கடனுக்கான வட்டி விகிதத்தைப் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா புள்ளி இரண்டு விழுக்காடு முதல், கால் விழுக்காடு வரை உயர்த்தியுள்ளது. 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குப் பின் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா முதன்முறையாகக் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. ஓராண்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 7 புள்ளி ஒன்பது ஐந்து விழுக்காட்டில் இருந்து 8புள்ளி ஒன்று ஐந்து விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுக் கடனுக்கான வட்டி விகிதம் எட்டு புள்ளி பூச்சியம் ஐந்து விழுக்காட்டில் இருந்து எட்டேகால் […]
அமலாக்கத்துறை நீரவ் மோடியின் தாய்மாமன் மெகுல் சோக்சிக்குச் சொந்தமான ஆயிரத்து 217கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளது. பஞ்சாப் நேசனல் வங்கியில் உத்தரவாதக் கடிதம் பெற்றுப் பல்வேறு வங்கிகளில் 11ஆயிரத்து நானூறு கோடி ரூபாய் கடன்பெற்று மோசடி செய்த வைர வணிகர்களான நீரவ் மோடி, அவர் தாய்மாமன் மெகுல் சோக்சி ஆகியோர் வெளிநாட்டில் உள்ளனர். இந்நிலையில் அவர்களுக்குச் சொந்தமான வீடுகளிலும், நிறுவனங்களிலும் சோதனை நடத்திய அமலாக்கத் துறையினர் சுமார் ஆறாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள வைரங்கள், தங்க […]
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மும்பையில் இருந்து அகமதாபாத் வரை தொடங்க உள்ள புல்லட் ரயிலுக்கான நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மகாராஷ்ட்ரா அரசு இந்த நிலத்தை ஹைஸ்பீட் ரயில்வே கார்பரேசன் நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். திட்டமிட்ட காலத்திற்கு முன்பாகவே பல திட்டங்கள் விரைவாக நிறைவேறி வருவதாகவும் டெல்லியில் நடைபெற்ற விழாவில் பேசிய அமைச்சர் தெரிவித்தார். கடந்த ஆட்சிக்காலங்களில் தொடங்கப்பட்ட சில திட்டங்கள் 25 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டையும் அவர் சுட்டிக்காட்டினார். பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் இந்த […]
சீனாவைவிட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரியவந்துள்ளது. நிதியாண்டின் அக்டோபர் – முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் ஜி.டி.பி. எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.9 சதவீதமாக இருக்க வாய்ப்புள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியப் பொருளாதாரம் மந்த நிலை நீங்கி வளர்ச்சியை நோக்கி முன்னேறி வருவதாகவும் மூன்றாவது காலாண்டில் தொழில் மற்றும் சேவைத் துறைகளின் வளர்ச்சி அதிகரிக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் அக்டோபர் – முதல் டிசம்பர் வரையான காலாண்டில் […]
சி.பி.ஐ., பி.எஸ்.என்.எல். சட்டவிரோத தொலைபேசி இணைப்பு வழக்கிலிருந்து மாறன் சகோதரர்களை விடுவிக்கக் கூடாது என தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்த போது சன் டிவிக்கு சட்டவிரோத தொலைபேசி இணைப்புகளை பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கு சென்னை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில்,வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி கலாநிதிமாறன், தயாநிதிமாறன் உள்ளிட்டோர் தனியாக மனுதாக்கல் செய்திருந்தனர். இம்மனு சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி நடராஜன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு […]
இந்த வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்றும் பங்கு வர்த்தகம் அதிக ஏறுமுகத்துடனே தொடங்கியுள்ளது. இன்றைய வர்த்தகத்தின் தொடக்கத்தில், மும்பை பங்குச் சந்தை (சென்செக்ஸ்) 130.13 புள்ளிகள் அதிகரித்து 34,272.28 புள்ளிகளாக இருந்தது. அதேபோல் தேசிய பங்குச் சந்தை (நிஃப்டி) 34.7 புள்ளிகள் உயர்ந்து 10,525.75 புள்ளிகளாக இருந்தது.
