ஏழை மக்களுக்கான பில்கேட்ஸ் அறக்கட்டளைக்கு இன்ஃபோசிஸ் துணை நிறுவனர் நந்தன் நிலேகனி உள்பட 3 இந்திய வம்சாவளியினர் தங்களது ஆஸ்தியில் பாதியை நன்கொடையாக அளிக்க முன்வந்துள்ளனர். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் பில் கேட்ஸ் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் ஆகியோர் தங்களது சொத்துக்களில் பாதிக்கும் மேற்பட்ட பகுதியை பில் அன்டு மெலிண்டா கேட்ஸ் என்ற அறக்கட்டளையைத் தொடங்கி அதற்கு வழங்கினர். இதைத் தொடர்ந்து இந்தியா, கனடா, சவுதி அரேபிய நாடுகளைச் சேர்ந்த உலக பணக்காரர்கள் பலரும் இதே […]
இன்றைய பெட்ரோல், டீசல் விலை: பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 9 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.81.19 காசுகளாக விற்பனையாகிறது . டீசல் விலை 9 காசுகள் குறைந்து, லிட்டருக்கு ரூ.72.97 காசுகளாகவும் விற்பனையாகிறது. சென்னையில் நேற்று காலை பெட்ரோல் விலை லிட்டருக்கு 7 காசுகள் குறைந்து, 81 ரூபாய் 28 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது. டீசல் விலை லிட்டருக்கு 6 காசுகள் குறைந்து. 73 ரூபாய் 6 காசுகளுக்கு விற்கப்பட்டது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 […]
போலி ஏ.டி.எம். கார்டுகள் தயாரித்து புதுச்சேரியில் வங்கிக் கணக்குகளிலிருந்து லட்சக்கணக்கான ரூபாய் திருடப்பட்ட வழக்கில், மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு வங்கிகளின் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளிலிருந்து பணம் திருடப்படுவதாக தொடர் புகார்கள் வந்தன. இதுகுறித்து விசாரணை நடத்திய புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி. போலீசார், போலி ஏ.டி.எம். அட்டைகளை தாயாரித்து மோசடியில் ஈடுபட்டதாக புதுச்சேரியில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வந்த பாலாஜி, ஜெயச்சந்திரன், சென்னையைச் சேர்ந்த ஷ்யாம், கடலூரைச் சேர்ந்த கமல், புதுச்சேரி மருத்துவர் விவேக் உள்ளிட்டோரை கைது செய்தனர். […]
சென்னையில் பெட்ரோல் விலையில் 7 காசுகளும், டீசல் விலையில் 6 காசுகளும், கச்சா எண்ணெய் விலை குறைவால் குறைந்துள்ளன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி ஆகியவற்றின் காரணமாக, பெட்ரோல் டீசலின் விலை உயர்த்தப்பட்டு வந்தது. கடந்த புதன்கிழமை பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ஒரு பைசா மட்டும் குறைக்கப்பட்ட நிலையில், நேற்று மீண்டும் விலை உயர்த்தப்பட்டதால், வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்தனர். இந்நிலையில், சென்னையில் […]
வங்கி ஊழியர்களின் இரண்டு நாள் வேலை நிறுத்தம் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திய நடைபெற்ற நிலையில் முடிவுக்கு வந்துள்ளது.இன்று முதல் வழக்கம் போல் வங்கிகள் இயங்குகின்றன. இந்த இரண்டு நாள் போராட்டமும் மக்களுக்கு பல்வேறு இன்னல்களையும், 43 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தக இழப்பையும் ஏற்படுத்திய போதும் போராட்டம் மிகப்பெரிய வெற்றி என்று வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன. 21 பொதுத்துறை வங்கிகளைச் சேர்ந்த சுமார் 10 லட்சம் ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் […]
முதலமைச்சர் நாராயணசாமி,புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என தெரிவித்துள்ளார். புதுச்சேரி சாரம் பகுதியில் உள்ள நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையில் அமைக்கப்பட்டுள்ள நவீன நிலப் பதிவேடுகள் பாதுகாப்பு அறையை அவர் திறந்து வைத்தார். அப்போது பேசிய நாராயணசாமி, கேரளாவைப் போன்று புதுச்சேரியிலும் பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்வது பற்றி ஆலோசிக்கப்படும் என்றார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ,எரிபொருள் விலை உயர்வு பிரச்சனையைத் தீர்க்க மத்திய அரசு முயற்சித்து வருவதாக தெரிவித்துள்ளார். மத்தியப்பிரதேசத்தின் போபாலில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தால் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளதாக விளக்கமளித்துள்ளார். அதனால்தான் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளதாகவும், இருப்பினும் அதனால் பொருளாதாரத்தில் பாதிப்பு இல்லை என்றும் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார். பெட்ரோல், டீசல் விலை உயர்வுப் பிரச்சனையைத் தீர்க்க மத்திய […]
