நிதி அமைச்சர் அருண் ஜெட்லி வங்கிகள் தனியார் மயமாக்கப்படாது என வங்கிகள் கூட்டமைப்பிடம் உறுதி அளித்துள்ளார். வங்கிகளை தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை என ஜெட்லி கூறியதாக வங்கிகள் கூட்டமைப்பினர் தகவல் அளித்துள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
கனிஷ்க் ஜூவல்லரி மற்றும் அதன் உரிமையாளர் பூபேஷ்குமார் மீது எஸ்.பி.ஐ. உள்ளிட்ட வங்கிகளில் கடன் வாங்கி 824 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, சி.பி.ஐ.யில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இயங்கி வரும் கனிஷ்க் கோல்ட் நிறுவனத்தின் சார்பில், சென்னை மட்டுமின்றி, ஐதராபாத், கொச்சின், மும்பை ஆகிய இடங்களில் கிரிஷ் ஜூவல்லரி என்ற பெயரில் நகைக்கடைகள் தொடங்கப்பட்டன. இந்த நிறுவனத்திற்கு காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே புதுப்பாக்கத்தில் நகை உற்பத்தி ஆலை செயல்பட்டு வந்தது. தயாரித்த நகைகளை கிரிஷ் ஜூவல்லரி […]
நேற்றை விட ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.4 குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் இன்று ஒரு கிராமுக்கு ரூ.2,894 ஆக விற்பனையாகிறது. ஒரு சவரன் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ.23,152 ஆகும். 24 கேரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.30,390க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.41.00 ஆகும். ஒரு கிலோ வெள்ளிக் கட்டி ரூ.41,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.87 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.66.21-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
வைர வியாபாரி மெகுல் சோக்சி மிகைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் காரணமாக இந்தியா திரும்புவதில் பாதுகாப்பற்ற உணர்வு எழுந்துள்ளதாக தெரிவித்துள்ளார். பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,540 கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் வைர வியாபாரியான நீரவ் மோடியுடன் அவரது தாய் மாமனான மெகுல் சோக்சி மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக சி.பி.ஐ.க்கு எழுதியுள்ள கடிதத்தில் தம் மீதான குற்றச்சாட்டுகளை சோக்சி மறுத்துள்ளார். வங்கி மோசடி தொடர்பான சி.பி.ஐ.-ன் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள Diamond R US மற்றும் […]
நேற்றைய விலையிலிருந்து பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 காசு உயர்ந்து ரூ.74.87க்கு விற்கப்படுகிறது. டீசலின் விலை லிட்டருக்கு 7 காசுகள் உயர்ந்து ரூ.66.21 என விற்பனையாகிறது. இன்று காலை 6 மணி முதல் இந்த விலைகள் அமலுக்கு வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
உலக வாணிப அமைப்பில் இந்தியா, உருக்கு, அலுமினியம் ஆகியவற்றுக்கான இறக்குமதி வரியை அமெரிக்கா உயர்த்துவதை எதிர்த்து முறையிட உள்ளது. உள்நாட்டுத் தொழில்களைக் காக்கும் நடவடிக்கையாக உருக்கு, அலுமினியம் ஆகியவற்றின் இறக்குமதி வரியை உயர்த்த அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்தியா, சீனா ஆகியவற்றின் வணிகப் போட்டியைச் சமாளிக்க அமெரிக்கா எடுத்துள்ள இந்த நடவடிக்கையால் வணிகப் போர் உருவாகும் அபாயமுள்ளதாக அமெரிக்கர்கள் பலரும் கருதுகின்றனர். இந்நிலையில் உருக்கு, அலுமினியம் இறக்குமதிக்கு வரியை உயர்த்தும் அமெரிக்காவின் முடிவை எதிர்த்து உலக […]
ரிசர்வ் வங்கி மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பழைய 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை துண்டுகளாக்கி அழிக்கும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி, அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட பிறகு, 15.28 லட்சம் கோடி மதிப்புள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் செலுத்தப்பட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது. இந்த […]
காக்னிசன்ட் நிறுவனத்தின் மீது அமெரிக்க பணியாளர்களை பாரபட்சத்துடன் நடத்துவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. Cognizant Technology Solutions Corporation நிறுவனத்தின் அமெரிக்க கிளையில் பணியாற்றிய மூன்று ஊழியர்கள், அந்நிறுவனத்திற்கு எதிராக சிவில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். அதில், காக்னிசன்ட் நிறுவனம் தங்களை வலுக்கட்டாயமாக பணியிலிருந்து வெளியேற்றி விட்டு அதே பணியில் தங்களை விடவும் தகுதிக்குறைவானவர்களை பணியமர்த்தியதாக குறை கூறியுள்ளனர். இந்திய அதிகாரிகளாலும் சக ஊழியர்களாலும் தாங்கள் பாரபட்சமாக நடத்தப்பட்டதாகவும் அமெரிக்க ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனிடையே காக்னிசன்ட் நிறுவனம் […]
இந்தியாவில் அமெரிக்க விமானத் தயாரிப்பு நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் எஃப்-16 ரக ஜெட் விமானங்கள் தயாரிப்புப் பிரிவைத் தொடங்க திட்டமிட்டுள்ளது. இந்தியா தொடர்ந்து போர் விமானங்களை வாங்கி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் எஃப்-16 ரக விமானத் தயாரிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் தேவையை நிறைவேற்ற முடியும் என்றும் மேக் இன் இந்தியா திட்டத்தில் பங்களிப்பை வழங்க முடியும் என்றும் லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் எஃப்-16 ரக ஜெட் விமானங்கள் தயாரிப்பு தனிச்சிறப்பு […]
கூகுள் இந்தியாவின் மேலாண் இயக்குநர் ராஜன் ஆனந்தன் பெண்கள் நடத்தும் நிறுவனங்களில் நிர்வாகச் செயல்பாடு சிறப்பாக உள்ளதாகக் தெரிவித்துள்ளார். பெண்களின் நிர்வாகத் திறன் குறித்த கருத்தரங்கில் கூகுள் இந்தியா மேலாண் இயக்குநர் ராஜன் ஆனந்தன் பேசினார். அப்போது பெண்கள் குறைவாகப் பேசுவதுடன் தங்கள் திட்டங்களைச் செயல்படுத்துவதிலேயே குறியாக இருப்பதாகத் தெரிவித்தார். நிறுவனத்தைக் கட்டமைப்பதிலும் தனக்குக் கீழான குழுவை உருவாக்குவதிலும் பெண்கள் நிறையக் கவனம் செலுத்துகிறார்கள் என்றும் தெரிவித்தார். பெண்களால் தொடங்கப்படும் நிறுவனங்களின் எண்ணிக்கையும், பெண்களால் நடத்தப்படும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் […]
ஒரேநாளில் 3 இண்டிகோ விமானங்கள் ஒரேநாளில் 3 இண்டிகோ விமானங்கள் தொழில்நுட்பச் சிக்கல்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்குச் சென்ற ஏ 320நியோ வகை விமானத்தில் எஞ்சினில் இருந்து எரிபொருள் கசிந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அது தரையிறக்கப்பட்டது. இதேபோல் நேற்று டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் சென்ற விமானத்தின் எஞ்சினில் கோளாறு ஏற்பட்டது தெரியவந்ததை அடுத்து அந்த விமானம் பராமரிப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டது. இதேபோல் டெல்லியில் இருந்து பெங்களூர் செல்லவிருந்த இண்டிகோ விமானத்தில் குறைபாடு இருந்தது தெரியவந்ததை அடுத்து […]
தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.86 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.66.14-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
நேற்றைய விலையிலிருந்து பெட்ரோல் விலை லிட்டருக்கு 8 காசுகள் குறைந்து ரூ.74.87க்கு விற்கப்படுகிறது. டீசலின் விலை லிட்டருக்கு 3 காசுகள் குறைந்து ரூ.66.12 என விற்பனையாகிறது. இன்று காலை 6 மணி முதல் இந்த விலைகள் அமலுக்கு வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. பெட்ரோல், டீசல் விலைகள் மேலும் குறைய வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை ஆகும். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, உலக பொருளாதாரமே சரிந்து வரும் நிலையில், இந்திய பொருளாதாரம் வளர்ந்து வருவதாக பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில், தனியார் கல்வி நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசும்போது, அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இந்த விழாவில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அமைச்சர் ஜெயக்குமார், இங்கிலாந்து தூதரக அதிகாரி பரத் ஜோஷி உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் பேசிய வெங்கையா நாயுடு, நமது கலாச்சாரம், பண்பாட்டில் பெருமை கொள்ள வேண்டும் என்றும், இந்தியாவின் ஒவ்வொரு […]
நீரவ் மோடி மகாராஷ்டிர மாநிலம் அகமது நகர் மாவட்டத்தில் தங்களிடம் குறைந்த விலைக்கு வாங்கி வளைத்துப்போட்ட நிலத்துக்கு விவசாயிகள் மீண்டும் உரிமை கொண்டாடுகின்றனர். பஞ்சாப் நேசனல் வங்கி நிதி மோசடியில் தொடர்புடைய வைர வணிகர் நீரவ் மோடி, மகாராஷ்டிரத்தின் அகமதுநகர் மாவட்டத்தில் கண்டாலா என்னுமிடத்தில் விவசாயிகளின் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களைச் சந்தை மதிப்பைவிடக் குறைந்த விலைக்கு வாங்கி வளைத்துப் போட்டுள்ளார். இப்போது அவர் வெளிநாட்டில் உள்ள நிலையில், வறுமை காரணமாக அவரிடம் நிலங்களை அடிமாட்டுவிலைக்கு விற்ற விவசாயிகள் மீண்டும் […]
நேற்றைய விலையிலிருந்து பெட்ரோல் விலை லிட்டருக்கு 10 காசுகள் குறைந்து ரூ.74.95க்கு விற்கப்படுகிறது. டீசலின் விலை லிட்டருக்கு 8 காசுகள் குறைந்து ரூ.66.15 என விற்பனையாகிறது. இன்று காலை 6 மணி முதல் இந்த விலைகள் அமலுக்கு வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
இன்று இந்திய பங்குச்சந்தைகளில் சரிவு காணப்பட்டது.மும்பை பங்குச்சந்தை இன்றைய வணிகநேர முடிவில் சென்செக்ஸ் 510புள்ளிகள் சரிந்து 33ஆயிரத்து 176ஆக உள்ளது. தேசியப் பங்குச்சந்தை நிப்டி 165புள்ளிகள் சரிந்து பத்தாயிரத்து 195ஆக உள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தெலுங்குதேசக் கட்சி விலகியது, பல்வேறு பொருட்களுக்கு இந்தியா ஏற்றுமதி மானியம் வழங்குவதை எதிர்த்து உலக வணிக அமைப்புக்கு அமெரிக்கா சென்றது ஆகியவற்றால் பங்குச்சந்தை வீழ்ச்சியடைந்ததாகக் கூறப்படுகிறது. உருக்கு, அலுமினியம் ஆகியவற்றுக்கு அமெரிக்கா இறக்குமதி வரியை உயர்த்தியதை அடுத்து உலோக நிறுவனங்களின் பங்குகள் […]
பங்கு வர்த்தகம் வார வர்த்தகத்தின் இறுதி நாளான இன்றும் இறக்கத்துடன் தொடங்கியுள்ளது. இன்றைய வர்த்தகத் தொடக்கத்தில், மும்பை பங்குச் சந்தை (சென்செக்ஸ்) 46.31 புள்ளிகள் சரிந்து 33,639.23 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச் சந்தை (நிஃப்டி) 19.70 புள்ளிகள் குறைந்து 10,340.45 புள்ளிகளாக இருந்தது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
தங்கம் விலை இன்று (மார்ச் 16) காலை மேலும் சரிந்து, ஒரு சவரன் ரூ.23,200 க்கும் கீழ் சென்றுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 ம், கிராமுக்கு ரூ.8 ம் குறைந்துள்ளது. இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2892 ஆகவும், 10 கிராம் (24 காரட் தங்கத்தின் விலை ரூ.30,920 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் ரூ.23,136 க்கு விற்பனையாகிறது. ஒரு […]