மத்திய நிதித்துறை செயலாளர் ஹஸ்முக் ஆதியா தெரிவித்துள்ளதில் இதனிடையே, பங்குச் சந்தை சரிவுக்கு LTCG எனும் நீண்ட கால முதலீட்டு ஆதாய வரி காரணமல்ல என மறுப்பு தெரிவித்துள்ளார். உலகளவில் அனைத்து நாடுகளின் சந்தையும் கடந்த வாரத்தில் 3 புள்ளி 4 சதவீதம் சரிவை சந்தித்ததாக கூறினார். அதன் தாக்கமே இந்திய சந்தைகளிலும் எதிரொலிப்பதாக அவர் விளக்கம் அளித்தார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
பட்ஜெட்டில் நீண்டகால முதலீடுகளுக்கு 10 சதவீத வரி விதிக்கப்பட்டதையடுத்து இந்தியப் பங்குச் சந்தைகள் சரிவைச் சந்தித்தன. இந்திய பங்குச்சந்தைகள் இன்றும் சரிவைச் சந்தித்தன. சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு அதிகமாக சரிவைச் சந்தித்தது. பட்ஜெட்டில் நீண்டகால முதலீடுகளுக்கு 10 சதவீத வரி விதிக்கப்பட்டதையடுத்து இந்தியப் பங்குச் சந்தைகள் சரிவைச் சந்தித்தன. இந்நிலையில் இந்த சரிவு காரணமாக் வெளிநாட்டு முதலீடுகளிலும் பாதிப்புகள் ஏற்பட்டன. மேலும் ஆசிய பங்குச் சந்தை சரிவுகளும் இந்திய பங்குச் சந்தைகளில் எதிரொலித்தது. கடந்த வெள்ளிக்கிழமை சென்செக்ஸ் […]
பிரதமர் நரேந்திர மோடி வடகிழக்கு மாநிலங்களின் நிலையான மற்றும் வேகமான மேம்பாடுகளின் மூலம், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி வேகமெடுக்கும் என தெரிவித்திருக்கிறார். அசாம் மாநிலம் கவுஹாத்தியில்(Guwahati) Advatage Assam என்ற தலைப்பில் நடைபெறும் உலக முதலீட்டாளர் மாநாட்டினை தொடங்கி வைத்து உரையாற்றிய பிரதமர் இவ்வாறு கூறியிருக்கிறார். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம், ஒவ்வொரு ஏழையின் உயர் சிகிச்சைக்கான மருத்துவக் கனவையும் பூர்த்தி செய்யும் உலகின் மிகப்பெரிய மருத்துவ சேவைத் திட்டம் என்றும் மோடி தெரிவித்திருக்கிறார். அசாம் […]
ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு தேதியை தேர்வு செய்தால் குழப்பம் ஏற்படும் நிலையில் உள்ளது சரக்குப் போக்குவரத்துக்கான ஈ– வே பில் முறை. ஒரே மாநிலத்துக்கு உள்ளும், மாநிலங்களுக்கு இடையேயும் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சரக்குகளுடன் பயணிக்க இ-வே-பில் (e-way Bill) எனப்படும் போர்டல் மூலம் இணையவழி ரசீதுக்கு பதிவு செய்ய வேண்டும். இந்த முறையில், அனுப்பப்படும் சரக்கு, வாகனம் பற்றிய விபரங்கள், வரி மதிப்பு, ஜிஎஸ்டி உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் அந்த போர்டல் பதிவில் குறிப்பிட […]
ஜி.எஸ்.டி. ஆணையர் ஒருவர் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் லஞ்சப் புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். ஜி.எஸ்.டி. ஆணையராக இருந்த சன்சார் சந்த் (Sansar Chand) என்பவர் தொழிலதிபர்களிடம் இருந்து வாரக் கணக்கிலும், மாதக் கணக்கிலும் லஞ்சம் பெறுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பான புகாரின் பேரில் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து சன்சார் சந்த் ஒருலட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றபோது கைது செய்தனர். இது தொடர்பாக இரண்டு கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட […]
விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்கா ஏர் இந்தியா நிறுவனம் இந்த ஆண்டு இறுதிக்குள் தனியார்மயமாக்கப்படும் என தெரிவித்துள்ளார். அரசுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா பெரும் நட்டத்தில் இயங்குவதாகக் கூறி அதனைத் தனியார் நிறுவனத்துக்கு விற்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏர் ஏசியா உள்ளிட்ட சில வெளிநாட்டு நிறுவனங்கள் ஏர் இந்தியாவை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதாக விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஏர் இந்தியா யாருக்கு விற்கப்படும் என்பது ஜூன் மாத இறுதியில் […]
பட்ஜெட் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தைகள் இன்று கடும் சரிவைச் சந்தித்தன. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு அதிகமாகவும், நிஃப்டி 250 புள்ளிகளுக்கு அதிகமாகவும் சரிவடைந்தன. நேற்று காலை பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முன் நன்மையளிக்கக் கூடிய அறிவிப்புகள் குறித்த எதிர்பார்ப்பின் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து உயர்ந்தன. நேற்று பட்ஜெட்டில் நீண்ட கால மூலதன ஆதாயத்திற்கு 10 சதவீத வரி விதிக்கப்பட்டதையடுத்து 300 புள்ளிகள் சரிவைச் சந்தித்த சென்செக்ஸ் பின்னர் மீண்டது. இந்நிலையில் இன்று இந்தியப் […]