சிபிஐ அதிகாரிகள்,கர்நாடகத்தில் காங்கிரஸ் தலைவர் சிவக்குமாருக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். கர்நாடகத்தில் ராமநகரத்தில் உள்ள கார்ப்பரேசன் வங்கிக் கிளையில் புதிய ஐந்நூறு ரூபாய், இரண்டாயிரம் ரூபாய்க் கட்டுகளை ரிசர்வ் வங்கி குறிப்பிட்ட ஆவணங்கள் இல்லாமலேயே அப்போதைய அமைச்சரான சிவக்குமாரின் உதவியாளர் பத்மநாபையாவுக்குக் கொடுத்துள்ளனர் என்பது புகார். இது தொடர்பாகக் கார்ப்பரேசன் வங்கியின் முதன்மை மேலாளர் பிரகாஷ், பத்மநாபையா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள சிபிஐ, இந்தப் பணக் கட்டுகள் யாருக்காக வாங்கப்பட்டன என்பது […]
பாமக நிறுவனர் ராமதாஸ் ,கேரள அரசைப் போன்று தமிழக அரசும் எரிபொருள் மீதான விற்பனை வரியை குறைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “பெட்ரோல், டீசல் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்து வரும் நிலையில், அதை சமாளிப்பதற்கான நடவடிக்கையாக பெட்ரோல், டீசல் மீதான விற்பனை வரியை லிட்டருக்கு ஒரு ரூபாய் குறைத்து கேரள அரசு ஆணையிட்டுள்ளது. கேரளத்தில் குறைக்கப்பட்ட எரிபொருள் விலை வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வருகின்றன. இது […]
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்திற்கு இடைக்கால முன்ஜாமீன் வழங்கியது டெல்லி உயர்நீதிமன்றம். 2007ஆம் ஆண்டு ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு வெளிநாட்டு முதலீட்டைப் பெறுவதற்கான அனுமதி வழங்கியதற்குக் கைம்மாறாக அப்போதைய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக்குச் சொந்தமான நிறுவனத்துக்கு மூன்றரைக் கோடி ரூபாய் பணம் செலுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிபிஐ விசாரித்து வரும் நிலையில் இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் விசாரணைக்காக இன்று ஆஜராகுமாறு ப.சிதம்பரத்துக்கு […]
பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ,பெட்ரோல், டீசல் விலை ஒரு பைசா குறைக்கப்பட்டது ஊழியரின் தவறால் நிகழ்ந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை புதன்கிழமை ஒரு பைசா மட்டும் குறைக்கப்பட்டதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தன. இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், பெட்ரோல் டீசல் விலையை நாள்தோறும் மாற்றி அமைக்க தொடங்கியதில் இருந்து ஒரு பைசா, 12 பைசா, 27 பைசா என விலை […]
இன்றைய பெட்ரோல், டீசல் விலை: பெட்ரோலின் விலை லிட்டருக்கு 55 பைசா அதிகரித்து ரூ.81.35 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. டீசலின் விலை லிட்டருக்கு 54 பைசா அதிகரித்து ரூ.73.12 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய பெட்ரோல்,டீசல் விலை: நேற்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 63 காசுகள் குறைந்து, 80 ரூபாய் 80 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது. டீசல் விலை லிட்டருக்கு 60 காசுகள் குறைந்து. 72 ரூபாய் 58 காசுகளுக்கு விற்கப்பட்டது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
இரண்டாவது நாளாக இன்றும் வங்கிகள் வேலை நிறுத்தம் தொடர்வதால், பல லட்சம் வங்கி வாடிக்கையாளர்களின் பணப்பரிவர்த்தனைகள் தேங்கிக் கிடக்கின்றன. 21 பொதுத்துறை வங்கிகள், 13 தனியார் வங்கிகள், ஆறு பன்னாட்டு வங்கிகள், 56 கூட்டுறவு கிராமப்புற வங்கிகள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றதாக வங்கி ஊழியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. சுமார் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் நேற்றும் இன்றும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கேரளா, மேற்கு வங்கம், பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் இந்தப் போராட்டம் முழுஅளவில் […]
