6 பாஸ்போர்ட்டுகளை பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் நிரவ் மோடி வைத்திருப்பது தெரிய வந்துள்ளது. பாஸ்போர்ட்டை முடக்கிய பின்னும் வெவ்வேறு நாடுகளுக்கு தப்பிச் சென்று கொண்டிருக்கும் நிரவ் மோடி, கடைசியாக பெல்ஜியத்தில் இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், நிரவ் மோடி 6 போஸ்போர்ட்டுகளை வைத்திருப்பதை தற்போது இந்திய புலனாய்வுத்துறையினர் கண்டறிந்துள்ளனர். அவற்றில் இரண்டு பாஸ்போர்ட்டுகள் மட்டுமே பயன்பாட்டில் இருப்பதாகவும், மற்றவை பயன்பாட்டில் இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக, நிரவ் மோடி மீது […]
சீனாவுக்கும்,அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தக போர் ஏற்பட்டு உள்ளது. இதனால் இரு நாடுகளும் போட்டி போட்டு பரஸ்பரம் தங்களது நாடுகள் இறக்குமதி செய்யும் அத்தியாவசிய பொருட்களுக்கான வரிவிதிப்பை அதிகரித்து வருகின்றன. குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அண்டை நாடுகளான கனடா, மெக்சிகோ நாடுகளில் தவிர மற்ற நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் முக்கிய பொருட்களுக்கான வரி விகிதத்தை கடுமையாக உயர்த்தி வருகிறார். இந்த இரு வல்லரசு நாடுகளின் வர்த்தக மோதல் காரணமாக இந்தியாவும் பெரும் பாதிப்பை சந்தித்து […]
இன்றைய (ஜூன் 16)பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.79.24 காசுகள் விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.71.62 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
மாநில அரசுகளின் வருவாய் 2018-19ம் ஆண்டில் அதிகரிக்கும் என ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது. மாநில அரசுகளின் வருவாய் எந்த அளவில் இருக்கும் என்பது தொடர்பாக எஸ்பிஐ ரிசர்ச் அமைப்பு ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி 2017-18ம் ஆண்டில் மாநிலங்களின் வருவாய் 18 ஆயிரத்து 698 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டில் அதாவது 2018-19ம் ஆண்டில் மாநிலங்களின் வருவாய் 37 ஆயிரத்து 426 கோடி ரூபாயாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு மற்றும் […]
மத்திய தொலைத்தொடர்புத்துறை, வோடஃபோன், ஐடியா அலைபேசி நிறுவனங்கள் இணைவதற்கு அடுத்த சில நாட்களில், ஒப்புதல் அளிக்க உள்ளது. மத்திய தொலைத்தொடர்புத்துறை செயலாளர் அருணா சுந்தரராஜன், வோடஃபோன்-ஐடியா இணைப்பிற்கு ஒப்புதல் அளித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா கையெழுத்திடவுடன், வோடஃபோன்-ஐடியா நிறுவனங்கள் இணைவதற்கு அனுமதியளிக்கும் ஆவணங்கள் அந்தந்த நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இருபெரும் செல்பேசி சேவை நிறுவனங்களான வோடஃபோனும், ஐடியாவும் ஒன்றாக இணைக்கப்படுவது, உலகளவில், இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம் உருவாக […]
சர்வதேச நாணய நிதியம்,அமெரிக்காவின் நிதி மற்றும் வர்த்தக கொள்கைகள், உலக பொருளாதாரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. உள்நாட்டு தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாக்கும் வகையில், இறக்குமதி பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இதற்கு, சீனா, கனடா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அமெரிக்காவின் நடவடிக்கையால், உலக பொருளாதாரமே ஆபத்தை நோக்கி பயணிப்பதாக, சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவின் பொருளாதாரம் நடப்பு ஆண்டில், எதிர்பார்த்தபடியே […]