மத்திய அரசு பெட்ரோல், டீசலுக்கு வசூலிக்கப்பட்டு வந்த கலால் வரியை ரத்து செய்துள்ளது. பெட்ரோல் டீசலுக்கு லிட்டருக்கு 2 ரூபாய் கலால் வரியாகவும், கூடுதல் கலால் வரியாக 6 ரூபாயும் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த இரண்டு வரிகளையும் தற்போது மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இதற்கு பதிலாக சாலை வரியாக லிட்டருக்கு 8 ரூபாய் விதிக்கப்படுகிறது. இதனால் பெட்ரோல், டீசலின் ஒட்டு மொத்த விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்பதால், நுகர்வோருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று […]
பிரதமர் நரேந்திர மோடி கூறியது , மத்திய பட்ஜெட் நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு வழிகோலும் அம்சங்களைக் கொண்டிருப்பதாக பாராட்டி உள்ளார். அனைத்துத் தரப்பினரையும் கவனத்தில் கொண்டு இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ள பிரதமர், இதன் மூலம் பொருளாதார வளர்ச்சி வேகமெடுக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வர்த்தகத்திற்கான சூழலை மட்டும் இந்த அரசு எளிதாக்கவில்லை, வாழ்வதற்கான சூழலையும் எளிதாக்கி உள்ளது என்பதை உணர்த்தும் பட்ஜெட்டாக இது அமைந்திருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்த பட்ஜெட் விவசாயிகளுக்கு […]
நிதியமைச்சர் அருண்ஜேட்லி கூறியது, பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பங்குகளை வாங்கி விற்பதன் மூலம் கிடைக்கும் லாபத்திற்கு வழங்கப்பட்டு வந்த நீண்ட கால மூலதன ஆதாயத்திற்கான விலக்கு திரும்பப் பெறப்படுகிறது. பங்குசந்தையில் பங்குகளை வாங்கி வைத்திருந்து, ஒரு வருடத்திற்கு பின்னர் விற்பதன் மூலம் கிடைக்கும் லாபத்திற்கு இதுவரை முழு வரி விலக்கு அளிக்கப்பட்டு வந்தது. இவ்வாறு ஒரு வருடம் வைத்திருந்த போதிலும் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேலான லாபத்திற்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், […]
நிதியமைச்சர் அருண்ஜேட்லி கூறியது ,பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைகளுக்கு தடை விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். பட்ஜெட்டை தாக்கல் செய்த அவர், கிரிப்டோ கரன்சிகள் இந்தியாவில் செல்லத்தக்கவை அல்ல என்றார். கிரிப்டோ கரன்சிக்களின் வளர்ச்சியை மத்திய அரசு தடுத்து நிறுத்தும் என்ற அவர், கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைகளுக்கு தடை விதிக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
பெருநிறுவனங்களுக்கான வருமான வரியானது, 250கோடி ரூபாய் வரை விற்று முதல் கொண்ட நிறுவனங்களுக்கான 25விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது. 100கோடி ரூபாய் வரை விற்றுமுதல் உள்ள வேளாண் விளைபொருள் உற்பத்தி நிறுவனங்களுக்கு 100விழுக்காடு வருமானவரிக் கழிவு அளிக்கப்படும். 50கோடி ரூபாய் வரை விற்றுமுதல்கொண்ட நிறுவனங்களுக்கு 25விழுக்காடு வரி என வழங்கப்பட்ட சலுகை, 250கோடி ரூபாய் வரை விற்றுமுதல் கொண்ட நிறுவனங்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 250கோடி ரூபாய்க்கு மேல் விற்றுமுதல் கொண்ட பெருநிறுவனங்களுக்கு வரி 30விழுக்காடாகவே இருக்கும். மூத்த குடிமக்களின் வங்கி வைப்புத் […]
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிக்கையில் இறக்குமதி செய்யப்படும் செல்போன்களுக்கான சுங்க வரி 15விழுக்காட்டில் இருந்து 20விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் செல்போன்களுக்கான சுங்க வரி இப்போது 15விழுக்காடாக உள்ளது. வரும் நிதியாண்டில் இந்த வரியை 20விழுக்காடாக உயர்த்துவதாக பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். இதனால் இறக்குமதி செல்போன்களின் விலை குறைந்தது 5விழுக்காடு உயரும் என எதிர்பார்க்கபடுகிறது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் நேற்று 35 ஆயிரத்து 965 புள்ளிகளுடன் வர்த்தக முடிந்த நிலையில் இன்று 80 புள்ளிகளுக்கும் அதிக உயர்வுடன் வர்த்தகம் தொடங்கியது இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் உயர்வுடன் தொடங்கியது.இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் அதிகபட்சமாக 36 ஆயிரத்து 151 புள்ளிகளைத் தொட்டது. அதேபோன்று நிஃப்டி நேற்று 11 ஆயிரத்து 27 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்த நிலையில் இன்று உயர்வுடன் தொடங்கி அதிகபட்சமாக 11 ஆயிரத்து 100 புள்ளிகளைத் தொட்டது. நிதியமைச்சர் அருண்ஜேட்லி இன்று பட்ஜெட்டைத் […]
சாம்சங் நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு 50க்கு ஒன்று என்ற விகிதத்தில் கூடுதலாக பங்குகளை வழங்க முடிவு செய்துள்ளது. எலெக்ட்ரானிக் சாதனங்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான சாம்சங், டிசம்பர் மாதம் வரையிலான காலாண்டில் 14 பில்லியன் டாலர் லாபத்தை ஈட்டியுள்ளது. குறிப்பாக மெமரி சிப்ஸ் தயாரிப்பில் அதிகளவு லாபம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சாம்சங் நிறுவனத்தின் முதலீட்டாளர்களின் மதிப்புகளை உயர்த்தும் வகையில் அவர்களுக்கு கூடுதலாக பங்குகளை வழங்க அந்நிறுவனம் முடிவெடித்துள்ளது. இந்த அறிவிப்பால் சந்தையில் சாம்சங் நிறுவனத்தின் பங்குகள் உச்சத்தை அடைந்துள்ளன. […]
இந்திய பங்குச்சந்தைகளில் இன்று வர்த்தகம் சரிவை சந்தித்தது.மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் இன்று சரிந்துள்ளது. மும்பை பங்குச்சந்தையில் இன்றைய காலை நேர வர்த்தகத்தில், குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 124 புள்ளிகள் சரிந்து, 35,909 புள்ளகளாக இருந்தது. அதுபோலவே தேசிய பங்குச்சந்தையில் குறியீட்டு எண்ணான நிப்டி 38.95 புள்ளிகள் சரிந்து 11,010 புள்ளிகளாக இருந்தது. நாடாளுமன்றத்தில் நாளை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், முன்னெச்சரிக்கையாக முதலீட்டாளர்கள் சந்தையை அணுகுவதாக பங்கு […]
உலக அளவில் மொத்த சொத்துகளின் அடிப்படையில் இந்திய ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. நியூ வேர்ல்டு வெல்த் என்னும் நிறுவனத்தின் அறிக்கைபடி 2017-ம் ஆண்டு அமெரிக்கா முதல் இடத்தில் இருக்கிறது. மொத்த சொத்துகளின் மதிப்பு 64,58,400 கோடி டாலர்கள் ஆகும். அடுத்த இடத்தில் சீனா (24,80,300 கோடி டாலர்) இருக்கிறது. மூன்றாவது இடத்தில் ஜப்பான் (19,52,200 கோடி டாலர்), நான்காவது இடத்தில் இங்கிலாந்தும் (9,91,900 கோடி டாலர்), ஐந்தாவது இடத்தில் ஜெர்மனி (9,66,000 கோடி டாலர்) மற்றும் ஆறாவது இடத்தில் […]
பிரிட்டன் பொருளாதார ரீதியாக கடுமையான பாதிப்புகளை சந்திக்கும் என வெளியே கசிந்த ரகசிய அறிக்கையால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பிறகும் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக, பிரிட்டன் அரசிற்காக தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கை,புஸ்பீட் ( BuzzFeed) என்ற செய்தி இணையதளத்தின் மூலம் வெளியாகியுள்ளது. அதில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் பிரிட்டன், எத்தகைய வர்த்தக ஒப்பந்தத்தை செய்துகொண்டு வெளியேறினாலும் பாதிப்பை தவிர்க்க முடியாது என கூறப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தத்தை பிரிட்டன் செய்து கொள்ளுமானால், 15 […]
இன்றைய தங்கம் விலை நிலவரம் : 22 காரட் ஆபரண தங்கம் 1 கிராம் : Rs-2,886/- 1 பவுண் : Rs-23,088/- காரட் தூய தங்கம் 1 கிராம் : Rs-3,039/- 1 பவுண் : Rs-24,312/- இன்றைய வெள்ளி விலை நிலவரம் : 1 கிராம் சில்லறை வெள்ளி : Rs-42.20/- பார்வெள்ளி 1 கிலோ : Rs-42,200/- source : dinasuvadu.com
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை எப்போது, எங்கு நடத்துவது, மாநாட்டுக்கு முந்தைய நடவடிக்கைகள், தொழில் நிறுவனங்களை ஈர்க்க உருவாக்க வேண்டிய கட்டமைப்பு பணிகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தொழில் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கான தேதியை முதல்வர் விரைவில் வெளியிடுவார் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன… கடந்த 2015-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலைமையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடத்தப்பட்டது. இதில், 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இவற்றின் மூலம் […]