பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.4, டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 முதல் ரூ.3.50 வரை உயரும் என தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக தேர்தலால் 19 நாட்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாததால் ஒரே நேரத்தில் உயர்த்த வாய்ப்பு உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் டெல்லியில் மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். டீசல் விலை, இன்சூரன்ஸ் கட்டண உயர்வை கண்டித்து வேலை நிறுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளனர். தினமும் டீசல் விலை உயர்த்தப்படுவதால் லாரி தொழில் […]
டெல்லியில் மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். டீசல் விலை, இன்சூரன்ஸ் கட்டண உயர்வை கண்டித்து வேலை நிறுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளனர். தினமும் டீசல் விலை உயர்த்தப்படுவதால் லாரி தொழில் அழிந்துவிட்டது என்று தெரிவித்தனர். இன்றைய பெட்ரோல் ரூ.78.16, டீசல் ரூ.70.49: சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.78.16 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.70.49 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (மே-17) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. எண்ணெய் […]
இன்றைய(மே-17) பெட்ரோல்,டீசல் விலை: பெட்ரோல் ரூ.78.16, டீசல் ரூ.70.49 சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.78.16 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.70.49 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (மே-17) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. பெட்ரோல், டீசல் விலை விபரம்: எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், (இன்று மே-17 ) பெட்ரோல் லிட்டருக்கு நேற்றைய விலையில் இருந்து 23 காசுகள் அதிகரித்து ரூ.78.16 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு 24 […]
மத்திய நிதித்துறை அமைச்சகம் ,2017-2018ஆம் நிதியாண்டில், ஜிஎஸ்டி மூலம், 7 லட்சத்து 41 ஆயிரம் கோடி ரூபாய் வரி வருவாய் கிடைத்திருப்பதாக தெரிவித்திருக்கிறது. கடந்தாண்டு ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் ஜிஎஸ்டி அமலுக்கு வந்தது. மாநிலங்களுக்கு உள்ளாக விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கான, மத்திய ஜிஎஸ்டி மூலம், ஒரு லட்சத்து 19 ஆயிரம் கோடி ரூபாயும், மாநில ஜிஎஸ்டி மூலம் ஒரு லட்சத்து 72 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு இடையிலான பொருட்களின் […]
தொடர்ச்சியாக மூன்று நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்தின் நான்காவது சனிக்கிழமை என்பதால் 28ம் தேதியும் 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் வங்கிகளுக்கு விடுமுறை நாட்களாகும். இதையடுத்து திங்கட்கிழமை 30ம் தேதியும் புத்த பூர்ணிமா காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று நாட்களிலும் எந்தவித பரிவர்த்தனைகளும் நடைபெறாது. இன்று வங்கி முழு நாளும் செயல்படும் என்றும் அவசர பணத்தேவை, அலுவல்களை இன்று முடித்துக் கொள்ளலாம் என்றும் வங்கிகள் அறிவித்துள்ளன. அவசரமாக பணம் தேவைப்படும் பொதுமக்கள் ஏடிஎம்களில் […]
14 கோடியே 48 லட்சம் ரூபாய் கணக்கில் வராத பணம்,பெங்களூர், ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் மாநிலம் கன்னா ஆகிய நகரங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனைகளில் கைப்பற்றப்பட்டுள்ளது. பல்வேறு ஏடிஎம்களில் பணம் இல்லை என்ற பலகை காணப்படுவதற்கு புதிய 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் பதுக்கல் ஒரு முக்கியக் காரணமாக கருதப்படுகிறது. இதனையடுத்து வருமான வரித்துறையினர் பணப்புழக்கம் அதிகமாக உள்ள வணிகர்கள், பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் மற்றும் தொழில் அதிபர்களிடம் சோதனைகளை மேற்கொண்டனர்.பினாமி […]
