இந்தியாவில் இருந்து பாசுமதி அல்லாத பிறரகத்தை சேர்ந்த அரிசி வகைகளை இறக்குமதி செய்ய சீன அரசு கடந்த 2006-ம் ஆண்டில் தடை விதித்தது. சர்வதேச தரங்களுக்கு ஏற்ப இந்திய அரிசி வகைகள் இல்லாததால் இந்த தடை விதிக்கப்பட்டதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில். குவிங்டாவ் நகரில் நடைபெறும் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் முன்னிலையில் இந்தியாவில் இருந்து சீனாவுக்கு பாசுமதி அல்லாத அரிசி ரகங்களை ஏற்றுமதி […]
சமீபகாலமாக சென்னையில் தங்கம் கடத்துவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக துபாய் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து, வரும் விமானங்களில் அதிகளவு தங்கம் கடத்தப்படுகிறது. துபாயில் இருந்து சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு விமானம் வந்தது. அந்த விமானத்தில் துபாயில் இருந்து வந்த பயணியிடம் ரூ.4 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த தங்கங்களை கடத்தி வந்ததது கர்நாடகாவை சேர்ந்தவா் என்பது விசாரணையில் தெரிய வந்தது. மேலும், 13 கிலோ தங்கத்தை கடத்தி வந்தவரிடம் தங்களை […]
வருமான வரித்துறை சென்னையில் ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் நகைக்கடை உள்ளிட்ட 23 இடங்களில் நடத்தப்படும் சோதனைகளில் 7 கோடி ரூபாய் பணம், 15 கிலோ தங்க நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த காந்தி குழுமம் டெல்லி, மும்பை, கொல்கத்தா, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து துணிகளை வாங்கி ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்து வருகின்றது. பாரிமுனை கோவிந்தப்ப நாயக்கன் தெருவில் உள்ள காந்தி குழுமத்தின் ஆயத்த ஆடைக் கிடங்கு, வேப்பேரியில் உள்ள நிறுவன பங்குதாரர்களில் […]
பல லட்சம் ரூபாய் மதிப்பு பொருட்கள் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து நாசமாகின. கச்சேரி சலையில் உள்ள கோபுரம் வணிக வளாகத்தில் செயல்படும் வீட்டு உபயோக பொருட்கள் கடையில் மின்கசிவு காரணமாக அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பற்றிய தீ, அருகே உள்ள துணிக் கடைகளிலும் பரவி கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது. 4 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள், 2 மணிநேரமாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். […]
இன்று அதிகாலை 5 மணியளவில் மும்பையின் FORT பகுதியில் உள்ள பட்டேல் சேம்பர்ஸ் என்ற வர்த்தகக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 18 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் விடிய விடிய ஈடுபட்டனர். தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை என்றும் தீயைக் கட்டுக்குள் கொண்டு வருவதுதான் முக்கியப் பணி என்றும் தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். மழை பெய்ததன் காரணமாக மின்சார கசிவு ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. தீ வேகமாகப் பரவியதால் கடுமையான வெப்பமும் […]
28 லட்சம் ரூபாய் பணம் திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தை அடுத்த ஒரக்காட்டில் ஜெர்சி பால் நிறுவனத்தின் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஜெர்சி பால் நிறுவனத்தின் பணத்தை சென்னையைச் சேர்ந்த சென்னை ரேடியேஷன் என்ற தனியார் நிறுவனம் வசூலித்து வங்கியில் செலுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் வசூலான 28 லட்சம் ரூபாய் பணத்தை ரேடியேஷன் நிறுவனத்தின் காசாளர் மற்றும் உதவியாளர், துப்பாக்கி ஏந்திய காவலர், மற்றும் கார் ஓட்டுநர் ஆகியோர் கிண்டியில் உள்ள வங்கிக்கு காரில் எடுத்துச் சென்று கொண்டிருந்தனர். அப்போது, ஜெர்சி […]
அகில இந்திய லாரி உரிமையாளர்கள் சங்கம், டீசல் விலை மற்றும் சுங்கக் கட்டண உயர்வைக் கண்டித்து வரும் 18 ஆம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது. இதனால், நாடு முழுவதும் 7 லட்சத்து 50 ஆயிரம் லாரிகள் இயங்காது என சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சங்கத்தின் பொதுச்செயலாளர் ரஜிந்தர் சிங் கூறியுள்ளார். ஒரே நேரத்தில் டீசல் விலை, சாலைப் பயன்பாட்டுக்கான சுங்கக் கட்டணம், மூன்றாம் நபர் காப்பீட்டுத் தொகை என அனைத்தும் உயர்த்தப்பட்டதால் லாரி தொழிலையே […]
இன்று அதிகாலை முதல் சென்னையில் பிரபல நகைக்கடை வியாபாரியின் இல்லம் மற்றும் கடைகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். பல்லாவரம் பகுதியில் வசிக்கும் கவுதம் என்ற நகைவியாபாரியின் இல்லத்தில் இன்று காலை 8 பேர் கொண்ட வருமான வரி அதிகாரிகள் குழுவினர் சோதனை மேற்கொண்டனர். வேப்பேரி, தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் அவருக்கு சொந்தமான 15 கடைகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
வாடகைக்கு விடப்பட்ட அறையில் 60 லட்சம் மதிப்பிலான பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கோவையில் அடுக்குமாடி குடியிருப்பில் கட்டுக்கட்டாக சிக்கியது தொடர்பாக தொழிலதிபர்கள் இருவர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாமக்கல்லைச் சேர்ந்த தஸ்தகீர் என்பவர் தனது நண்பர்கள் 4 பேருடன் கோவை பீளமேடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், கடந்த 4ம் தேதி வாடகைக்கு ஒரு குடியிருப்பை எடுத்துள்ளார். காரில் வந்த அவர்கள், தாங்கள் கொண்டு வந்த தோல் பையை அறையினுள் வைத்துவிட்டு சென்றனர். இதனால் சந்தேகம் […]
இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.80.37 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.72.40-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நேற்றைய பெட்ரோல், டீசல் விலை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.80.59 காசுகளாகவும், டீசல் விலைலிட்டருக்கு ரூ.72.56 காசுகளாக விற்பனை செய்யப்பட்டது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
