சென்னை உயர்நீதிமன்றம் கடன்மோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுபிக் ஷா சுப்ரமணியத்தை ஜாமீனில் விடுவிக்க மறுத்துவிட்டது. சுபிக் ஷா நிறுவனம், 300க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களுக்கு 40 கோடி ரூபாய் வரை திருப்பி செலுத்தவில்லை என்றும், நிதி நிறுவனம் தொடங்கி 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை 150 கோடி ரூபாய் வரை ஏமாற்றியதாகவும் புகார் எழுந்தது. இந்நிலையில் 13 வங்கிகளிடம் 750 கோடி ரூபாய் கடன் மோசடி வழக்கில் சுபிக் ஷா சுப்பிரமணியன் அமலாக்கத் துறை கைது செய்தது. இந்த […]
எச்.டி.எஃப்.சி வங்கி வீட்டுக்கடன்களுக்கான வட்டி விகிதத்தை 5 முதல் 20 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தியுள்ளது. 30 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் 8.40 விழுக்காட்டிலிருந்து 8.45 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது. 30 லட்சம் ரூபாய் முதல் 75 லட்ச ரூபாய் வரையிலான வீட்டுக்கடன்களுக்கான வட்டி விகிதம் 8.40 விழுக்காட்டிலிருந்து 8.60 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது. 75 லட்ச ரூபாய்க்கு அதிகமான வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 8.50 விழுக்காட்டிலிருந்து 8.70 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது. பெண் வாடிக்கையாளர்களுக்கு […]
பாஜக கடந்த 2016-17ம் நிதிஆண்டில் ரூ.1,034 கோடி வருமானம் ஈட்டி நாட்டிலேயே மிகப்பெரிய பணக்கார கட்சியாகவலம் வருகிறது என்று தகவல் வெளியாகி உள்ளது. நாட்டில் உள்ள 7 தேசிய கட்சிகளின் ஒட்டுமொத்த வருவாய் ரூ.ஆயிரத்து 559 கோடி என்றால், அதில் ஏறக்குறைய ரூ. 1,000 கோடி பாஜக கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. டெல்லியைச் சேர்ந்த ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு தேசிய கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த வருமானவரி தாக்கலை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் கூறப்பட்டு […]
தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து சந்தா கோச்சார் வீடியோகான் நிறுவனத்துக்கு கடன் வழங்கிய விவகாரத்தில்,பதவி விலக வேண்டும் என இயக்குநர் குழுவில் சிலர் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வீடியோகான் நிறுவனத்துக்கு முறைகேடாக 3 ஆயிரத்து 250 கோடி ரூபாய் கடன் வழங்கியதாக ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சார் மீது புகார் எழுந்துள்ளது. இந்த முறைகேட்டில் சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சாருக்கும் தொடர்பு இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து, சி.பி.ஐ. வழக்குப் பதிவு […]
சிபிஐ தீவிரமாக வைரவியாபாரி நீரவ் மோடியின் இங்கிலாந்து கணக்கை முடக்கும் வேலையில் செயல்பட்டு வருகிறது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு தலைமறைவாக இருக்கும் நீரவ் மோடியைப் பிடிக்க சிபிஐ முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் இருக்கும் அவரது சொத்துக்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்படுகின்றன. இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள பார்கிளே வங்கியில் பவுண்டுகளாக இந்திய மதிப்பில் 12 கோடி ரூபாய் கணக்கு வைத்திருப்பதும், டாலர்களாக 80 ஆயிரம் ரூபாய் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. […]
நேற்றைய விலையை விட பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 காசு குறைந்து ரூ.76.75க்கு விற்கப்படுகிறது. டீசலின் விலை லிட்டருக்கு 4 பைசாக்கள் அதிகரித்து ரூ.68.53 என விற்பனையாகிறது. இன்று காலை 6 மணி முதல் இந்த விலைகள் அமலுக்கு வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் தலைமைச் செயலதிகாரி பொறுப்பிலிருந்து வீடியோகான் நிறுவனத்துக்கு முறைகேடாக கடன் வழங்கியதாகக் குற்றம்சாட்டப்படும் சந்தா கோச்சார், விலகுமாறு அதன் பிற இயக்குநர்கள் வலியுறுத்துவதாகக் கூறப்படுகிறது. வீடியோகான் நிறுவனத்துக்கு 2012ஆம் ஆண்டில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி 3 ஆயிரத்து 250 கோடி கடன் வழங்கி அதில் 2 ஆயிரத்து 849 கோடி ரூபாய் நிலுவை உள்ளது. கடன் வழங்கியதற்கு கைமாறாக பல கோடி ரூபாயை கணவரின் அறக்கட்டளைக்கு பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில், வருமான வரித்துறை, சிபிஐ உள்ளிட்ட விசாரணைக்கு […]
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையும், ஜிஎஸ்டி வரியும் தோல்வி அடைந்த நடவடிக்கைகளாகும் என்று கடுமையாக விமர்சித்துள்ளார். நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பிஸ்னஸ் ஸ்கூலில் தெற்கு ஆசியா வர்த்தக அமைப்பு சார்பில் 14-வது ஆண்டு வர்த்தக மாநாடு நடந்தது. இதில் பாஜக எம்.பி.யும், மூத்த தலைவருமான சுப்பிரமணியன் சுவாமி பங்கேற்றார். அந்த மாநாட்டில் அவர் பேசியதாவது: பிரதமர் மோடி தலைமையில் பாஜக 2019-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் மீண்டும் மிகப் […]
பாரத ஸ்டேட் வங்கி நேபாளத்தில் நீர்மின் திட்டத்தை நிறைவேற்றும் இந்திய அரசு நிறுவனத்துக்குஎட்டாயிரம் கோடி ரூபாய் கடன்வழங்க உள்ளது. நேபாளத்தில் “அருண்-3” நீர்மின் திட்டத்தின் மூலம் தொள்ளாயிரம் மெகாவாட் மின்னுற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய அரசின் மின்துறையின் கீழ் இயங்கும் சிம்லா ஜல் விகாஸ் நிகம் நிறுவனம் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது. திட்டத்தின் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில் இதற்காக பாரத ஸ்டேட் வங்கியிடம் எட்டாயிரம் கோடி ரூபாய் கடன்பெறுவதற்கு அந்த நிறுவனம் […]
பங்குசந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி(SEBI) மோசடி நிறுவனங்களுக்கு துணைபோகும் பட்டய கணக்காளர், நிறுவன செயலாளர்கள் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு, வாட்சப்பில் நிறுவனங்களின் ஆண்டு அறிக்கை விவரங்கள் கசிந்தது போன்ற முறைகேட்டில் தொடர்புடைய பட்டாய கணக்காளர்கள் செபியின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். மோசடிக்கு துணை போயிருந்தால் அவர்கள் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதே போன்று மோசடியாக நிறுவனங்கள் பெற்ற லாபத்தை திரும்ப […]
சீனா வர்த்தக போரில் எந்த விலையையும் கொடுக்க தயாராக இருப்பதாக அமெரிக்காவுக்கு பதில் அளித்துள்ளது. சீனா பொருட்கள் மீது கூடுதலாக 100 பில்லியன் டாலர் மதிப்பு மிக்க வரியை விதிக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திட்டமிட்டுருக்கிறார் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சீனா வர்த்தக அமைச்சகம் தரப்பில் வெள்ளிக்கிழமை கூறும்போது, ”சர்வதேச வர்த்தகத்தில் ஒரு தலைப்பட்சமாக அமெரிக்கா நடந்து கொள்ளும் என்றால், வர்த்தக போரில் எந்த விலையையும் கொடுக்க சீனா தயாராக உள்ளது” என்று தெரிவித்துள்ளது. முன்னதாக சீனப் பொருட்கள் […]
தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.75, ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.68.44-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
வைர வியாபாரி நீரவ் மோடி வங்கி கடன் மோசடியில் சிக்கியுள்ள நிலையில் குஜராத்தில், மேலும் ஒரு மிகப்பெரிய மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வதோதராவில் இயங்கும் டைமண்ட் பவர் இன்ஃபிராஸ்ட்ரக்சர் லிமிடெட் என்ற நிறுவனம், வங்கிக் கடன் மோசடி செய்தது குறித்த ரிசர்வ் வங்கியின் பட்டியலில் இடம் பெற்றிருந்தது. இருப்பினும், அந்த நிறுவனத்திற்கு 11 வங்கிகள் கடன் வழங்கியுள்ளன. இரண்டாயிரத்து 654 கோடி ரூபாய் பாக்கித் தொகையை செலுத்தவில்லை என வங்கிகள் கூட்டமைப்பு அளித்த புகாரின் பேரில், டி.பி.ஐ.எல். நிறுவனத்தின் […]