உலக வங்கி , இந்த ஆண்டு கச்சா எண்ணெய் விலை 20 சதவீதம் வரை உயரும் என தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2017-ம் ஆண்டில் கச்சா எண்ணெயின் சராசரி விலை ஒரு பீப்பாய்க்கு 3,548 ரூபாயாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக்கும், அதிகளவில் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடான ரஷ்யாவும் உற்பத்தியை குறைத்துள்ளதால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு […]
ரூ.824 கோடி வங்கிக் கடன் மோசடி வழக்கில் கனிஷ்க் கோல்டு நிறுவனத்தின் ரூ.143 கோடி வங்கிக்கணக்கை முடக்கியது அமலாக்கத்துறை. இதற்கு முன் கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி அமலாக்கத்துறை,வங்கிகளிடம் 824 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த கனிஷ்க் தங்க நகை தயாரிப்பு நிறுவனத்தின் 48 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்கியிருக்கிறது. தங்க நகை உற்பத்தியில் ஈடுபட்டு வந்த கனிஷ்க் நிறுவனம், எஸ்பிஐ உள்பட 14 வங்கிகளிடம் 2009ல் இருந்து 2017 ஆம் […]
ஏர்செல் நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளர் சிவசங்கரன் ரூ.600 கோடி வரை வங்கிகளில் மோசடி செய்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.ஐ.டி.பி.ஐ. வங்கியிடம் ரூ. 600 கோடி கடன் வாங்கி மோசடி செய்ததாக சிவசங்கரன் மீது குற்றச்சாட்டு உள்ள நிலையில் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இதற்கு முன் ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமான கடன் நெருக்கடி காரணமாக முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்செல் தேசிய கடன் தீர்ப்பாயத்தில் திவால் மனுத் தாக்கல் செய்தது. இதை அந்த தீர்ப்பாயமும் ஏற்றுக்கொண்டது. இதையடுத்து ஏர்செல் வாடிக்கையாளர்கள் […]
அமலாக்கத்துறை,வங்கிகளிடம் 824 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த கனிஷ்க் தங்க நகை தயாரிப்பு நிறுவனத்தின் 48 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்கியிருக்கிறது. தங்க நகை உற்பத்தியில் ஈடுபட்டு வந்த கனிஷ்க் நிறுவனம், எஸ்பிஐ உள்பட 14 வங்கிகளிடம் 2009ல் இருந்து 2017 ஆம் ஆண்டு வரை 824 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இருப்பில் இருந்ததை காட்டிலும், சுமார் 3000 கிலோ தங்கம் அதிகமாக இருப்பதாக போலியான நிதி […]
அமலாக்கத்துறை,குஜராத் மாநிலம் வதோதரராவிலிருந்து இயங்கும டைமண்ட் பவர் நிறுவனத்தின் ரூ.1,122 கோடி மதிப்பு வாய்ந்த சொத்துகளை முடக்கியது. இது குறித்த விவரம் வருமாறு,11 வங்கிகளில் ரூ.2,654 கோடி பணம் கடனாகப் பெற்று திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றி வந்ததாக டைமண்ட் பவர் (டிபிஐஎல்) நிறுவனத்துக்குச் சொந்தமான ரூ.1,122 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை இன்று முடக்கியது. இந்த மாத தொடக்கத்தில் சிபிஐ ஒரு எப்ஐஆர் வழக்குப் பதிவு செய்தது. அதைத் தொடர்ந்து பண மோசடியில் ஈடுபட்ட வழக்கில் அமலாக்கத்துறை வதோதராவின் […]
மத்திய அரசு,பெட்ரோல், டீசல் விலை முன் எப்போது இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதை அடுத்து கலால் வரியை குறைப்பது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 77 ரூபாய் 29 காசுகளாகவும், டீசல் விலை 69 ரூபாய் 37 காசுகளாகவும் உள்ளது. கடந்த 55 மாதங்களில் இல்லாத அளவுக்கு விலை உயர்ந்துள்ளதை அடுத்து எண்ணெய் நிறுவன உயர் அதிகாரிகளுடன் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் டெல்லியில் ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை […]
மத்திய அரசு,சரக்கு மற்றும் சேவை வரியினங்கள் மாநிலங்களிடம் இருந்து உரிய நேரத்துக்கு, எளிதாக பெற ஏதுவாக, wallet போன்ற வசதியை உருவாக்கியுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் இருந்து மத்திய அரசுக்கு வரியினங்கள் வந்தடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, இவ்வசதி அரசு அறிமுகம் செய்யவுள்ளது. இந்த wallet-ல் ஒவ்வொரு மாநிலமும் தனித்தனியே கணக்கு தொடங்கலாம். துறைகள் அல்லது நிறுவனங்களிடம் இருந்து முன்கூட்டியே வசூம் செய்யும் வரிகளை மத்திய அரசுக்கு செலுத்தலாம் என்று தெரிவித்துள்ள மத்திய அரசு அதிகாரிகள், இக்கணக்கில் இருந்து […]