நுகர்வோர் நீதிமன்றத்தில் , மனைவியின் ஏடிஎம் அட்டையை கணவர் பயன் படுத்துவதை ஏற்க முடியாது என எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. பெங்களூரூவில் வசித்து வரும் வந்தனா என்ற பெண்ணின் ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தி கடந்த 2013 ஆம் ஆண்டு அவரது கணவர் 25 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்க முயன்றுள்ளார். ஆனால் பணம் வராததுடன் பணம் வழங்கப்பட்டுவிட்டதாக ரசீது மட்டும் வந்துள்ளது. இது குறித்து வங்கியிடம் முறையிட்ட போது, கணவராக இருந்தாலும் ஏ.டி.எம் கார்டின் ரகசிய குறியீட்டு […]
இன்றைய பெட்ரோல், டீசல் விலை: பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 9 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.80.59 காசுகளாகவும், டீசல் விலையில் 8 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.72.56 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ,கச்சா எண்ணெய்க்கான விலை சர்வதேச சந்தையில் குறைந்தால் மட்டுமே, பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். கேரளாவில் பெட்ரோல் மீதான வரியை மாநில அரசு குறைத்ததுபோல, தமிழகத்திலும் வரியை குறைக்க வேண்டும் என எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். அதற்கு பதிலளித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழகத்தில், பெட்ரோலுக்கு 34 சதவீதமும், டீசலுக்கு 25 சதவீதமும் மதிப்புக்கூட்டு வரி விதிக்கப்படுவதாக தெரிவித்தார். ஆந்திரா, தெலுங்கானாவை விட பெட்ரோல், டீசலுக்கான மதிப்புக்கூட்டு வரி […]
60 லட்சம் ரூபாய் மதிப்பிலான பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கோவை பீளமேட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. ஜெயின் என்ற சர்வீஸ் அப்பார்ட்மெண்ட்டில் ஓர் அறையை தஸ்தகீர் என்பவர் 2 நாட்களுக்கு வாடகை எடுத்து, நண்பர்கள் நான்கு பேருடன் திங்களன்று இரவு தங்கியுள்ளனர். பின்னர், நள்ளிரவே அனைவரும் அங்கிருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது. செவ்வாய்க்கிழமை காலையில் இருந்து தஸ்தகீரின் செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த குடியிருப்பின் உரிமையாளர் வெங்கடேஷ், அந்த அறைக்கு சென்று பார்த்ததில் ஒரு பையில் பழைய […]
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்திடம் டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் 7 மணி நேரம் நடைபெற்ற விசாரணை நிறைவடைந்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்துக்கு ஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் இன்று நேரில் ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ப.சிதம்பரம் நிதி அமைச்சராக பதவி வகித்த போது, ஏர்செல் -மேக்சிஸ் நிறுவனத்துக்கு, 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடுக்கு அனுமதி அளித்த விவகாரத்தில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் ப.சிதம்பரத்தை […]
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜரானார் ப.சிதம்பரம். முன்னதாக ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய ஜூலை 10 வரை தடை விதித்தது டெல்லி பாட்டியாலா நீதிமன்றம். சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு விசாரணையை ஜூலை 10க்கு ஒத்திவைத்தது டெல்லி பாட்டியாலா நீதிமன்றம். முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்துக்கு ஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் இன்று நேரில் ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ப.சிதம்பரம் நிதி அமைச்சராக பதவி […]
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய ஜூலை 10 வரை தடை விதித்தது டெல்லி பாட்டியாலா நீதிமன்றம். சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு விசாரணையை ஜூலை 10க்கு ஒத்திவைத்தது டெல்லி பாட்டியாலா நீதிமன்றம். முன்னதாக முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்துக்கு ஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் இன்று நேரில் ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ப.சிதம்பரம் நிதி அமைச்சராக பதவி வகித்த போது, ஏர்செல் -மேக்சிஸ் நிறுவனத்துக்கு, 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் […]
முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்துக்கு ஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் இன்று நேரில் ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ப.சிதம்பரம் நிதி அமைச்சராக பதவி வகித்த போது, ஏர்செல் -மேக்சிஸ் நிறுவனத்துக்கு, 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடுக்கு அனுமதி அளித்த விவகாரத்தில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய இன்று வரை டெல்லி சிபிஐ நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இந்நிலையில், இன்று ப.சிதம்பரம் நேரில் […]
இன்றைய பெட்ரோல், டீசல் விலை: பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 14 காசுகள் குறைந்து, லிட்டருக்கு ரூ.80.80 காசுகளாகவும், டீசல் விலை 10 காசுகள் குறைந்து, லிட்டருக்கு ரூ.72.72 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.இந்த விலை இன்று (ஜூன்- 05) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. நேற்றைய பெட்ரோல், டீசல் விலை: டீசல் விலை லிட்டருக்கு ரூ.72.82 காசுகள், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.80.94காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.