138 கோடி ரூபாய் மதிப்பிலான சென்னையில் கனிஷ்க் கோல்டு நிறுவனத்துக்குச் சொந்தமான சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர். அந்நிறுவனத்தின் மேலாண் இயக்குநரான சென்னையைச் சேர்ந்த பூபேஷ்குமார், போலி ஆவணங்கள் மூலம் 14 பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில், 824 கோடி ரூபாய் கடன் பெற்றதாக புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில், கனிஷ்க் நிறுவனம் சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. பூபேஷ்குமார், அவரது மனைவி நீட்டா ஜெயின் உள்ளிட்ட 6 பேர் மீது கடந்த மார்ச் மாதம் […]
கடந்த மே மாதத்தில் இந்தியாவில் பெட்ரோல், டீசலின் தேவை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்தது ஆய்வில் தெரியவந்துள்ளது. உலக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதியில், இந்தியா மூன்றாவது இடம் வகிக்கிறது. இந்நிலையில், பெட்ரோல், டீசல் பயன்பாடு குறித்து பெட்ரோலிய அமைச்சகத்தின் ஆய்வில், கடந்த ஜனவரி முதல் மே வரையிலான 5 மாதங்களில் டீசல் பயன்பாடு 35 புள்ளி 2 மில்லியன் டன் என்று தெரியவந்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலத்தை ஒப்பிடுகையில் 6 சதவீதம் அதிகம் என்றும், […]
பிரிட்டன் அமைச்சர் பாரோன்னஸ் வில்லியம்ஸ் (( Baroness Williams )), முறையான சட்ட வழிகாட்டுதல்களின் அடிப்படையில், தொழிலதிபர் விஜய் மல்லையா நாடு கடத்தப்படுவார் என தெரிவித்திருக்கிறார். இந்தியா வந்துள்ள அவர், உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜுஜூவை சந்தித்துப் பேசினார். அப்போது, விஜய் மல்லையாவை இந்தியா கொண்டுவருவது குறித்து இருவரும் விவாதித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாரோன்னஸ் வில்லியம்ஸ், முறையாக சட்ட விதிமுறைகளின் அடிப்படையில், விஜய் மல்லையா நாடு கடத்தப்படுவது முன்னெடுக்கப்படும் என்றார். அதேநேரம், வைர வியாபாரி நீரவ் […]
இன்றைய பெட்ரோல் விலை: இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.79.33 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.71.62-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. நேற்றைய (ஜூன் 11) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: பெட்ரோல் விலை 21 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.79.48 காசுகளாக விற்பனை செய்யப்பட்டது. டீசல் விலையில் 16 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.71.73 காசுகளாக விற்பனை செய்யப்பட்டது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
மும்பையில் வைத்து ஸ்கிம்மர் கருவி மூலம் பலரது வங்கி கணக்கு விவரங்களை திருடி, 100 கோடி ரூபாய்க்கு மேல் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், மூளையாக செயல்பட்ட நபரை சிபிசிஐடி போலீசார் பிடித்துள்ளனர். இந்த நூதன மோசடியில் வெளிவந்த பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. கேரளாவில் கடந்த மார்ச் மாதம் அடிதடி சம்பவத்தில் கைதான புதுச்சேரியை சேர்ந்த நபரிடம் 15க்கும் மேற்பட்ட ஏடிஎம் கார்டுகள் இருந்தன. இதனால், சந்தேகமடைந்த கேரள காவல்துறையினர் விவரங்களை புதுச்சேரி போலீசாருக்கு […]
சுங்கம் மற்றும் கலால்துறை முதன்மை ஆணையர் ரஞ்சன் குமார் ரெளத்ரி ,தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு ரூ.143.86 கோடி ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்டதாக கூறியுள்ளார். கடந்த 8 நாட்களில் மட்டும் ரூ.34.41 கோடி ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
