பேங்க் ஆப் இந்தியா வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.10 கோடி மதிப்புள்ள 32 கிலோ எடையுள்ள தங்க நகைகள் மீட்க்கப்பட்டுள்ளது. வங்கி மேலாளர், காவலாளி உள்பட 8 பேரிடம் போலீசார், திருவள்ளூர் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் அடகு வைக்கப்பட்டிருந்த 10 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள், கள்ளச்சாவி உதவியுடன் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் விசாரணை மேற்கொண்டனர். திருவள்ளூர் ஜே.என்.சாலையில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் கீழ் தளத்தில் நீல்கிரீஸ் சூப்பர் மார்க்கெட்டும், முதல் மாடியில் பேங்க் ஆஃப் இந்தியா […]
இன்றைய பெட்ரோல், டீசல் விலை: பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 17 காசுகள் அதிகரித்து, லிட்டருக்கு ரூ.81.43 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.டீசல் விலை 15 காசுகள் அதிகரித்து, லிட்டருக்கு ரூ.73.18 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது தொடர்பாக பதிலளிக்க வேதாந்தா நிறுவனத்துக்கு மும்பை பங்குச் சந்தை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கையில்: பசுமைத் தீர்ப்பாயம், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய நிபந்தனைகளை ஸ்டெர்லைட் ஆலை நிறைவேற்றவில்லை.மாசுக்கட்டுப்பாட்டு வாரிய நிபந்தனைகளை பூர்த்தி செய்யாததால் ஆலைக்கான மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டதுடன் தண்ணீர் விநியோகமும் நிறுத்தம்.-ல் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா, ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டார் .இந்த உத்தரவை எதிர்த்து, செய்த மேல்முறையீட்டில் அன்று ஆலையை இயக்க […]
இண்டிகோ, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகியன குறைந்த கட்டணத்தில் விமானப் போக்குவரத்து வழங்கும் நிறுவனங்களின் பட்டியலில் முதல் 5 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளன. பன்னாட்டு அளவில் இருநூறு விமானப் போக்குவரத்து நிறுவனங்களின் பயணிகள் கட்டணம் பற்றிய பட்டியலை ரோம் டூ ரியோ என்கிற ஆஸ்திரேலிய நிறுவனம் தயாரித்துள்ளது. இதன்அடிப்படையில் மிகக் குறைந்த கட்டணத்தில் விமானப் போக்குவரத்து வழங்கும் நிறுவனங்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. அதில் ஏர் ஏசியா எக்ஸ் முதலிடத்தையும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இரண்டாமிடத்தையும் பிடித்துள்ளன. இந்தோனேசியா ஏர் ஏசியா […]
டெல்லியில் வங்கி ஊழியர் கூட்டமைப்பினருடன், மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைதுள்ள நிலையில் திட்டமிட்டப்படி வங்கி வேலை நிறுத்தம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அனைத்து வங்கி ஊழியர்களும் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 30, 31ஆம் தேதிகளில் நாடு முழுவதும் வேலைநிறுத்தம் செய்ய உள்ளனர். நாடு முழுவதும் நடைபெறும் இந்த போராட்டத்தில் சுமார் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்கவுள்ளதால் வங்கி பணிகள் முடங்கக்கூடிய அபாயம் எழுந்துள்ளது. வங்கி ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பாக […]
ஆர்பிஐ,ஜன் தன் உள்ளிட்ட அடிப்படை வங்கி கணக்குகளில் 4 முறைக்கு மேல் பணம் எடுப்பவர்களின் வங்கிக் கணக்கை அம்மாதம் முடியும் வரை முடக்க முடிவு செய்துள்ளது. அனைவருக்கும் வங்கிக் கணக்கு என்ற பெயரில் கடந்த 2014ல் ஜன் தன் வங்கி கணக்கு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. மத்திய அரசின் மானியங்கள் இந்த கணக்குகள் மூலம் நேரடியாக மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே ஜன்தன் உள்ளிட்ட அடிப்படை வங்கிக் கணக்கில் சில மாற்றங்களை கொண்டு வர ஆர்பிஐ திட்டமிட்டுள்ளது. இந்த […]