சென்னை உயர் நீதிமன்றம் கோடீஸ்வரர்களுக்கு எந்த ஒரு உத்தரவாதமும் இல்லாமல் கடன் கொடுக்கும் வங்கிகள் நடுத்தர மற்றும் ஏழை வர்க்கத்தினருக்கு கடன் கொடுக்கும் போது வேறு மாதிரியாக நடத்துவதாக கண்டனம் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை கேளூரை சேர்ந்த ஏழை மாணவி மதியழகி 2011-12 ஆம் கல்வியாண்டில் பொறியியல் படிப்புக்காக வங்கியில் சுமார் மூன்றரை லட்சம் ரூபாய் கல்விக் கடன் கேட்டு விண்ணப்பித்ததை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பரிசீலிக்கவில்லை என வழக்கு தொடரப்பட்டது. அதைப் பரிசீலிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை […]
அமெரிக்கா தொழிலதிபர்கள், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை குறைக்க வேண்டும் என இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்துடன், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 12 பொருட்களுக்கான சுங்கவரியை மத்திய அரசு அதிகரித்தது. இதனால், ஃபோர்டு கார், ஆப்பிள் போன் உள்ளிட்டவற்றின் விலை அதிகரித்துள்ளது. அண்மையில் அமெரிக்க தயாரிப்பான ஹேர்லி டேவிட்சன் (Harley-Davidson) மோட்டார் சைக்கிள்களுக்கான வரியை குறைக்குமாறு அதிபர் ட்ரம்ப் […]
பொருளாதார ஆய்வறிக்கை ஒன்று இந்திய அரசை 20 நாட்களுக்கு முகேஷ் அம்பானியால் மட்டுமே நடத்த முடியும் என தெரிவித்துள்ளது. 2018 ராபின் ஹூட் இன்டக்ஸ் (2018 Robin Hood Index) என்ற பெயரில் நடத்தப்பட்ட ஆய்வில் உலகின் முன்னணிப் பணக்காரர்கள் அந்தந்த நாட்டின் அரசுகளை எத்தனை நாட்களுக்கு நடத்த முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி உலகின் முதல் பணக்காரரான அமேசான் நிறுவன அதிபர் அமெரிக்காவைச் சேர்ந்த ஜெஃப் பெஜோஸ் (Jeff Bezos), அந்த நாட்டின் அரசை 5 நாட்கள் […]
மும்பைக்கு உலகிலேயே செல்வ செழிப்பான நகரங்கள் பட்டியலில் 12வது இடம் கிடைத்துள்ளது. நியூ வேல்ட் வெல்த் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிநபர் மற்றும் தனியார் நிறுவனங்களின் சொத்து மதிப்புக்கள் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதன்படி, மும்பை நகரம் 950 பில்லியன் டாலர் சொத்து மதிப்புக்களுடன், பிரான்சின் பாரிஸ், கனடாவின் டொரான்டோ நகரங்களை பின்னுக்கு தள்ளியுள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்காவின் நியூயார்க் நகரம் முதலிடத்தில் உள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
கடந்த 2016 – 2017 நிதியாண்டில் பாரத ஸ்டேட் வங்கியின் வாராக்கடன் மதிப்பு 20 ஆயிரத்து 339 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கியுடன், பிற பொதுத்துறை வங்கிக் கிளைகளை இணைப்பதற்கு முந்தைய வாராக்கடன் மதிப்பு இதுவென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ வங்கிக்கு அடுத்தபடியாக பஞ்சாப் நேஷனல் வங்கியின் வாராக்கடன் மதிப்பு 9 ஆயிரத்து 205 கோடி ரூபாயாகவும், பேங்க் ஆப் இந்தியாவின் வாராக்கடன் மதிப்பு 7 ஆயிரத்து 346 கோடியாகவும், கனரா வங்கியின் வாராக்கடன் 5 ஆயிரத்து […]
வட்டி விகிதம், ரிசர்வ் வங்கியின் புதிய உத்தரவால், 2016 ஏப்ரலுக்கு முன்னர் வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு குறையும் வாய்ப்பு உருவாகியுள்ளது. வங்கிகள் கடன்வட்டி விகிதத்தை தீர்மானிக்க பேஸ் ரேட் எனப்படும் அடிப்படை விகித முறையைப் பயன்படுத்தி வந்தன. இதன்படி ஒவ்வொரு வங்கியும் குறைந்தபட்ச வட்டி விகிதத்தை தீர்மானிக்க தனித்தனி முறைகளை பயன்படுத்தி வந்தன. வங்கிகள் தன்னிச்சையாக வட்டி விகிதத்தை தீர்மானிப்பதால், ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை குறைத்தாலும், வங்கிகள் அதைப் பின்பற்றி வட்டி விகிதத்தை குறைப்பதில்லை என […]
வர்த்தகம், மூன்று நாள் சரிவுக்குப் பிறகு இன்று காலை பங்குச்சந்தைகளில் உயர்வுடன் தொடங்கியதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர். பட்ஜெட்டில் நீண்ட கால மூலதன ஆதாயத்திற்கு 10 சதவீத வரி விதிக்கும் அறிவிப்பைத் தொடர்ந்து பங்குச் சந்தைகள் சரிவைச் சந்தித்தன. இந்நிலையில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை அதிகரிக்கப் போவதாக வெளியான தகவலால் அமெரிக்க பங்குசந்தையில் ஏற்பட்ட சரிவு ஆசிய மற்றும் இந்திய பங்குச் சந்தைகளில் எதிரொலித்தது. 3 நாட்களில் சுமார் 9 லட்சம் கோடி […]
உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளதில், உலக அளவிலான தங்க முதலீட்டுக்கான தேவை கடந்த ஆண்டில் வெகுவாகக் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2016ம் ஆண்டில் தங்க முதலீட்டுக்கான தேவை, ஆயிரத்து 595 மெட்ரிக் டன்னாக இருந்தது என்றும், அது கடந்த ஆண்டில் ஆயிரத்து 232 மெட்ரிக் டன்னாகக் குறைந்தது என்றும் தெரிவித்துள்ளது. அதே போல் 2016ம் ஆண்டு தங்கம் சார் பரிவர்த்தனை வர்த்தகம் 546 புள்ளி 8 மெட்ரிக் டன்னாக […]
இந்திய பங்குச் சந்தைகளும் அமெரிக்க பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவின் எதிரொலியாக வீழ்ச்சியடைந்தன. மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் அதிகபட்சமாக 1,274 புள்ளிகள் வரை சரிந்து 33,482 ஆக குறைந்தது. எனினும், நண்பகல் நிலவரப்படி, சென்செக்ஸ் 33,886 புள்ளிகள் வரை உயர்ந்தது. இதேபோல் தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி, அதிகபட்சமாக 310 புள்ளிகள் வரை சரிந்து 10,276 என்ற அளவிற்கு இறங்கியது. அமெரிக்காவில் வேலைவாய்ப்பு வளர்ச்சி விகிதம் எதிர்பார்த்தை விட சிறப்பாக உள்ளதாக புள்ளி விவரங்கள் வெளியானதால், […]
நேற்று வர்த்தக நேரத் தொடக்கத்தில் அமெரிக்க பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்தது. அமெரிக்காவின் பங்குசந்தை 30 முன்னணி நிறுவனங்களை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்படும் டோ ஜோன்ஸ், ஆயிரத்து 600 புள்ளிகள் வரை சரிந்தது. இதேபோல் கடந்த 2011ம் ஆண்டில் ஐரோப்பிய நாடுகள் கடனில் சிக்கித் தவித்தபோது அதன் பாதிப்பு அமெரிக்க சந்தையிலும் எதிரொலித்தது குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர் கடந்த 7 ஆண்டுகளில் முதன்முறையாக முதலீட்டாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வர்த்தக நேரம் செல்லச் செல்ல 1175 புள்ளிகள் குறைந்து காணப்பட்டது. […]
