தொழிலதிபர்கள் 91 பேர் வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்தாத வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. பொதுத்துறை வங்கிகளில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன்பெற்ற பெருந்தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் நாட்டைவிட்டு வெளியேறி வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் வங்கிகளில் பெருந்தொகை கடன் வாங்கிவிட்டு, அதை திருப்பிச் செலுத்தாதவர்களின் பட்டியலை அரசு தயாரித்துள்ளது. அதுபோல் ஐம்பது கோடி ரூபாய்க்கு மேல் கடன்பெற்றவர்களின் கடவுச் சீட்டு விவரங்களை வங்கிகள் கேட்டுப் பெற்று வருகின்றன. […]
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 2018-19 ஆம் ஆண்டில் தமிழக அரசின் வருவாய் ரூ.1,12,616 கோடியாக இருக்கும் என அறிவித்துள்ளார். மேலும் பத்திரப்பதிவுக் கட்டணங்கள் மூலம் ரூ.10,935 கோடி வருவாய் பெறப்படும் என்றும் கூறினார்.ணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசின் 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
பட்ஜெட்டில் மொத்த வருவாய் ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 251கோடி ரூபாயாகவும், மொத்தச் செலவு 2 லட்சத்து இருபதாயிரத்து 731கோடி ரூபாயாகவும், மொத்தப் பற்றாக்குறை 44ஆயிரத்து 480கோடி ரூபாயாகவும் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2018-19ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். வரும் நிதியாண்டில் மொத்த வருவாய் 1,76,251கோடி ரூபாயாக இருக்கும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், மாநிலத்தின் சொந்த வருவாய் 1,23,917கோடி ரூபாயாகும். வரி வருவாய் ஒரு லட்சத்து 12ஆயிரத்து 616கோடிரூபாயும், வரி […]
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வரும் நிதியாண்டில் வணிக வரிகளின் கீழ் ரூ.86,858 கோடி வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாக கூறியுள்ளார்.துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக அரசின் 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம், 2019 ம் ஆண்டு ஜனவரியில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்த அரசு திட்டமிட்டுள்ளதாக அறிவித்தார். முதலீட்டு மானியம் 2 ஆயிரம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தமிழக அரசின் 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தமிழக அரசின் வருவாய் ரூ. 1.81 லட்சம் கோடி,செலவு ரூ. 2. 04 லட்சம் கோடி, பற்றாக்குறை ரூ. 23 ஆயிரத்து 176 கோடி […]
ரூ.75.14க்கு பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து லிட்டருக்கு 2 காசுகள் குறைந்து விற்கப்படுகிறது. டீசலின் விலை லிட்டருக்கு ரூ.2 அதிகரித்து ரூ.66.29 என விற்பனையாகிறது. இன்று காலை 6 மணி முதல் இந்த விலைகள் அமலுக்கு வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
தாயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேரையும் பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கில் இருந்து விடுவித்து சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இதனால் சன் நெட்வொர்க் பங்குகள் உயர்ந்துள்ளன. பிஎஸ்என்எல் இணைப்பை முறைகேடாக பயன்படுத்தி அரசுக்கு ரூ.1.78 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக, முன்னாள் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் தயாநிதிமாறன், கலாநிதிமாறன் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. பல வருடங்களாக நடைபெற்று வந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. அதில், குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இல்லாததால் இந்த வழக்கிலிருந்து […]
