முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ,தமிழகத்திற்குரிய நிதியை முறையாக அளிக்க வேண்டும் என்று மத்திய நிதிக்குழுவுக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதி தொடர்பாக நிதிக்குழுத் தலைவர் என்,கே.சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 2011ம் ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்படுவதற்கு ஆட்சேபம் தெரிவித்துள்ளார் .மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தமிழகத்திற்கு இது பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் அக்கடிதத்தில் விளக்கியுள்ளார். நிதிக்குழு மூலம் தொடர்ந்து தமிழகம் தண்டிக்கப்படுவதாக கவலை தெரிவித்துள்ள முதலமைச்சர், […]
நேற்றைய விலையைவிட பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 காசு உயர்ந்து ரூ.76.85க்கு விற்கப்படுகிறது. டீசலின் விலை லிட்டருக்கு 4 பைசாக்கள் அதிகரித்து ரூ.68.90 என விற்பனையாகிறது. இன்று காலை 6 மணி முதல் இந்த விலைகள் அமலுக்கு வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் தலைவர் ரஜ்னிஷ் குமார் ,நாடு முழுவதும் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட கடுமையான ரூபாய் நோட்டுக்கள் தட்டுப்பாடு, இன்றைக்குள் முழுமையாக சீரடையும் என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தெரிவித்துள்ள தகவலில் பீகார், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்பட்ட திடீர் ரூபாய் நோட்டுக்கள் தட்டுப்பாட்டை நீக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக தெரிவித்தார். குறிப்பாக, பணப்பற்றாக்குறைக்கு ஏற்ப பகுதிகளுக்கு அதிக அளவில் ரூபாய் நோட்டுகளை அனுப்பி வைத்திருப்பதாகவும், தற்போது நாடு முழுவதும் 86 […]
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாட்டின் வங்கிகளில் போடப்பட்ட பொதுமக்களின் பணம் எங்கே என்று மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ள நிலையில் , பணம் கிடைக்காமல் மீண்டும் மக்கள் ஏடிஎம் மையங்களில் நீண்ட வரிசையில் நிற்பதாக தெரிவித்துள்ளார். வங்கி செயல்பாடுகளை சீரழித்ததாக பிரதமர் மோடியை விமர்சித்துள்ள ராகுல் காந்தி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து நீரவ் மோடி 14 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்ததற்கும் மோடி அரசுதான் காரணம் என்று கூறியுள்ளார். நம்மிடம் இருந்த 500 […]
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி ,உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் ஏற்பட்டுள்ள பணத்தட்டுப்பாடு தற்காலிகமானது என்று கூறியுள்ளார். கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம்,டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக ஏ.டி.எம்களில் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பணம் எடுக்கச் செல்லும் ஏ.டி.எம்களில் எல்லாம் இல்லை என்ற பதிலே கிடைப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஐதராபாத்தில் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக பெரும்பாலான ஏடிஎம்கள் மூடப்பட்டுள்ளதாகவும், பணம் இருக்கும் ஒரு சில […]
இந்திய பொருளாதாரம் பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி. வரி ஆகியவற்றால் சுணங்கிய மீண்டுவிட்டதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. கறுப்புப்பணம், கள்ளநோட்டு, ஊழல் ஆகியவற்றை ஒழிப்பதற்காக, கடந்த 2016ஆம் ஆண்டில் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். அதேபோல், நாடு முழுவதும் ஒரே சீரான வரி வசூல் முறையை அமல்படுத்தும் நோக்கில் சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜி.எஸ்.டி. அறிமுகம் செய்யப்பட்டது. மத்திய அரசின் இந்த இரு நடவடிக்கைகளால், இந்தியாவின் பொருளாதார […]