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி வர்த்தக நிறுவனத்தைப் போல லாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு அரசு செயல்பட முடியாது என தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற கிழக்காசிய கொள்முதல் கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசிய ஜேட்லி இந்தக் கருத்தைத் தெரிவித்தார். பொதுக் கொள்முதலில், குறிப்பிட்ட அம்சங்களைத் தேர்வு செய்யும் போக்கு ஒரு சாரருக்கு அநீதியை விளைவிக்கக் கூடும் என்பதுடன், முறைகேட்டுக்கும் வழிவகுத்துவிடும் என அவர் தெரிவித்துள்ளார். அரசின் பொதுக்கொள்முதல் நடைமுறைகளில் வெளிப்படைத் தன்மையைக் கடைப்பிடிப்பதன் மூலம், வேண்டிய நபர்களுக்கு சலுகை காட்டுவது […]
இந்த ஜனவரியில் இந்தியாவில் தங்கம் இறக்குமதி வெகுவாகக் குறைந்துள்ளது. இந்தியா உலகிலேயே மிகப்பெரிய அளவில் தங்கம் கொள்முதல் செய்யும் நாடுகளில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. முதலிடத்தை சீனா பெற்றுள்ளது. வழக்கமாக முன்னணியில் இருக்கும் இந்தியாவின் தங்க இறக்குமதி இந்த ஆண்டு ஜனவரியில் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியில் இந்தியாவின் தங்க இறக்குமதி 47 புள்ளி ஒன்பது டன்னாக இருந்த நிலையில் இந்த ஆண்டு ஜனவரியில் 30 டன்னாக அதாவது 37 சதவீதம் குறைந்திருந்தது. தங்க இறக்குமதிக்கு இந்த பட்ஜெட்டில் வரி […]
மத்திய நிதித்துறைச் செயலாளர் ஹாஸ்முக் ஆதியா கூறியதில், மாத ஊதியம் பெறும் பிரிவினர், வணிகம் மற்றும் தொழில் செய்பவர்கள் இடையே வரி செலுத்துவதில் ஏற்றத்தாழ்வு உள்ளதாக தெரிவித்துள்ளார். மொத்தம் 7லட்சம் நிறுவனங்கள் வருமான வரி அறிக்கை தாக்கல் செய்வதாகவும் அவற்றில் பாதி நிறுவனங்கள் வருமானமே இல்லை என்றும், நட்டத்தில் இயங்குவதாகவும் கணக்குக் காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார். 2016-2017 மதிப்பீட்டு ஆண்டில் மாத ஊதியம் பெறும் 1கோடியே 89 லட்சம் பேர், மொத்தம் 1லட்சத்து 44ஆயிரம் கோடி ரூபாய் […]
மத்திய நிதித்துறை செயலாளர் ஹஸ்முக் அதியா பங்கேற்ற அவர் , மத்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் பட்ஜெட் குறித்த கலந்துரையாடல் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் ஹஸ்முக் அதியா பேசியதாவது- சமீபகாலமாக கார்ப்பரேட் வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்து வலுத்து வருகின்றன. ஆனால், நாங்கள் வரியை குறைக்க மறுக்கவில்லை. நாடு முழுவதும் கார்ப்பரேட் வருமானவரி குறைக்கப்பட வேண்டும் என்பதையே விரும்புகிறோம். பெரும்பாலான நாடுகளில் கார்ப்பரேட் வருமானவரியைக் காட்டிலும் தனிநபர் வருமானவரிதான் அதிகமாக இருக்கிறது. ஆனால், […]