திருவள்ளூரில் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் ரூ.6 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது . திருவள்ளூரில் உள்ள பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் ரூ.6 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது .ஆயில் மில் பகுதியிலுள்ள வங்கியில் அடகு வைக்கப்பட்டிருந்த நகைகள் கொள்ளை என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
நாட்டின் பிரபல மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான TCS-ன் பங்குச்சந்தை மதிப்பு, 7 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. நாட்டிலேயே இத்தகைய உச்சத்தை அடைந்த முதல் நிறுவனமாகவும், TCS உருவெடுத்துள்ளது. மும்பை பங்குச்சந்தையில், இன்றைய வர்த்தகம் தொடங்கியதிலிருந்து டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் பங்குகளின் மதிப்பு ஏற்றத்துடன் காணப்பட்டது. வர்த்தகநேர மத்தியில், 52 வாரங்களில் இல்லாத உயர்வை கண்டு, 3 ஆயிரத்து 674 கோடி வருவாயுடன், TCS-ன் பங்குச்சந்தை மூலதன மதிப்பு, 7 லட்சத்து 3 ஆயிரத்து 309 கோடி […]
நுகர்பொருட்களுக்கு இறக்குமதி வரியை குறைக்க சீனா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவுடன் நடைபெற்ற வர்த்தக போர் முடிவுற்றதாக கூறப்படும் நிலையில் இந்த திட்டத்துக்கு அந்நாட்டு மத்திய அமைச்சரவை ஒப்புதல் பெறப்படவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கெனவே கடந்த ஆண்டு இதேபோல் 200 பொருட்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டது. இந்நிலையில், உணவு முதல் அழகு சாதனப்பொருட்கள் வரையிலான பல நுகர்வுப் பொருட்களுக்கு இறக்குமதி வரியைக் குறைக்க சீனா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்
மியூச்சுவல் பண்ட் முதலீடுகள் மீது உடனடிக் கடன் வழங்கப்படும் என HDFC வங்கி அறிவித்துள்ளது. தனிநபர் கடன் வழங்குவதில் முதலிடத்தில் உள்ள எச்டிஎப்சி வங்கி, கம்ப்யூட்டர் ஏஜ் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் என்னும் நிறுவனத்துடன் ஓர் உடன்பாடு செய்துள்ளது. இதன்மூலம் மியூச்சுவல் பண்ட் முதலீடுகளை வைத்திருப்பவர்களுக்கு அவற்றை அடமானமாகப் பெற்றுக்கொண்டு உடனடிக் கடன் வழங்க எச்டிஎப்சி வங்கி முடிவு செய்துள்ளது. மியூச்சுவல் பண்ட் முதலீட்டில் 50விழுக்காடு வரை கடன் வழங்கப்படும். இந்தக் கடனுக்கான வட்டி வீதம் 11விழுக்காடு வரை இருக்கும். […]
10 மாதங்களில் இல்லாத அளவிற்கு,ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் வேதாந்தா நிறுவன பங்குகள், விலை வீழ்ச்சியை சந்தித்திருக்கின்றன. தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் எதிரொலியாகவே, வேதாந்தா நிறுவன பங்குகள் விலை வீழ்ச்சியை எதிர்கொண்டிருக்கின்றன. இன்று காலையில், வர்த்தகம் தொடங்கியபோது, 258 ரூபாய் 75 காசுகளாக இருந்த வேதாந்தா நிறுவனத்தின் பங்குகள், காலை 11.16 மணி நிலவரப்படி, 255 ரூபாயாக சரிந்தது. இந்த விலை வீழ்ச்சி […]
40 விழுக்காடு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் காலாண்டு லாபம் அதிகரித்துள்ளது. மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் ஐ.ஓ.சி. நிறுவனத்தின் லாபம் 5 ஆயிரத்து 218 கோடி ரூபாயாகும். கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 3 ஆயிரத்து 720 கோடி ரூபாய் மட்டுமே லாபம் கிடைத்திருந்தது. காலாண்டில் நிறுவனத்தின் விற்றுமுதலும் 1 லட்சத்து 36 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. 2 கோடியே 80 லட்சம் டன் பெட்ரோலியம் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன, இதனையடுத்து பங்கு முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்டுகள் […]
அமைச்சரவைக் கூட்டத்தில் கலால் வரியைக் குறைப்பது குறித்து விவாதிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 80 டாலராக உயர்ந்துள்ளது. இதனால் கடந்த 10 நாட்களில் பெட்ரோல் விலை 2 ரூபாய் 68 காசுகளும், டீசல் விலை 2 ரூபாய் 58 காசுகளும் உயர்ந்துள்ளன. இன்று காலை நிலவரப்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சென்னையில் 80 ரூபாய் 11 காசுகளுக்கும் டீசல் விலை லிட்டருக்கு 72 ரூபாய் […]