சீன அரசு ,நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிப்பவர்கள் பற்றி, பொதுமக்கள் தகவல் தெரிவிக்கும் வகையில் இணைய தளம் ஒன்றைதொடங்கியுள்ளது. சீனாவின் தேசிய பாதுகாப்பு கல்வி தினமான ஞாயிற்றுகிழமை, www.12339.gov.cn என்ற இணைய தளத்தை அந்நாட்டு தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தொடங்கியுள்ளது. அரசு அதிகாரிகள் மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சிப்பவர்கள், ஆயுதக் கிளர்ச்சிக்கு தூண்டுபவர்கள், அந்நிய உளவாளிகள் பற்றி தகவல் தெரிவிக்கலாம் என அந்த இணைய தளத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஊழியர்களின் ஊதிய தொகுப்பில் ஜி.எஸ்.டி. காரணமாக முக்கிய மாற்றங்களை நிறுவனங்கள் செய்யும் என்பதால், சம்பளத்தில் கணிசமான அளவுக்கு மாற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. தனியார் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு வழங்கும் வீட்டு வாடகை, தொலைபேசி கட்டணம், சுகாதாரக் காப்பீடு உள்ளிட்ட படிகள் குறிப்பிட்ட அளவை விட அதிகரிக்கும்போது, அதற்கு ஜி.எஸ்.டி. வரியை செலுத்த வேண்டும் என கூறப்படுகிறது. இதனால், தனியார் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு வழங்கும் சலுகைகளை குறைத்து, ஊதியத்தை புதிதாக வரையறுக்க வேண்டியிருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. […]
டெல்லி நீதிமன்றம் ,ஏர்செல் – மேக்சிஸ் முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை மே 2 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. ஏர்செல் – மேக்சிஸ் முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி டெல்லி நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீது, அவரை கைது செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நீதிபதி ஓ.பி.சைனி […]
துபாயின் எமிரெட்ஸ் விமான நிறுவனம்,விலைமதிப்பு மிக்க பயணிகள் விமானமாகக் கருதப்படும் A-380 ரக விமானங்களை இயக்கும் இந்திய பைலட்டுகளின் எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது. தங்களிடம் 133 இந்திய விமானிகள் இருப்பதாகவும், திறன்வாய்ந்த இந்திய விமானிகள் 57 பேர் தங்களின் தலா 2 ஆயிரத்து 910 கோடி ரூபாய் மதிப்பிலான உயர் ரக ஏ-380 ரக விமானங்களை இயக்குவதாகவும் தெரிவித்துள்ளது. அவர்களில் கேப்டன்களுக்கு சுமார் பத்தரை லட்சம் ரூபாயும், விமானிகளுக்கு சுமார் 7 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயும் சம்பளம் […]
போலி வருமான வரி இணையதளத்தை நம்பி ஐதராபாத்தில் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்த பேராசிரியர் ஒரு லட்சம் ரூபாயை இழந்துள்ளார். ஹைதராபாத் சிட்டி கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றும் இவர் தனக்கு வந்த ஒரு மெயில் மோசடி என்று அறியாமல் அதில் இருந்த லிங்க்கைத் தேர்வு செய்தது தெரியவந்துள்ளதாக ஹைதராபாத்தின் ரச்சகொண்டா ((Rachakonda)) சைபர் கிரைம் பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த லிங்க் அழைத்துச் சென்ற போலி வருமான வரி இணையதளத்தில் அவர் தனது கணக்குகளை தாக்கல் […]
பிரிட்டிஷ் நிறுவனமான BAE SYSTEMS இடமிருந்து குறைந்த எடை கொண்ட பீரங்கிகள் வாங்க வர்த்தக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த திருவிடந்தையில் 10வது ராணுவ தளவாட கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் சர்வதேச நிறுவனங்களுடன் பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிரிட்டிஷ் நிறுவனமான BAE SYSTEMS இடமிருந்து, உலகிலேயே மிக குறைந்த அளவு எடை கொண்ட அதிநவீனமான 145 பீரங்கிகளை இந்திய ராணுவத்திற்கு வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. M777 155MM ULTRA LIGHT WEIGHT […]
தொலைத்தொடர்புத் துறை , வோடபோன்(VODAFONE), ஐடியா நிறுவனங்களின் இணைப்புக்கு முன்பு 19ஆயிரம் கோடி ரூபாய் நிலுவைத் தொகையைச் செலுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது. இந்தியாவில் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஓடபோனும், மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஐடியாவும் இணைந்து ஒரே நிறுவனமாக மாறத் திட்டமிட்டுள்ளன. அப்படி இணைந்தால் அது 41கோடி வாடிக்கையாளர்களுடன் நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக விளங்கும். இந்நிலையில் இரு நிறுவனங்களும் உரிமக் கட்டணம், அலைக்கற்றைப் பயன்பாட்டுக் கட்டணம், ஒருமுறை அலைக்கற்றைக் கட்டணம் ஆகிய வகைகளில் தொலைத்தொடர்புத் […]
சி.பி.ஐக்கு, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் எம்.டி சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சாரின் நிறுவனத்துக்கு மொரிசியசில் இருந்து 325கோடி ரூபாய் நிதி பெற்றது குறித்து அளிக்கப்பட்ட விளக்கம் திருப்தி அளிக்கவில்லை. வீடியோகான் நிறுவனத்துக்குக் கடன் வழங்கியதில் ஐசிஐசிஐ வங்கி மேலாண் இயக்குநர் சாந்தா கோச்சாரின் குடும்பம் கைமாறு பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாகச் சாந்தாவின் கணவர் தீபக் கோச்சாரிடம் விசாரித்த வருமானவரித் துறையினர், மொரிசியசைச் சேர்ந்த 2 நிறுவனங்களிடம் இருந்து நியூ பவர் ரினீயுவபில்ஸ் நிறுவனத்துக்கு 325கோடி […]
கீதாஞ்சலி குழும நிறுவனர் மெகுல் சோக்சி மீது மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) மேலும் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் பெற்று திரும்ப செலுத்தாதது தொடர்பாக ஏற்கெனவே ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது 31 வங்கிகள் கொண்ட கூட்டமைப்பில் ரூ. 5,280 கோடி கடன் பெற்று திரும்ப செலுத்தாது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரித்து வருவதாக சிபிஐ தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கீதாஞ்சலி குழுமம் மீது […]
தொடர்ந்து ஆறாவது நாளாக இந்திய பங்கு சந்தைகள் உயர்வுடன் முடிவடைந்துள்ளன. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ்161 புள்ளிகள் உயர்ந்து 34 ஆயிரத்து 101 புள்ளிகளில் நிறைவடைந்தது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி 42 புள்ளிகள் உயர்ந்து 10 ஆயிரத்து 459 புள்ளிகளில் நிறைவடைந்தது. தொடர்ந்து ஆறாவது நாளாக பங்கு சந்தைகளில் ஏற்றம் நிலவியதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அன்னிய நேரடி முதலீடு அதிகரிப்பு, தகவல் தொழில் நுட்பத் துறையில் ஏற்பட்டுள்ள ஏறுமுகம் ஆகியவற்றால் […]
மத்தியில் ஆளும் மோடி அரசால் பண மதிப்பிழப்பும், சரக்கு மற்றும் சேவை வரியும் (ஜிஎஸ்டி) முறையாக திட்டமிடப்படாமல் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும். ஒரேநாள் இரவில் ரூ.1000, ரூ.500 நோட்டுகளை செல்லாது என அறிவித்ததை ஏற்க முடியாது என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் சாடியுள்ளார். ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தற்போது நியூயாரக்கில் உள்ள சிக்காகோ பல்கலைக்கழகத்தில் நிதித்துறை பேராசாரியராகப் பணியாற்றி வருகிறார். இந்தப் பல்கலைக்கழகத்தில் நடந்த பொருளாதார வளர்ச்சிக்கான கொள்கைகள் குறித்த கருத்தரங்கில் […]
15 நாளுக்கு ஒருமுறை மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் அதன் விலையில் மாற்றம் செய்து வந்தன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து அதன் விலையை உயர்த்தியோ அல்லது குறைத்தோ வந்தன. பின்னர் தினமும் அதன் விலையில் மாற்றம் கொண்டு வர தொடங்கின. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் பெட்ரோல்–டீசல் விலை ரூ.10 உயர்ந்து உள்ளது. தினந்தோறும் அவற்றின் விலையில் மாற்றம் ஏற்படுவதால், லாரி வாடகை உள்பட பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களில் வாடகையிலும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. […]
நேற்றைய விலையில் மாற்றமின்றி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.75க்கு விற்கப்படுகிறது. டீசலின் விலையும் மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.68.53 என விற்பனையாகிறது. இன்று காலை 6 மணி முதல் இந்த விலைகள் அமலுக்கு வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
இஸ்ரோ தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட ஜிசாட் – 6ஏ செயற்கைக்கோள் இருக்கும் இடம் அறியப்பட்டதாக தெரிவித்துள்ளது. தகவல்தொடர்பு மற்றும் பருவநிலை மாற்றம் தொடர்பான இந்த செயற்கைகோள், கடந்த மாதம் 29 ஆம் தேதி, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்ட பின்னர், ஜிசாட் – 6ஏ செயற்கைக்கோளுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இந்நிலையில், அந்த செயற்கைக்கோள் இருக்கும் சரியான இடத்தை கண்டுபிடித்து விட்டதாக கூறிய இஸ்ரோ, செயற்கைக்கோளுடன் தகவல் தொடர்பை […]