ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் முதற்கட்ட ஏலத்துக்கான அழைப்பு அடுத்த இரு வாரங்களில் விடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் சுமார் 55 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கித் தவித்து வருவதை அடுத்து அதைச் சரிக்கட்ட மத்திய அரசு மேற்கொண்ட பல முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. இதையடுத்து, ஏர் இந்தியா விமான நிறுவனத்தை தனியாருக்கு விற்க மத்திய அமைச்சரவை கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், ஐதராபாத்தில் ஏர்ஷோ (Airshow) நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய […]
பாரத ஸ்டேட் வங்கிக்கு கள்ளநோட்டுத் தொடர்பான ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளைப் பின்பற்றத் தவறியதற்காக 40லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வங்கிக்கு வாடிக்கையாளர்கள் கொண்டு வரும் பணத்தில் கள்ளநோட்டு இருந்தால் அவற்றை உடனடியாகப் பறிமுதல் செய்ய வேண்டும் என்பது ரிசர்வ் வங்கியின் விதியாகும். கள்ளநோட்டுப் புழக்கத்தைத் தடுக்க இதுபோன்ற விதிகளை ரிசர்வ் வங்கி வகுத்தளித்துள்ளது. இந்நிலையில் பாரத ஸ்டேட் வங்கியின் இரு கிளைகளில் பணம் வைக்கப்பட்டுள்ள அறைகளில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது கள்ளநோட்டுக்கள் குறித்த விதிமுறைகளை மீறியிருப்பதும் […]
ராணுவத்தின் தலைமைத் தளபதி பிபின் ராவத், ராணுவத்துக்கு ஒதுக்கப்படும் நிதியில் பெரும்பகுதி நாட்டின் வளர்ச்சிக்காகவே செலவிடப்படுவதாக தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாட்டைக் கட்டமைப்பதில் ராணுவத்தின் பங்கு என்கிற தலைப்பில் ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத் பேசினார். அப்போது ராணுவ வீரர்கள் எல்லையைக் காப்பதாலேயே அந்நிய முதலீட்டாளர்களுக்கு இந்தியாவில் முதலீடு செய்யலாம் என நம்பிக்கை பிறப்பதாகவும் இதன் மூலம் வெளிநாட்டு முதலீடு பெருமளவு ஈர்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். ராணுவத்துக்கு ஒதுக்கப்படும் நிதியில் பெரும்பகுதி உட்கட்டமைப்பு மேம்பாடு, […]
தொழிலதிபர் நீரவ் மோடி மீது பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து, 322 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்ததாக மூன்றாவது முதல் தகவல் அறிக்கையை சிபிஐ பதிவு செய்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியின் கடன் உத்தரவாதத்தைப் பயன்படுத்தி நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக நீரவ் மோடியின் நிறுவனங்கள் மீது பல்வேறு வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 4ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட புதிய வழக்கில், நீரவ் மோடியின் நிறுவனத்தை சேர்ந்த உயரதிகாரிகள் விபுல் அம்பானி மற்றும் ரவிசங்கர் குப்தா ஆகியோர் மீதும் […]
விரைவில் ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கும் என்று கூறப்படுகிறது. நஷ்டத்திலும், கடனிலும் தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தை 4 பிரிவுகளாக பிரித்து விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஏர் இந்தியா சாட்ஸ் ஆகியவை ஒரு பிரிவாகவும் தரைக்கட்டுப்பாட்டு மையம், பொறியியல் பிரிவுகள், அலையன்ஸ் ஏர் ஆகியவற்றை தனித்தனியாக பிரித்தும் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பது தொடர்பான அறிவிப்பு இன்னும் இரு வாரங்களில் வெளியிடப்படும் என்று […]
நீரவ் மோடியின் பெயர், ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் கடந்த ஆண்டு இடம் பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு பட்டியலில் இடம் பெறவில்லை. கடந்த 2017ஆம் ஆண்டு ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் நீரவ் மோடியின் பெயர் இடம் பிடித்து இருந்தார். சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களுடன் அவரது பெயர் உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் கடந்த ஆண்டு ஆயிரத்து 67வது இடத்தில் இருந்தது. இந்நிலையில், 2018ம் ஆண்டு […]
ஜனாதிபதி சி ஜின்பிங் (Xi Jinping) மற்றும் சுமார் 3,000 பிரதிநிதிகள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் , பிரதமர் லி கடந்த ஆண்டின் அரசாங்கத்தின் சாதனைகளை கோடிட்டு மற்றும் இந்த ஆண்டு இலக்குகளை நிர்ணயித்தார் திங்களன்று சீனா, அதன் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 2018 க்கு 6.5 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது, இது கடந்த ஆண்டைப் போலவே, உலகின் இரண்டாம் பெரிய பொருளாதாரம் கடன்களில் விரைவான வளர்ச்சியிலிருந்து அதன் அபாயங்களைக் குறைக்கும் நோக்கம் கொண்டது. நாட்டின் பாராளுமன்ற […]