2 ஆயிரத்து 654 கோடி ரூபாய் குஜராத் மாநிலத்தில் மேலும் ஒரு நிறுவனம் வங்கிக் கடன் பெற்று மோசடி செய்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்துள்ளது. குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்த டைமண்ட் பவர் இன்ஃபிராஸ்ட்ரக்சர் லிமிடெட் என்ற நிறுவனத்தை உரிமையாளர் S.N. பட்னாகர், அவரது மகன்கள், நிறுவன இயக்குநர்களான அமித் மற்றும் சுமித் ஆகியோர், நிர்வகித்து வருகின்றனர். இவர்கள், 2012-ம் ஆண்டு அதிக வருவாய் ஈட்டியதாகக் கணக்குக் காண்பித்து பொதுத்துறை மற்றும் […]
ரிசர்வ் வங்கி பிட்காயின் எனப்படும் மெய்நிகர் நாணயப் பரிமாற்ற சேவையை எந்த வங்கிகளும் அளிக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக 2018 – 2019 நிதியாண்டுக்கான கொள்கை அறிக்கையில் அறிவுறுத்தி உள்ள ரிசர்வ் வங்கி, தனிநபர்கள், வர்த்தக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் உட்பட யாருக்கும் பிட்காயின் பரிவர்த்தனை சேவையை வழங்கக் கூடாது என தெரிவித்துள்ளது. மேலும், ஏற்கனவே பிட்காயின் பரிவர்த்தனை தொடர்புகள் இருப்பின், அவற்றை மூன்று மாதங்களுக்குள் துண்டித்துக் கொள்ள வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. […]
பெல்ஜியம் அரசு பஞ்சாப் நேசனல் வங்கி நிதிமோசடி வழக்கில் தொடர்புடைய வைர வணிகர் நீரவ் மோடியின் 2 வங்கிக் கணக்குகளைப் முடக்கியுள்ளது. பஞ்சாப் நேசனல் வங்கியின் உத்தரவாதக் கடிதத்தின் மூலம் பல்வேறு வங்கிகளில் 11ஆயிரத்து நானூறு கோடி ரூபாய் கடன்பெற்றுத் திருப்பிச் செலுத்தாத வைர வணிகர்கள் நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுவிட்டனர். இந்தியாவில் அவர்களின் நிறுவனங்களிலும் வீடுகளிலும் சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதுடன் ஆறாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களைப் […]
தொழிலதிபர் அமித் பரத்வாஜ், ஒன்றுக்கு பத்தாக லாபம் வரும் என ஆசைகாட்டி, பிட்காயினில் மூதலீடு செய்யச்சொல்லி, 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சுருட்டிய அவரை கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி விமான நிலையத்தில் வைத்து, புனே போலீசாரால் கைது செய்யப்பட்ட அமித்பரத்வாஜ், நாட்டிலேயே முதல் முறையாக பிட்காயினை ஏற்றுக்கொள்ளும் வகையில் 2014ஆம் ஆண்டில் இணைய சில்லறை வணிகத்தை தொடங்கியவர். ஹாங்காங்கில் இருந்தும் பிட்காயின் தொழிலில் ஈடுபட்ட அமித் பரத்வாஜ், பின்னர் பிட்காயின் முதலீட்டில் […]
தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.75, ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.68.41-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெட்ரோலியப் பொருட்கள் ஜிஎஸ்டி-க்குள் விரைவில் கொண்டுவரப்படும் என நம்புவதாக தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் சந்தை விலையில் பெட்ரோலியப் பொருட்கள் கிடைக்கும் வகையில், பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி வரையரைக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு ஜிஎஸ்டி கவுண்சிலுக்கு கோரிக்கை வைத்துள்ளார் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான். பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்கள் அனைத்தும் சர்வதேச நுகர்வுப் பொருட்கள் என்பதால் சர்வதேச சந்தையில் […]
4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் டீசல் விலை உயர்வை சந்தித்துள்ளது, பெட்ரோல் விலையும் உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 76 ரூபாய் 59 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 68 ரூபாய் 24 காசுகளுக்கு விற்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. 2012 முதல் 2016 வரையிலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை […]