4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு டீசல் விலை உயர்வை சந்தித்துள்ளது,இதேபோல் பெட்ரோல் விலையும் உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 76 ரூபாய் 48 பைசாவிற்கு விற்கப்படும் நிலையில் , டீசல் விலை முதன்முறையாக 68 ரூபாயை கடந்து 68 ரூபாய் 12 பைசாவிற்கு விற்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. 2012 முதல் 2016 வரையிலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் […]
தமிழ்நாடு வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககாத மத்திய அரசை கண்டித்து ஏப்ரல் 11-ல் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். ஏப்ரல் 11-ல் தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி ஏப்ரல் 11-ல் தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
நேற்றைய விலையிலிருந்து பெட்ரோல் விலை லிட்டருக்கு 19 காசுகள் உயர்ந்து ரூ.76.48க்கு விற்கப்படுகிறது. டீசலின் விலையும் லிட்டருக்கு 28 பைசாக்கள் அதிகரித்து ரூ.68.12 என விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வநதுள்ளது . மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னையில் கனிஷ்க் நகை உற்பத்தி நிறுவன உரிமையாளர் பூபேஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. புகழேந்தி என்பவருக்கு சொந்தமான ரூ.42 கோடி மதிப்பு நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக பூபேஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புகழேந்தியின் நிலத்தை வாங்குவதாக ஒப்பந்தம் செய்து, அந்த ஆவணம் மூலம் ரூ.42 கோடி கடன் பெற்று பூபேஷ் மோசடி செய்துள்ளார். பூபேஷ் மனைவி நீதா ஜெயின் மற்றும் கனிஷ்க் நிறுவனத்தின் மீதும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர். மேலும் செய்திகளுக்கு […]
நேற்றை விட ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.11 அதிகரித்துள்ளது. 22 கேரட் தங்கம் இன்று ஒரு கிராமுக்கு ரூ.2,934 ஆக விற்பனையாகிறது. ஒரு சவரன் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ.23,472 ஆகும். 24 கேரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.30,800க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.41.60 ஆகும். ஒரு கிலோ வெள்ளிக் கட்டி ரூ.41,600 ஆக விற்பனை செய்யப்படுகிறது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
1394 கோடி ரூபாய் ஹைதராபாத்தைச் சேர்ந்த நிறுவனம், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி உட்பட 8 வங்கிகளில் மோசடி செய்திருப்பதாக சிபிஐ வழக்கு பதிவு செய்திருக்கிறது. வங்கி அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொண்டு மோசடி செய்யும் நிறுவனங்களின் வரிசையில், ஹைதராபாத்தைச் சேர்ந்த, உட்கட்டமைப்பு நிறுவனமான, டோடம் இன்ப்ராஸ்சக்ச்சர் லிமிடெட் (Totem Infrastructure Limited), புதிதாக இணைந்திருக்கிறது. யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா உட்பட 8 வங்கிகளில் இந்த நிறுவனம், ஆயிரத்து 394 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்திருக்கிறது. […]
தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.98 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.66.44-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.பெட்ரோல், டீசல் விலைகள் மீண்டும் உயர்ந்து வருவது நடுத்தர மக்களுக்கு கவலையளிப்பதாக உள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