நாள் ஒன்றுக்கு,டீசல் விலை உயர்வால் 9 கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்து வரும் அரசுப் போக்குவரத்து கழகம், தமிழகம் முழுவதும் இரண்டாயிரம் வழித்தடங்களில் அரசுப் பேருந்துகளின் சேவையை நிறுத்தியிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. டீசல் மானியம் ரத்து, போக்குவரத்து ஊழியர்களின் சம்பள உயர்வு போன்றவற்றால் நாள் ஒன்றுக்கு 8 கோடி ரூபாய் இழப்பிடு ஏற்பட்டுள்ளது. டீசல் விலை உயர்வு கூடுதலாக ரூ.1 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. டீசல் விலை உயர்வு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களை கடுமையான […]
திங்களன்று வைர வியாபாரி நீரவ் மோடியின் 170 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியின் போலி உத்தரவாதக் கடிதத்தைப் பெற்று சுமார் 13 ஆயிரத்து 400 கோடி ரூபாய் கடன் பெற்று வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றதாக வைரவியாபாரி நீரவ் மோடி குறித்து சிபிஐ அமலாக்கத்துறை தனித்தனியே விசாரித்து வருகிறது. இந்நிலையில், திங்களன்று பண மோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் நீரவ் மோடி, அவருடைய சகோதரர் நீஷல் மோடி, அவர்களது நிறுவனங்களுக்குச் சொந்தமான தனியார் […]
பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டியில் சேர்க்க தமிழக அரசு ஆதரவு தெரிவித்தால் விலை நிச்சயம் குறையும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.அதேபோல் ஜிஎஸ்டியின் கீழ் பொருட்கள் கொண்டுவரப்பட்டதால் மாநில அரசின் வருவாய் அதிகரித்துள்ளது என்றும் கூறியுள்ளார்.பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது.மேலும் தமிழகத்திற்கு தண்ணீர் தர இயலாது என தேர்தல் அறிக்கையில் கூறிய குமாரசாமியின் பதவியேற்பில் ஸ்டாலின் கருப்புச் சட்டை அணிந்து பங்கேற்பாரா? என்றும் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு முன் அமைச்சர் […]
சென்னையில் வரலாற்றிலேயே பெட்ரோல், டீசல் விலை உயர்வு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை 32 காசுகள் உயர்ந்து ரூ 79.79 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டீசல் விலை 28 காசுகள் உயர்ந்து ரூ 71.87 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேற்றைய மே(21) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: பெட்ரோலின் விலை லிட்டருக்கு 28 பைசா உயர்ந்து ரூ.79.47 ஆகவும், டீசலின் விலை லிட்டருக்கு 27பைசா உயர்ந்து ரூ.71.59 ஆக விற்பனை செய்யப்பட்டது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் […]
இன்றைய பெட்ரோல், டீசல் விலை பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 32 காசுகள் அதிகரித்து, லிட்டருக்கு ரூ.79.79 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.இதேபோல் டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 28 காசுகள் அதிகரித்து, லிட்டருக்கு ரூ.71.87 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. நேற்றைய மே(21) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: பெட்ரோலின் விலை லிட்டருக்கு 28 பைசா உயர்ந்து ரூ.79.47 ஆகவும், டீசலின் விலை லிட்டருக்கு 27பைசா […]
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர்,பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வரும் 24 ஆம் தேதி, காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கூறியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 27 ஆம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்தில், திருநாவுக்கரசர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பேசிய அவர், பெட்ரோல், டீசல் மீதான வரியை மாநில அரசு குறைத்தால் விலை உயர்வை சற்று குறைக்க முடியும் […]