சவூதிஅரேபியாவை முந்தி ஈராக் இந்தியாவுக்குக் கச்சா எண்ணெய் வழங்குவதில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. மக்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், நடப்பு நிதியாண்டின் முதல் பத்து மாதங்களில் ஈராக்கில் இருந்து 3கோடியே 89லட்சம் டன் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதே காலகட்டத்தில் சவூதி அரேபியாவில் இருந்து 3கோடியே 9லட்சம் டன் எண்ணெய் வாங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஈரான், வெனிசூலா, நைஜீரியா ஆகிய நாடுகளில் இருந்தும் எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவதாக பிரதான் […]
டொனால்டு டிரம்ப் அரசின் புதிய ஹெச்1பி விசா கட்டுப்பாடுகளின் பாதிப்பு, இந்திய ஐடி நிறுவனங்களையும், ஊழியர்களையும் பயமுறுத்தி வந்த நிலையில், இன்போசிஸ் முன்னாள் உயர் அதிகாரியான மோகன்தாஸ் பாய்க் ஐடி ஊழியர்களுக்குச் சாதகமான ஒரு பதிலை கூறியுள்ளார். அமெரிக்க அரசு அறிவித்துள்ள புதிய ஹெச்1பி விசா கட்டுப்பாடுகள் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு அதிகளவிலான பாதிப்பை உருவாக்கும் எனக் கருதப்பட்டு வந்தது. ஆனால் விதிகளை மீறிச் செயல்படும் சில நிறுவனங்களுக்கு இது மிகப்பெரிய பாதிப்பாக அமையும் எனக் கோகன்தாஸ் […]
வருமான வரித்துறையின் விசாரணை தீவிரம், ஊழியர்களின் ஊதியத்தில் இருந்து வரி பிடித்தம் செய்யப்பட்டதில், 3 ஆயிரத்து 200 கோடி ரூபாயை சுருட்டிய நிறுவனங்கள் மீது அடைகிறது. ஊழியர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்படும் தொகை சரியாக செலுத்தப்படுகிறதா என்று வருமான வரித்துறையினர் ஆய்வு செய்த போது 447 நிறுவனங்கள் சுமார் 3 ஆயிரத்து 200 கோடி ரூபாய் வரியை மத்திய அரசுக்கு செலுத்தாமல் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த தொகையை தொழில் வளர்ச்சிக்கும், வேறு சில காரணங்களுக்கும் நிறுவனங்கள் பயன்படுத்தியதை […]
டெல்லியில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் பஞ்சாப் நேசனல் வங்கி மூலம் நடைபெற்ற கடன்மோசடியைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வைர வணிகர்களான நீரவ் மோடியும் அவர் தாய்மாமன் மெகுல் சோக்சியும் பஞ்சாப் நேசனல் வங்கியின் மும்பைக் கிளையில் கடன் உத்தரவாதக் கடிதம் பெற்று 11ஆயிரத்து நானூறு கோடி ரூபாய் கடன்வாங்கி மோசடி செய்துள்ளனர். இது தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறது. இந்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கியுள்ளது. இதை முன்னிட்டுத் […]
தேசிய நிறுவனங்கள் சட்டத் தீர்ப்பாயம், பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி விவகாரத்தில் நீரவ் மோடி, மெகுல் சோக்சி போன்ற தனிநபர்கள், கம்பெனிகள், எல்எல்பிக்கள் உட்பட 60-க்கும் மேற்பட்ட அமைப்புகள் தங்களது சொத்துகளை விற்க தடைவிதித்துள்ளது. பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம் நிறுவன சட்டத் தீர்ப்பாயத்துக்கு அளித்த மனுவைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கில்லி இந்தியா,கீதாஞ்சலி ஜெம்ஸ்,நக்ஷத்ரா பிராண்ட்ஸ், ஃபயர்ஸ்டார் டயமண்ட், சோலார் எக்ஸ்போர்ட்ஸ், ஸ்டெல்லார் டயமண்ட்ஸ் போன்ற நிறுவனங்களின் சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன. தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களைச் சேர்த்து […]
அமலாக்கத்துறை பஞ்சாப் நேசனல் வங்கி முறைகேட்டில் ஈடுபட்ட வைர வியாபாரி நீரவ் மோடி, ஹாங்காங்கில் பதுங்கியிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் முறைகேடாக கடன் உத்தரவாதப் பத்திரங்களைப் பெற்று, 12 ஆயிரத்து 600 கோடி ரூபாய் கடன் மோசடி செய்த வைர வியாபாரி நீரவ் மோடியும், அவரது உறவினரான மெகுல் சோக்சியும் தற்போது எந்த நாட்டில் உள்ளனர் என்பது மர்மமாக உள்ளது. விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவிட்டும், தொழில் ரீதியான வேலைகள் இருப்பதால் விசாரணைக்கு ஆஜராக […]
நகை மோசடியில் ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே முத்தூட் ஃபினான்ஸ் நிதிநிறுவனத்தில் ஈடுபட்ட அதன் மேலாளர், போலீசாருக்கு தெரிந்ததும் விஷம் குடித்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். சித்தூர் அருகே வி.கோட்டா பகுதியில் இயங்கிவரும் முத்தூட் ஃபினான்ஸ் நிதி நிறுவனத்தின் மேலாளர் பிரகாஷ், வாடிக்கையாளர்கள் அடகுவைத்த நகைகளைத் திருடி விற்று அதற்கு பதிலாக போலி நகைகளை வைத்தது தெரியவந்தது. இதனையடுத்து நிறுவனத்துக்கு சீல் வைத்த காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். காவல்துறையினர் தம்மை நெருங்குவதை அறிந்த மேலாளர் பிரகாஷ் விஷம் […]
ரிசர்வ் வங்கி ,அரசு வங்கியில் பணியாற்றும் ஊழியர்களே கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2016 ஜூன் மாதம் வரை 2 ஆயிரத்து 450 கோடி ரூபாய்க்கு மோசடி செய்துள்ளனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. வங்கி ஊழியர்கள் மட்டும் ஏறக்குறைய ஆயிரத்து 232 மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். குறைந்தபட்சம் ரூ. ஒரு லட்சம் முதல் மோசடியிலும், திருட்டிலும் ஈடுபட்டுள்ளனர் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஏற்கெனவே பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் […]
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், உள்நாட்டு தொழிலை காப்பாற்றும் நோக்கில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினயத்திற்கு விதிக்கப்படும் இறக்குமதி வரியை கடுமையாக உயர்த்தியுள்ளார். அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றது முதலே உள்நாட்டு தொழிலாளர்களை பாதுக்காக்கவும், உள்நாட்டு தொழில்களை காக்கவும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக எச் -1 பி விசா நடைமுறைகளை கடுமையாக்கினார். இதை தொடர்ந்து உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமனியத்தை பாதுகாக்கவும், இறக்குமதியை தடுக்கும் பொருட்டும், […]
அமெரிக்காவில் நீரவ் மோடி இருக்கிறாரா என்பதை உறுதிப்படுத்த இயலாது என அந்நாட்டு அரசு கூறியுள்ளது. பஞ்சாப் நேசனல் வங்கி மூலம் முறைகேடாக கடன் உத்தரவாதப் பத்திரங்களைப் பெற்று, 12 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் மோசடி செய்த வழக்கில், வைரநகைத் தொழிலதிபர் நீரவ் மோடி, அவரது உறவினர் மெகுல்சோக்சி ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டு, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் பெரிதாக உருவெடுப்பதற்கு முன்னரே, வெளிநாடு சென்றுவிட்ட நீரவ் மோடி, நியூயார்க்கில் இருப்பதாக […]
ஸ்மார்ட் தொழில்நுட்பத்தினைக் கொண்டா டோர் பெல்லினை ரிங் என்னும் நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்தது. இந்த பெல் ஆனது ஒருவர் வீட்டில் இருக்கும்போதோ அல்லது வெளியே இருக்கும்போதோ வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு பதிலளிக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த பெல்லினை உருவாக்கிய ரிங் நிறுவனம் தற்போது தனது முதலீட்டினை 209 மில்லியன் டாலர்களாக உயர்த்தியுள்ளது. இந்நிலையில் இந்த நிறுவனத்தினை வாங்குவதற்கு அமேசான் நிறுவனம் முன்வந்துள்ளது. இதற்காக 1 பில்லியன் டாலர்கள் பேரம் பேசப்பட்டுள்ளது கொள்வனவு செய்யப்பட்ட பின்னர் […]
மத்திய அமைச்சரவையின் புதிய சட்டம் : பொருளாதாரக் குற்றவாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய ஒப்புதல் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் தொடங்கிய மத்திய அமைச்சரவை கூடத்தில், வங்கி மோசடி, வங்கியில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் இருத்தல் போன்ற பொருளாதார குற்றங்கள் செய்து வெளிநாடுகளில் தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் வகையில் புதிய மசோதாவுக்கு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதாவுக்கு, “தலைமறைவு பொருளாதார குற்றவாளிகள் சொத்து பறிமுதல் மசோதா” எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் […]
சி.பி.ஐ. சார்பில், அன்னிய முதலீட்டு நிதி மோசடி வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு 14 நாட்கள் போலீஸ் காவல் வழங்கக் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் 2007-ல் வெளிநாட்டிலிருந்து 300 கோடி ரூபாய் அன்னிய முதலீடு பெற்றது. உரிய அனுமதியின்றி பெறப்பட்ட இந்த முதலீடு தொடர்பாக அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தில் உள்ள பிரச்சனையை தீர்த்து வைக்க லஞ்சம் பெற்றதாக அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் 24 […]