மாநிலங்களவையில் பணிக்கொடையில் வரிவிலக்குக்கான உச்சவரம்பை 10 லட்சத்திலிருந்து 20 லட்சம் ரூபாயாக உயர்த்துவதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்கவார் அறிமுகப்படுத்திய இம்மசோதா விவாதங்களின்றி குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. 7 வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த சட்டத்திருத்தத்தின் அடிப்படையில் பெண்களுக்கான மகப்பேறு விடுமுறைக்காலத்தை அதிகபட்சமாக 26 வாரங்கள் வரை நீட்டிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஐதராபாத்தை சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனம் 8 வங்கிகளில் ரூ.1394.43 கோடி மோசடி செய்த நிலையியல் அது மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐதராபாத்தை சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனமான டோட்டம் இன்ஃப்ரா ஸ்டிரக்டர் நிறுவனத்தின் உரிமையாளர்கள் சலாலீத், கவிதா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.13 கோடி கடன் வழங்கிய யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
கனிஷ்க் தங்க நகை நிறுவன உரிமையாளர் பூபேஷ்குமாரிடம், சென்னையில் எஸ்.பி.ஐ உள்ளிட்ட 14 வங்கிகளில் 824 கோடி ரூபாய் மோசடியாக கடன் பெற்ற விவகாரத்தில் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கனிஷ்க் நிறுவனம், இருப்பு மற்றும் விற்பனை கணக்குகளை மோசடியாக தயாரித்து, வங்கிகளில் கடன் பெற்றது தெரியவந்துள்ளது. ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, எச்.டி.எஃப்.சி., பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட 14 வங்கிகள் கனிஷ்க் நிறுவனத்துக்கு 824 கோடியே 15 லட்சம் ரூபாய் கடனாகக் கொடுத்துள்ளன. […]
அமலாக்கத்துறை , வங்கி மோசடியாளர்களின் பாஸ்போர்ட்டை திரும்பப் பெறுமாறு இந்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளது. வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன்வாங்கியவர்கள் அதைத் திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் வெளியுறவு அமைச்சகத்துக்கு அமலாக்கத்துறை ஒரு கடிதம் எழுதியுள்ளது. அதில் ஆந்திர வங்கி உட்படப் பல்வேறு வங்கிகளில் பத்தாயிரம் கோடி ரூபாய் கடன்பெற்றுத் திருப்பிச் செலுத்தாத தொழில்அதிபர்கள் நிதின், சேட்டன் சந்தேசரா ஆகியோரின் பாஸ்போர்ட்டை திரும்பப் பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. இதேபோல் மும்பையில் […]
14 வங்கிகளை 824 கோடி ரூபாய்க்கு சென்னையை சேர்ந்த தங்க நகை நிறுவனம், மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த மோசடி குறித்து சிபிஐ-யிடம் 14 வங்கிகளின் கூட்டமைப்பு சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை வடக்கு உஸ்மான் சாலை பகுதியில் கடந்த 2007 முதல் செயல்பட்டு வரும் கனிஷ்க் தங்க நகை தயாரிப்பு நிறுவனத்தை உரிமையாளர் பூபேஷ் குமார் ஜெயின் என்பவர் நடத்தி வருகிறார். இவர், வங்கிக்காக கடந்த 2007ல் ரூ.50 கோடியை ஐ.சி.ஐ.சி.ஐ.வங்கியில் கடன் பெற்றுள்ளார். பின்பு […]
வரும் 31 ஆம் தேதிக்கு மேல் பாரத ஸ்டேட் வங்கியுடன் தற்போது இணைக்கப்பட்டுள்ள வங்கிகள் மற்றும் பாரத பெண்கள் வங்கியின் காசோலைகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பல துணை வங்கிகள் பாரத ஸ்டேட் வங்கிக்கு செயல்பட்டு வந்தன.ஸ்டேட் வங்கி, பாட்டியாலா ஸ்டேட் வங்கி, ஐதராபாத் ஸ்டேட் வங்கி,திருவாங்கூர் உள்ளிட்ட பல வங்கிகளும் பாரத பெண்கள் வங்கியும் கடந்த வருடம் பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்கப்பட்டது. அதன் பிறகு அனைத்து இணைக்கப்பட்ட வங்கிகளின் பெயரும் பாரத ஸ்டேட் வங்கி என […]
இன்று வார வர்த்தகத்தின் 4ஆவது நாளான பங்குச் சந்தைகள் சிறு ஏற்றத்துடன் தொடங்கியுள்ளன.மும்பை பங்குச் சந்தை இன்றைய வர்த்தகத் தொடக்கத்தில் (சென்செக்ஸ்) 56.89 புள்ளிகள் உயர்ந்து 33,193.07 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச் சந்தை (நிஃப்டி) 14.15 புள்ளிகள் அதிகரித்து 10,169.40 புள்ளிகளாக இருந்தது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
14 வங்கிகளை 824 கோடி ரூபாய்க்கு சென்னையை சேர்ந்த தங்க நகை நிறுவனம், மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த மோசடி குறித்து சிபிஐ-யிடம் 14 வங்கிகளின் கூட்டமைப்பு சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை வடக்கு உஸ்மான் சாலை பகுதியில் கடந்த 2007 முதல் செயல்பட்டு வரும் கனிஷ்க் தங்க நகை தயாரிப்பு நிறுவனத்தை உரிமையாளர் பூபேஷ் குமார் ஜெயின் என்பவர் நடத்தி வருகிறார். இவர், வங்கிக்காக கடந்த 2007ல் ரூ.50 கோடியை ஐ.சி.ஐ.சி.ஐ.வங்கியில் கடன் பெற்றுள்ளார். பின்பு […]
இன்று (மார்ச்-22) பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.94, டீசல் விலை லிட்டருக்கு ரூ.66.30 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (மார்ச்-22) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. பெட்ரோல், டீசல் விலை விபரம்: எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 7 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.74.94 காசுகளாகவும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 9 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.66.30 காசுகளாகவும் உள்ளன. […]
சோனி இந்தியா நிறுவனத்தின் புதிய மேலாண்மை இயக்குநராக சுனில் நாயர் அறிவிக்கப்பட்டுள்ளார். சீன நிறுவனங்களின் ஆதிக்கத்தின் காரணமாகத், எலக்ட்ரானிக்ஸ் துறையில் முன்னணி நிறுவனமாக இருந்து வரும் சோனி, தொடர் வர்த்தக தோல்வியில் இருந்து வருகிறது. இந்த தோல்வியை சமாளிக்க சோனி இந்திய பிரிவின் தலைவராகச் சுனில் நாயர் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் முதல்முறையாக இதியாவைச் சேர்ந்த ஒருவர் சோனியின் தலைவராக நியமிக்கப்படுகிறார். மேலும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அவர் பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
கனிஷ்க் ஜூவல்லரி மற்றும் அதன் உரிமையாளர் பூபேஷ்குமார் மீது எஸ்.பி.ஐ. உள்ளிட்ட வங்கிகளில் கடன் வாங்கி 824 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, சி.பி.ஐ.யில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.தற்போது எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகளில் ரூ.824 கோடி மோசடி செய்த புகாரில் சென்னையை சேர்ந்த கனிஷ்க் கோல்டு நிறுவனத்தின் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. சென்னையில் இயங்கி வரும் கனிஷ்க் கோல்ட் நிறுவனத்தின் சார்பில், சென்னை மட்டுமின்றி, ஐதராபாத், கொச்சின், மும்பை ஆகிய இடங்களில் கிரிஷ் ஜூவல்லரி என்ற பெயரில் நகைக்கடைகள் தொடங்கப்பட்டன. […]
மத்திய அரசு திறன் இருந்தும் கடனை செலுத்தாத மிகப்பெரிய 91 தொழிலதிபர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாதபடி, தடை விதித்துள்ளது. வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்ற தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக் ஷி ஆகியோர் வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ளனர். இதையடுத்து, 50 கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெறுவோர், வங்கிகளில் தங்களது பாஸ்போர்ட் விவரங்களைத் தெரிவிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, பணம் இருந்தும் வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முன்வராத […]
வாட்ஸ் அப் இணை நிறுவனரான பிரைன் அக்டன் (Brian Acton) பேஸ்புக்குக்கு எதிரான பிரசாரத்தில் இணைந்துள்ளார். வாட்ஸ் ஆப்பில் தன்வசமிருந்த பங்குகைளை பிரைன் அக்டன்(Brian Acton) கடந்த 2014ம் ஆண்டு பேஸ்புக் (Face book) நிறுவனத்திற்கு விற்றுவிட்டார். இந்நிலையில் தேர்தல் வியூகம் வகுக்கும் காம்ப்ரிட்ச் அனலிட்டிக்கா(Cambridge Analityca) நிறுவனத்திற்காக பேஸ்புக்(Face Book) பயனாளர் தகவல்கள் விற்கப்பட்டதாக சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து டெலிட் பேஸ்புக்(Delete face book) என்ற ஹேஷ்டேக் பரவாலக பகிரப்பட்டு வருகிறது. இதனை வாட்ஸ் ஆப் […]