந்த 2012ஆம் ஆண்டில், புற்றுநோய் பாதிப்பால் இந்தியா 6.7 பில்லியன் டாலர்கள் அளவுக்கு உற்பத்தித் திறன் இழப்பை சந்தித்துள்ளது. இது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.36 சதவீதமாகும். […]
இந்திய பொருளாதாரம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்து வரும் நிலையில் தற்போது அது குறித்த ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது . நாட்டின் பொருளாதார நிலையை ஆய்வுசெய்து அறிக்கையாக வழங்கும், பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஓராண்டில் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான பொருளாதார சீர்திருத்தங்களால், வரும் நிதியாண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 7 முதல் 7.5 சதவீதம் வரை உயரும் என பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், உலகின் மிகவேகமாக வளரும் பொருளாதாரம் என்ற பெயரை […]
இந்திய பங்கு சந்தையில் முதலீடுகள் அதிகம் முதலீடு செய்ததால் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது . அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 13 காசுகள் உயர்ந்து 63.65 ரூபாயாக இருந்தது. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இந்திய பங்குச்சந்தைகளில் முதலீடு செய்து வருகின்றன. இதன் தாக்கத்தால் டாலர் மதிப்பு குறைந்து, இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்தது. இன்றைய காலை நேர வர்த்தகத்தின்படி, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து […]
எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு பெட்ரோல் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. பெட்ரோல் – டீசல் விலை தினமும் நிர்ணயிக்கப்படும் நிலையில் சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 ரூபாய் 12 காசுகளாகவும் டீசல் விலை 66 ரூபாய் 84 காசுகளாகவும் உள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு சென்னையில் பெட்ரோல் விலை அதிகபட்சமாக 74 ரூபாய் 91 காசுகளைத் தொட்ட நிலையில் அதைவிட அதிகமாக தற்போது உயர்ந்துள்ளது. டெல்லியில் இன்று பெட்ரோல் விலை […]
உலகப் பொருளாதார மன்றத்தின் ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அருண் ஜேட்லி, சுரேஷ் பிரபு, பியுஷ் கோயல் உள்ளிட்ட 6 மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகருக்கு சென்றார். உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில் 190 நாடுகளின் தலைவர்கள், நிறுவன சி.இ.ஓ.க்கள், வணிக வல்லுநர்கள் என 2 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். நேற்று டாவோஸ் நகருக்குச் சென்ற பிரதமர் மோடி, 60 நிறுவனங்களின் சி.இ.ஓ.க்கள் பங்கேற்ற வட்ட மேசை ஆலோசனையில் கலந்து […]
இந்தியா பாகிஸ்தான் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது காஷ்மீர் எல்லை பிரச்சினை மற்றும் கிரிக்கெட் போட்டி தான் இந்நிலையில் இந்தியாவை பாகிஸ்தான் பொருளாதார ரீதியாக பின்னுக்குத்தள்ளியுள்ளது. வாழ்க்கைத்தரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வருங்கால தலைமுறை திட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் வளர்ந்து வரும் பொருளாதார நாடுகள் பட்டியலை உலக பொருளாதார கூட்டமைப்பு தயாரித்துள்ளது. இந்த பட்டியலில் கடந்த ஆண்டு 60 வது இடத்தில் இருந்த இந்தியா 62வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதே வேளையில் இந்தியாவின் அண்டை நாடுகள் பெரும்பாலானவை இந்த பட்டியலில் முன்னிலை […]
அமெரிக்காவை முடக்கிய ‘ஷட்டவுனுக்கு’ வந்தது தீர்வு அளிக்கும் விதமாக தற்காலிக நிதியளிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவில் அக்டோபர் முதல் செப்டம்பர் வரை நிதியாண்டாக கணக்கிடப்படுகிறது.அதன்படி 2018-ம் ஆண்டுக்கான நிதியாண்டு கடந்த அக்டோபர் 1-ம் தேதி தொடங்கியது.அரசு துறைகளுக்கு நிதி ஒதுக்க அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் செலவின மசோதா நிறைவேற்றப்படுகிறது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடப்பு 2018 நிதியாண்டுக்கான (அக்டோபர் முதல் செப்டம்பர்) பட்ஜெட் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக இதுவரை நிறைவேறவில்லை. அமெரிக்காவில் 7 […]
உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று, முதலீடுகளை ஈர்க்க எடுத்துள்ள நடவடிக்கைகளும் முதலீட்டாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் இன்று காலை புதிய உச்சத்தை தொட்ட இந்திய பங்குச்சந்தைகள்.. இன்றைய வர்த்தகத்தின் துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 36 ஆயிரம் புள்ளிகளை கடந்தது. தேசிய பங்குச்சந்தையான நிஃப்டியும் 11 ஆயிரம் புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை எட்டியது. உலகப் பொருளாதார வளர்ச்சி குறித்து டாவோஸ் நகரில் வெளியிடப்பட்ட அறிக்கையின் தாக்கத்தால் சந்தையில் சாதகமான […]
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த டிசம்பரில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான பெரும் வரிக்குறைப்பை அறிவித்தார். இதன் தாக்கத்தால் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி வேகம் பிடிக்கும் என கருதப்படுகிறது. அமெரிக்காவின் வரிக்குறைப்பு நடவடிக்கைகளால் வரவிருக்கும் நிதியாண்டில் உலகளாவிய பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என உலகப் பொருளாதார மன்றம் கணித்துள்ளது. சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் வெளியிடப்பட்ட அறிக்கையில், 2018-19ம் ஆண்டுகளில் உலக பொருளாதார வளர்ச்சி 3.9 ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது கடந்த அக்டோபர் மாத கணிப்பைக் காட்டிலும் […]
சுவிட்சர்லாந்தில் மறுதினம் நடைபெறும் சர்வதேச அளவிலான பொருளாதார மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார். சர்வதேச பொருளாதார மாநாடு சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நாளை நடக்கிறது. 70 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் இம்மாநாடு 5 நாட்கள் நடக்கிறது. 38 பன்னாட்டு நிறுவனங்களில் தலைவர்கள், உலக வர்த்தக அமைப்பு, உலக வங்கி, சர்வதேச செலாவணி நிதியம் ஆகியவற்றின் தலைவர்கள் இதில் கலந்து கொள்கின்றனர். இம்மாநாட்டின் துவக்க நிகழ்ச்சி நாளை துவங்குகிறது. இதன்மூலம், சுமார் 20 ஆண்டுகளுக்கு பின் டாவோஸ் […]
வருமான வரி சட்டத்தில் பிரிவு 24, 80C, 80EE ஆகியவற்றின் படி திரும்ப செலுத்துப்படும் வீட்டுக் கடனில் அசல் மற்றும் வட்டி ஆகிய இரண்டிற்கும் வரி விலக்கு, சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு அளிக்கப்படுகிறது. இந்த வரிச் சலுகை குடியிருப்பு சொத்து மீது மட்டுமே பெறக் கூடியது. இரண்டு பேர் இணைந்து சொத்து வாங்கும் பொழுது, இரண்டு பேருமே இணை உரிமையாளர் மற்றும் இணைந்து கடன் வாங்கியவர்களாக இருந்தால் மட்டுமே வரிச் சலுகை பெற முடியும். வீடு குடியேறிய […]
வீடு விலை குறைகிறதா? நைட்பிராங்க் ரியல் எஸ்டேட் ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் வெளியான நைட்பிராங்க் ரியல் எஸ்டேட் ஆய்வு அறிக்கை 2011 ரியல் எஸ்டேட் வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது சென்னையில் வீட்டு விற்பனை 56 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக மதிப்பிட்டுள்ளது. இந்திய ரியல் எஸ்டேட் தொடர்பாக ஆண்டுதோறும் ஆய்வுகள் மேற்கொண்டு வரும் இந்நிறுவனத்தின் அறிக்கை கடந்த வாரம் வெளியானது. முடிவடைந்த 2017 அரையாண்டில் இந்திய அளவில் ரியல் எஸ்டேட் எப்படி இருந்தது என்பதை இந்த அறிக்கை ஆய்வுசெய்கிறது. இந்திய அளவிலும் […]
இந்திய அளவில் வீட்டுமனை,ரியல் எஸ்டேட் மிகவும் வருமானம் உள்ளதாகவும் ,விலை அதிகமாகவும் உள்ள துறை ஆகும்.எனவே சர்வதேச நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை மனைகளின் மதிப்பு சரிந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது . சர்வதேச அளவில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் நைட் பிரான்க் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைச் சட்டம் மற்றும் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை அமல்படுத்தியதால் இந்த சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது. நாட்டிலேயே மிக அதிகமாக புனேவில் வீட்டு மனைகளின் விலை 7 விழுக்காடு […]
வங்கி பரிவர்த்தனைக்கும் கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாக சமூக ஊடகங்களில் வதந்தி பரவியதையடுத்து மத்திய அரசு இதை திட்டவட்டமாக மறுத்துள்ளது . ஒவ்வொரு வங்கி பரிவர்த்தனைக்கும் கட்டணம் வசூலிக்கப்பட்ட இருப்பதாக சமூக ஊடகங்களில் பரவிய தகவலை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. வங்கிகளில் வாடிக்கையாளர்கள் ஜனவரி 20-ம் தேதி முதல் மேற்கொள்ளும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கட்டணம் வசூலிக்கப்பட்ட இருப்பதாக வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலமாக தகவல்கள் பரவி வருகின்றன. இதற்கு பதிலளித்துள்ள இந்திய வங்கிகள் கூட்டமைப்பு […]
பல்வேறு துறைகளில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில், அன்னிய நேரடி முதலீடு தொடர்பான கொள்கைகளை மறுபரிசீலனை செய்த மத்திய அமைச்சரவை, ஒற்றை பிராண்ட் சில்லறை வர்த்தகத்தில் 100 சதவீதம் வரை அன்னிய முதலீட்டை மேற்கொள்ள இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. ஒற்றை பிராண்ட் சில்லறை வர்த்தகத்துக்கு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 49 சதவீத அன்னிய முதலீட்டுக்கு அனுமதியளிக்கப்பட்ட நிலையில், தற்போது 100 சதவீத அன்னிய முதலீட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், கட்டுமானத்துறையிலும் 100 சதவீத அன்னிய முதலீட்டுக்கும் மத்திய […]
தொடர்ந்து ஆறாவது ஆண்டாக உலக விமான உற்பத்தி சந்தையில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. போயிங் நிறுவனத்திற்கு கடும் போட்டியாளராக திகழும் ஏர் பஸ் தனது விற்பனை விவரங்களை இன்னும் தெரிவிக்கவில்லை என்றாலும், அது போயிங்கைக் காட்டிலும் குறைவாகவே இருக்கும் என கூறப்படுகிறது. போயிங் தனது போட்டியாளரான ஏர் பஸ் நிறுவனத்தை முந்துவதற்கு முக்கிய துருப்புச்சீட்டாக, 787 டிரீம்லைனர் என்ற விமான ரகத்தை கருதுகிறது. ஒவ்வொரு மாதமும் இவ்வகையைச் சேர்ந்த 12 விமானங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் ஏர்பஸ் […]
பாரத ஸ்டேட் வங்கியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், பணியிடத்தில் ஆடைக்கட்டுப்பாடு உள்ளிட்ட ஒழுக்கம் சார்ந்த நடைமுறைகள் குறித்த அறிவுறுத்தல்கள் இடம்பெற்றுள்ளன. இதில் முக்கிய குறிப்பாக அலுவலக ஊழியர்கள் மற்றம் சேவை மைய அதிகாரிகள், வாடிக்கையாளர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது பெரிதாக ஏப்பம் விடவேண்டாம் எனக் கூறப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் இடையூறாக உணர நேரிடும் என்றும், சிறிய அளவிலான ஏப்பம் எனில் பிரச்சனை இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. source: dinasuvadu.com
கடந்த நான்கு நாள் வர்த்தகத்தில் குறியீடு 650 புள்ளிகளாக உயர்ந்துள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 122.44 புள்ளிகள் உயர்ந்து 34,565.63 புள்ளிகளாக உள்ளது. சுகாதாரம், ரியல் எஸ்டேட், தொழில்நுட்பம், எண்ணெய் & எரிவாயு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை அதிகரித்திருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 18.50 புள்ளிகள் அதிகரித்து 10,655.50 புள்ளிகளாக உள்ளது. ஓஎன்ஜிசி, கோல் இந்தியா, பார்தி ஏர்டெல், சன் […]
உலக பொருளாதார மாநாட்டில் பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் சந்திக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் வரும் 22ஆம் தேதி உலக பொருளாதார மாநாடு நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கும் நிலையில், சுமார் 18 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க அதிபரும் இதில் உரையாற்றவுள்ளார். இந்த மாநாட்டில் அமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் சென்று பங்கேற்கும் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்து, இருதரப்பு உறவுகள், […]