இன்ப செய்தி..! இனி GST கிடையாது..! வங்கிகள் தனது வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் இலவச சேவைக்கு GST கிடையாது என மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. கடந்த வருடம் ஜுலை மாதம் நாடு முழுவதும் GST கொண்டு வரப்பட்டது. இதனால் மிகவும் பாதிக்கபட்ட துறையில் ஒன்று வங்கிகள். வங்கிகள் தனது வாடிக்கையாளர்கள் வங்கியில் வைத்திருக்கும் இருப்பு தொகையிலிருந்து வரும் லாபத்தை கொண்டு பல இலவச சேவையை தனது பயனர்களுக்கு தந்தனர். உதாரணமாக தனது வாடிக்கையாளர்களுக்கு செக் புக், பாஸ் […]
இன்றைய (ஜூன் 11) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 21 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.79.48 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலையில் 16 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.71.73 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி போலீசார் உலகிலேயே மிக குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் வழங்குவதாக அறிவித்தவரை கைது செய்துள்ளனர். ரிங்கிங் பெல்ஸ் (Ringing Bells) நிறுவனர் மோஹித் கோயலை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உலகத்திலேயே மிகவும் குறைந்த விலையில் 251 ரூபாய்க்கு ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்வதாக ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது. இந்த மலிவு விலை போனுக்காக 30,000 பேர் பணம் செலுத்தி பதிவு செய்துள்ளனர். மேலும் 7 கோடிப்பேர் ஸ்மார்ட்போன் பெறுவதற்காக முன்பதிவு […]
25 லட்சம் ரூபாய் பணம் சென்னையில் சரவணபவன் ஓட்டலில் விட்டுச் செல்லப்பட்ட அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. அண்ணா நகரில் உள்ள அந்த ஓட்டலில் இருக்கை ஒன்றில் இருந்த பணப்பையை ஊழியர் ஒருவர் கண்டறிந்தார். உணவருந்த வந்த இருவர் பணத்தை விட்டுச் சென்றது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்தது. பின்னர் அந்த பணத்தை ஓட்டல் நிர்வாகம் அண்ணா நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தது. 10 நாட்களுக்கு மேல் ஆகியும், அந்த பணத்துக்கு உரிமைகோரி யாரும் வராததால், 25 லட்சம் […]
சென்னை உயர் நீதிமன்றம்,முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. வெளிநாட்டில் உள்ள சொத்துக்களை தெரிவிக்காதது தொடர்பான வழக்கின் விசாரணைக்கு ஆஜராகும்படி 3 முறை சம்மன் அனுப்பியும், கார்த்தி சிதம்பரம் ஆஜராகாததால், அவரை கைது செய்ய, நுங்கம்பாக்கம் காவல் ஆய்வாளருக்கு வருமான வரித் துறை, வாரன்ட் பிறப்பித்தது. இந்நிலையில், உச்சநீதிமன்ற அனுமதியோடு மனைவி மற்றும் குழந்தையுடன் லண்டன் செல்ல இருந்த கார்த்தி சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்க கோரி, மூத்த […]
கூட்டுறவு வங்கியில் புதுச்சேரி மாநிலம் திருபுவனை அருகே 3 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருபுவனையை அடுத்த மதகடிப்பட்டில் திருபுவனை விவசாயிகள் கூட்டுறவு சங்க வங்கி உள்ளது. இங்கு அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் வைப்புத்தொகை செலுத்தியுள்ளனர். மேலும் தங்களது நகைகளை அடமானமாக வைத்து நகைக்கடனும் பெற்றுள்ளனர். நேற்று வங்கிக்கு விடுமுறை என்பதால் வங்கி பூட்டப்பட்டிருந்தது. வங்கிக்கு இரவில் காவலாளி இல்லை என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் […]
இன்றைய(ஜூன் 10) பெட்ரோல்,டீசல் விலை: இன்றைய (ஜூன் 10)பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.79.69 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.72.40-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. நேற்றைய பெட்ரோல் விலை: நேற்று பெட்ரோல் விலை 79 ரூபாய் 95 காசுகளாக விற்பனை செய்யப்பட்டது. டீசல் விலை லிட்டருக்கு 32 காசுகள் குறைந்து 72 ரூபாய் 8 காசுகளாக விற்பனை செய்யப்பட்டது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.