நேற்றை விட ஒரு கிராமுக்கு ரூ.19 ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. 22 கேரட் தங்கம் இன்று ஒரு கிராமுக்கு ரூ.2,916 ஆக விற்பனையாகிறது. ஒரு சவரன் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ.23,328 ஆகும். 24 கேரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.30,230க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.41.70 ஆகும். ஒரு கிலோ வெள்ளிக் கட்டி ரூ.41,700 ஆக விற்பனை செய்யப்படுகிறது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
மத்திய அரசு அமெரிக்காவின் மரபணு மாற்றப்பட்ட பருத்தி விதைகளின் காப்புரிமைத் தொகையை அதிரடியாக குறைத்துள்ளது. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மரபணு மாற்றப்பட்ட பருத்தி விதைகள், மான்சாண்டோ என்ற அமெரிக்க நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு, இந்திய நிறுவனங்களுக்கு உற்பத்தி உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், விற்பனையில் காப்புரிமைத் தொகை மான்சாண்டோ நிறுவனம் பெற்று வந்தது. கடந்த 2016 ஆம் ஆண்டு, இதற்கான காப்புரிமை தொகையை 70 சதவீதத்துக்கு மேல் மத்திய அரசு குறைத்தது. இந்நிலையில், தற்போது மேலும் 20 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், […]
டிசிஎஸ்(TCS)-ன் 8 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்புடைய பங்குகளை, நாட்டின் மிகப்பெரிய வர்த்தக குழுமமான டாடா சன்ஸ் லிமிடெட், தனது மென்பொருள் நிறுவனமான, விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இதையொட்டி, டிசிஎஸ் பங்குகளை 2 ஆயிரத்து 872 ரூபாய் முதல், 2 ஆயிரத்து 925 ரூபாய் வரையில் விற்பனை செய்ய உள்ளது. டாடா சன்ஸ் குழுமம், அதன் வயர்லெஸ் பிரிவின் கடன்களை அடைக்க இந்த பங்கு விற்பனை வருமானத்தை பயன்படுத்த உள்ளது. டாடா டெலிசேவர் லிமிடெட், தனது […]
ரிசர்வ் வங்கி, வங்கிகள் கடன் பொறுப்பேற்புக் கடிதம் வழங்கும் நடைமுறையைக் கைவிட முடிவெடுத்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு காரணமாக இத்தகைய கடுமையான முடிவை ரிசர்வ் வங்கி எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், அங்கீகாரம் பெற்ற இறக்குமதியாளர்களுக்கு, கடன் பொறுப்பேற்புக் கடிதம் வழங்கும் நடைமுறையை கைவிட முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிரவ் மோடியின் மோசடி அம்பலமானதை அடுத்து பல வங்கிகள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் வர்த்தக பரிவர்த்தனைகளுக்கு கடன் பொறுப்பேற்புக் கடிதம் […]
தனது வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்கில் மாத குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்கவிட்டால் விதிக்கப்படும் அபராதக் கட்டணத்தை 75 சதவீதம் வரை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி குறைத்துள்ளது. இந்த புதிய கட்டணக் குறைப்பு வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மாதந்தோறும் குறைந்த பட்ச இருப்பை பராரிக்கவேண்டும் என கடந்த ஆண்டு வங்கி அறிவித்தது. அதன்படி, மாநகரங்களில் வசிப்போரு ரூ.3 ஆயிரம், சிறு […]
கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியை ஆந்திரா வங்கியின் முன்னாள் இயக்குநர் தொடர்புடைய ஊழல் விசாரணையால் அவ்வங்கியின் பங்குகள் சந்தித்துள்ளன. பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ஆந்திரா வங்கியின் இயக்குநராக இருந்த அனுப் கார்க், Sterling Biotech எனும் தனியார் நிறுவனத்திற்கு மோசடியான ஆவணங்களின் பேரில் சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் கடன் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த கடன் தொகை வாராக்கடனாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வங்கியின் இயக்குநர் அனுப் கார்க் மீது கடந்த ஆண்டு வழக்கு […]
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.12,500 கோடி மோசடி செய்ததில் முக்கியக் குற்றவாளியான நிரவ் மோடி குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். இவர் தப்பிச் செல்ல யார் உதவியிருப்பார்கள்? என்று கேள்வி எழுப்பி உள்ளார். பெங்களூருவில் இன்று ப.சிதம்பரம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தொலைத்தொடர்பு துறை குறித்து மத்திய தலைமை கணக்கு தணிக்கை அலுவலக அதிகாரியின் அறிக்கையில் 2ஜி அலைக்கற்றை குறித்து மிகைப்படுத்தப்பட்டு அறிக்கை தரப்பட்டது. இதற்கான விலையை நாங்கள் அரசியல் […]
நேற்று தங்கம் பவுனுக்கு சென்னையில் ரூ.128 உயர்ந்து ரூ.23 ஆயிரத்து 368-க்கு விற்பனையானது . சர்வதேச அளவில் தங்கம் விலை நேற்று உயர்ந்ததால், உள்ளூரிலும் தங்கம் விலை அதிகரித்து இருந்தது. சென்னையில் தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.128 உயர்ந்து ரூ.23 ஆயிரத்து 368-க்கு விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 921க்கு விற்கப்பட்டது. இதுவே, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.2 ஆயிரத்து 905-க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் […]
சிபிஐக்கு எழுதிய கடிதத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேட்டில் தொடர்புடைய மெகுல் சோக்ஸி உடல் நிலை காரணமாக இந்தியா திரும்ப முடியாது என கூறியிருக்கிறார். மார்ச் 7-ம் தேதி சிபிஐ-க்கு எழுதிய கடிதத்தில் இதனை தெரிவித்திருக்கிறார். மார்ச் 7-ம் தேதிக்கு முன்பாக ஆஜராக வேண்டும் என சிபிஐ கடிதம் எழுதி இருந்தது. இது தொடர்பாக ஏழு பக்கங்களில் மெகுல் சோக்ஸி கடிதம் அனுப்பி இருக்கிறார். இந்த கடிதத்தில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: என்னுடைய உடல் நலம் சரியில்லை, தவிரவும் […]
ரிசர்வ் வங்கி வங்கிகள் கொடுத்த கடன் உத்தரவாதக் கடிதங்கள் தொடர்பான விவரங்களை அளிக்க உத்தரவிட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியின் மூலம் போலி உத்திரவாதக் கடிதம் பெற்று 11 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக மோசடி செய்ததாக வைர வியாபாரி நீரவ் மோடி மீது வழக்கு நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து வேறு பலரும் வங்கி உத்தரவாதக் கடிதம் பெற்று மோசடி செய்தது தொடர்பான புகார்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. இந்நிலையில் நாடு முழுவதும் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்த […]
தேதி குறிப்பிடாமல் உயர்நீதிமன்றம் , ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் தொடர்பாக வருமானவரித் துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரி கலாநிதி மாறன் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பினை ஒத்திவைத்திருக்கிறது. ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தை தொடங்கியபோது, அதன் முதன்மை அதிகாரியாக கலாநிதி மாறனை அங்கீகரித்து வருமானவரித்துறை உத்தரவிட்டது. இதை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்குத் தொடர்ந்தார். கடந்த 6ஆம் தேதி வருமானவரித்துறை தாக்கல் செய்த பதில் மனுவில், ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் செயல்படாத தலைவர் என […]
ஏர்டெல் வங்கிக்கு விதிமுறைகளை மீறியதற்காக ரிசர்வ் வங்கி 5 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களின் விவரங்களைச் சரிபார்ப்பதற்காக அவர்களின் ஆதார் எண்ணைப் பெற்றபோது, அவர்களின் ஒப்புதல் இன்றியே ஏர்டெல் வங்கிக் கணக்குத் தொடங்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இவ்வாறு கணக்குத் தொடங்கியதும் 23லட்சம் வாடிக்கையாளர்களின் கணக்கில் எரிவாயு சிலிண்டர் மானியத் தொகை 47கோடி ரூபாயை வரவு வைத்தது, வங்கிக்கான விதிமுறைகளை மீறிய செயலாகும். இதற்காக ஏர்டெல் வங்கிக்கு இந்திய ரிசர்வ் வங்கி 5 கோடி ரூபாய் […]
46ஆயிரத்து நூற்று ஒரு கோடி ரூபாய், பொதுத்துறை வங்கிகளின் முதலை அதிகரிப்பதற்காக இந்த மாத இறுதிக்குள் வழங்க அரசு முடிவெடுத்துள்ளது. இந்தத் தொகையில் அதிக அளவாக பாரத ஸ்டேட் வங்கிக்கு எட்டாயிரத்து எண்ணூறு கோடி ரூபாயும், பஞ்சாப் நேசனல் வங்கிக்கு ஐயாயிரத்து 473கோடி ரூபாயும் வழங்கப்பட உள்ளன. பரோடா வங்கிக்கு ஐயாயிரத்து 375கோடி ரூபாயும், சென்ட்ரல் வங்கிக்கு நாலாயிரத்து 835கோடி ரூபாயும் வழங்கப்பட உள்ளன. யூனியன் வங்கிக்கு நாலாயிரத்து 524கோடி ரூபாயும், ஓரியன்டல் பாங்க் ஆப் காமர்சுக்கு […]