பொதுத்துறை வங்கி ஊழியர்கள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊதிய உயர்வு கோரி நாடு முழுவதும் இன்றும், நாளையும் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒருபகுதியாக வங்கிக் கிளை முன்பு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் 200 பொதுத்துறை வங்கிக் கிளைகள் மூடப்பட்ட நிலையில், நாகர்கோவிலில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோவையில் ரயில்நிலையம் எதிரே உள்ள பரோடா வங்கியில் […]
கேரளாவில் பெட்ரோல் டீசல் விலையில் 1 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.இந்த விலை குறைப்பு ஜூன் 1 ஆம் தேதி முதல் அமலாகிறது” என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் இன்றைய விலை: பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை, கடந்த 16 நாட்களாக ஏறுமுகமாக இருந்த நிலையில் இன்று காலை குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி ஆகியவற்றின் காரணமாக, பெட்ரோல் டீசலின் விலை […]
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமீன் கேட்ட ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு நாளை விசாரணை என்று டெல்லி உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. 2007ஆம் ஆண்டு ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு வெளிநாட்டு முதலீட்டைப் பெறுவதற்கான அனுமதி வழங்கியதற்குக் கைம்மாறாக அப்போதைய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக்குச் சொந்தமான நிறுவனத்துக்கு மூன்றரைக் கோடி ரூபாய் பணம் செலுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிபிஐ விசாரித்து வரும் நிலையில் இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் […]
ஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை ஜூன் 5 வரை கைது செய்ய தடை விதித்தது டெல்லி உயர்நீதிமன்றம். இன்று ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன் ஜாமீன் கோரி ப.சிதம்பரம் பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். பின்னர் ஜூன் 5ம் தேதி வரை ப.சிதம்பரத்தை கைது செய்ய டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தடை விதித்தது .மேலும் ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் முன்ஜாமின் கோரிய மனு ஜூன் 5க்கு ஒத்திவைத்தது. சிதம்பரத்திற்கு முன் ஜாமின் கோரிய […]
பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை, கடந்த 16 நாட்களாக ஏறுமுகமாக இருந்த நிலையில் இன்று காலை குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி ஆகியவற்றின் காரணமாக, பெட்ரோல் டீசலின் விலை உயர்த்தப்பட்டு வந்தது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும், டீசலின் விலை 3 ரூபாய் 60 காசுகள் வரை அதிகரித்ததால், வாகன ஓட்டிகள் அதிருப்தியடைந்தனர். இந்நிலையில், சென்னையில் இன்று காலை பெட்ரோல் விலை லிட்டருக்கு […]
ரொடோமேக் பேனா நிறுவனத்தின் 177 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் 2,919 கோடி ரூபாய் கடன் பெற்று அதனை ரியல் எஸ்டேட் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்து மோசடியில் ஈடுபட்டதாக அந்த நிறுவனத்தின் உரிமையாளர் விக்ரம் கோத்தாரி மற்றும் அவரது மனைவி சாத்னா கோத்தாரி ஆகியோர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. தற்போது அந்த நிறுவனம் மற்றும் இயக்குனர்களுக்கு சொந்தமாக உத்தரப்பிரதேசம், […]
நாளை முதல் 2 நாட்களுக்கு நாடு முழுவதும் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதால், ஏ.டி.எம். உள்பட பல்வேறு வங்கிச் சேவைகள் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது. வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் தங்களுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு கோரி, வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். வங்கி ஊழியர்களுக்கு 2 சதவீதம் மட்டுமே ஊதிய உயர்வு வழங்க முடியும் என கூறியதால், மே 30 மற்றும் 31ஆம் தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்தனர். அதன்படி, நாளை எஸ்.பி.ஐ. […]