சாப்ட்வேர் துறையில் முதலிடத்தில் இருக்கும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இந்தியாவில் 100 பில்லியன் டாலர் சந்தை மூலதன மதிப்பை கொண்ட முதல் நிறுவனம் என்ற பெருமையை பெற்றுள்ளது. பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனத்தின் மொத்த பங்குகளை அதன் தற்போதைய விலையுடன் பெருக்கினால் வருவதே மொத்த மூலதன சந்தை மதிப்பாகும். அதன்படி தற்போது 100 பில்லியன் டாலர் சந்தை மூலதனத்தை கொண்ட நிறுவனமாக டிசிஎஸ் உருவெடுத்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் 6,53,767 கோடி ரூபாயாக அதன் சொத்து மதிப்பு […]
ஏடிஎம் ஒன்றில் உத்தரபிரதேச மாநிலத்தில் போலி ரூபாய் நோட்டுகள் வந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த மாநிலத்தின் பரேலி நகரின் ஒரு அங்கமான சுபாஷ் நகரில் உள்ள யுனைடெட் வங்கி ஏடிமில் அசோக் குமார் பட்னாயக் என்பவர் பணம் எடுக்கச் சென்றார். 4500 ரூபாயை அவர் எடுத்த போது இரண்டு போலி 500 ரூபாய் நோட்டுகளும் அதில் கலந்திருந்தன. அவருக்கு முன்பு பணம் எடுத்த பிரவீண் உத்தம் என்பவருக்கும் இதே அனுபவம் கிடைத்துள்ளது. அவர்கள் எடுத்த பணத்துடன் சில்ரன் […]
குஜராத் மாநில சி.ஐ.டி. போலீஸார் ,குஜராத்தில் தொழிலதிபரிடமிருந்து 12 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயின்களை அபகரித்ததாக, அம்ரேலி மாவட்ட எஸ்.பி. ஜெகதீஷ் படேலிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சூரத்தைச் சேர்ந்த தொழிலதிபரான பாட் என்பவரை காந்திநகரிலிருந்து பிப்ரவரி 9ம் தேதி கடத்திச் சென்ற போலீஸார், பண்ணை வீடு ஒன்றில் அவரை அடைத்து வைத்தனர். தொழிலதிபரை அடித்து உதைத்து கணினி மூலம் பிட்காயின்களை தங்களது கணக்கிற்கு போலீஸார் மாற்றியுள்ளனர். இவ்வழக்கில் காவல் ஆய்வாளர் ஆனந்த் படேல் உள்ளிட்ட 9 போலீஸார் […]
6லட்சத்து 79ஆயிரம் கோடி ரூபாயாக,டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் சந்தை முதல் மதிப்பு உயர்ந்துள்ளது. டிசிஎஸ் எனப்படும் டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக விளங்குகிறது. இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு இன்றைய வணிகநேரத் தொடக்கத்தில் 4 விழுக்காடு அதிகரித்து மூவாயிரத்து 545ரூபாயாக இருந்தது. இதனால் அந்த நிறுவனத்தின் சந்தை முதல் மதிப்பு 6லட்சத்து 79ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இந்த அளவு சந்தை முதல் மதிப்பை எட்டியுள்ள முதல் நிறுவனமாக […]
தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 10 காசுகள் உயர்ந்து, 77 ரூபாய் 29 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோன்று ஒரு லிட்டர் டீசல் 10 காசு அதிகரித்து, 69 ரூபாய் 37 காசுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுவரும் நிலையில், நாள்தோறும் அவற்றின் விலை உயர்ந்து கொண்டே இருப்பது […]
4 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு ,மத்தியில் பாஜக ஆட்சியில் அமர்ந்த பின் பெட்ரோல், டீசல் இன்று உயர்ந்துள்ளது. ஒரே நாளில் டெல்லியில் பெட்ரோல், டீசலில் 19 காசுகள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை கடந்த 2012ம் ஆண்டுக்குப் பின் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. இதனால், மக்களின் சிரமம் கருதியும், பணவீக்கம், விலைவாசி உயராமல் இருக்க உடனடியாக உற்பத்தி, கலால்வாரி உயர்வைக் குறைக்க வேண்டி மத்திய அரசுக்கு கடும் நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. மத்தியில் ஆட்சிப்பொறுப்பேற்றபின் பிரதமர் […]
சர்வதேச செலாவணி நிதியமான ஐஎம்எஃப்,ஜிஎஸ்டி உள்ளிட்ட இந்தியா மேற்கொண்ட சீர்திருத்தங்கள் பலன் தரத் தொடங்கியுள்ளதாக கூறியுள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த ஆண்டு 6.7 சதவீதமாக இருந்ததாகவும், அது நடப்பு நிதியாண்டில் 7.4 சதவீதமாகவும், அடுத்த நிதியாண்டில் 7.8 சதவீதமாகவும் இருக்கும் என கணித்துள்ளகதாக, ஐஎம்எஃப் அதிகாரி டேவிட் லிப்டன் (First Deputy Managing Director David Lipton) தெரிவித்துள்ளார். இந்தியா இதுவரை மேற்கொண்ட சீர்திருத்தங்கள் பலன் தரத் தொடங்கியுள்ளதாகவும், தொடர்ந்து சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதையே […]