தொழிலதிபர் சேகர் ரெட்டி மீதான 2 வழக்குகளையும் ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம். இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது சேகர் ரெட்டி மீதான 2 வழக்குகள் ரத்து செய்வதாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்தது.இதன் மூலம் புதிய ரூ.2000 நோட்டுக்கள் பதுக்கப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது .ஒரே குற்றச்செயலுக்கு 3 வழக்குகளை பதிவு செய்ததாக சேகர் ரெட்டி எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில் தற்போது சிபிஐ பதிவு செய்த 2 வழக்குகளை ரத்து செய்து […]
மத்திய அரசு ‘ஓவர்டைம்’ பணி செய்தால் வழங்கப்படும் ஊதியத்தை ஊழியர்களுக்கு ரத்து செய்ய முடிவு செய்துள்ளது. ஆனால் இயந்திரங்களில் பணியாற்றுவோர் உள்ளிட்டோருக்கு மட்டும் விலக்கு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய பணியாளர் பயிற்சித்துறையும், மத்திய செலவுத்துறையும் விளக்கம் அளித்துள்ளது. அதில், 7-வது ஊதியக்குழு நடைமுறைக்கு வந்துள்ளது, இதில் மத்தியஅரசு ஊழியர்களுக்குக் குறிப்பிட்ட அளவு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஆதலால், மத்திய அரசின் தொழிற்பிரிவு, […]
பேங்க் ஆப் மகாராஷ்டிரா தலைமை செயல் அலுவலர் ரவீந்திர மராதேவை போலீசார் கைது செய்ததற்கு இந்திய வங்கிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. டி எஸ்.கே.குழுமத்திற்கு 100 கோடி ரூபாய் கடன் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புனே பொருளாதார குற்றப்பிரிவுக்கு புகார் வந்தது. இதையடுத்து பேங்க் ஆப் மகாராஷ்டிரா தலைமை செயல் அலுவலர் ரவீந்திர மராதே,முன்னால் மேலான் இயக்குனர் சுஷில் வினோத்,செயல் இயக்குனர் ராஜேந்திர குப்தா மற்றும் வங்கி அலுவலர்கள் இருவர் என மொத்தம் 5 பேர் புதன் கிழமை […]
வங்கிகடன் கடன் மோசடியில் சிக்கி வெளிநாட்டிலுள்ள தொழிலதிபர் விஜய்மல்லையாவின் ரூ.12,500 கோடி மதிப்புள்ள சொத்துகளை கைப்பற்ற அமலாக்கத்துறை நடவடிக்கையை தொடங்கியுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பொருளாதார குற்றவியல் சட்டத்தில் புதிய திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.அதில் ரூ.100 கோடிக்கு மேல் மோசடி செய்துவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பி செல்பவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்து அதன் மூலம் கடனை திருப்பும் விதமாக சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதன்படி முதல் முறையாக விஜய்மல்லையாவால் நிர்வகிக்கப்படும் நேரடி ,மறைமுக சொத்து ரூ.12,500 கோடி பறிமுதல் […]
சேலத்தில் வீடு மற்றும் குடோன்களின் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 20 லட்ச ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சேலம் அன்னதானப்பட்டி கே.எஸ் கார்டன் பகுதியில், ஏராளமான மாவு மில்கள், அரிசி குடோன்கள் உள்ளன. அவைகளில் சிலவற்றில் குட்கா பொருட்கள் பதுக்கிவைக்கப்பட்டு சேலம் மாநகர் முழுக்க விநியோகம் செய்யப்படுவதாக காவல் ஆணையர் அலுவலகத்துக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஆணையர் உத்தரவின் பேரில், அன்னதானப்பட்டி காவல்துறையினர் குறிப்பிட்ட பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த 2 குடோன்கள் […]
பேங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியின் தலைவர் உள்ளிட்டோர் 3000 கோடி ரூபாய் கடன் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். புனேவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் அந்த வங்கி அதிகாரிகள், டிஎஸ்கே நிறுவனத்திற்கு முறைகேடாக கடன் வழங்கியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக ஏற்கனவே அந்த நிறுவனத்தின் உரிமையாளர் டிஎஸ் குல்கர்னி, அவரது மனைவி ஆகியோர் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டனர். முதலீட்டாளர்கள் 4 ஆயிரம் பேரிடம் 1150 கோடி ரூபாய் பெற்று ஏமாற்றியதுடன், வங்கியில் […]
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை அதிகரித்து மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அம்மாநிலத்தில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் எந்த சலுகையும் இடம்பெறாததால் அரசு ஊழியர்கள் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பள்ளி ஊழியர்கள் உள்பட மாநில அரசு ஊழியர்கள் அனைவருக்கும் 18 சதவீதம் கூடுதல் அகவிலைப்படி வழங்கப்படுவதாக மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு வரும் என்றும் […]
நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் சேதுரத்தினம் ,லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக ரூ.50 கோடி மதிப்பிலான தீப்பெட்டி பண்டல்கள் தேக்கமடைந்துள்ளதாக கூறியுள்ளார். புக்கிங் செய்தவர்களுக்கு தீப்பெட்டி பண்டல்கள் வழங்க முடியாத நிலை உள்ளதால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
வங்கிக் கணக்கில் கோவை குனியமுத்தூரில் நான்கரை லட்சம் ரூபாய் மோசடி நடைபெற்றுள்ள சம்பவத்தில் நடவடிக்கை கோரி பாதிக்கப்பட்ட பெண் காவல் ஆணையரகத்தில் மனு அளித்துள்ளார். குனியமுத்தூரைச் சேர்ந்த உசேன் பீவி என்பவர், கணவரின் ஓய்வூதியத் தொகையை பெறுவதற்காக வெரைட்டி ஹால் சாலையில் உள்ள இந்தியன் வங்கிக்கு சென்றார். ஆனால் அவரது வங்கிக் கணக்கில் இருந்த நான்கரை லட்சம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். தங்கள் வங்கிக் கணக்கில் நஜீமாபேகம் என்பவர் ஏடிஎம். அட்டை பெற்றதாகக் கூறும் […]
3 கோடியே 20 லட்சம் டாலர் அளவுக்கு கிரிப்டோ கரன்சி திருட்டால் தென்கொரிய கிரிப்டோ கரன்சி சந்தையான பிட்தம்ப் (Bithumb) இழப்பை சந்தித்துள்ளது. பிட்தம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த ஒருவாரத்தில் பல்வேறு கிரிப்டோ கரன்சிகளை ஊடுருவி ஹேக்கர்கள் 3 ஆயிரத்து 500 கோடி தென்கொரிய வான் (won) மதிப்பிலான பணத்தை திருடியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்க டாலர் மதிப்பில் 3 கோடியே 20 லட்சம் டாலர்களாகும். இதனால் பரிவர்த்தனைகளை நிறுத்திவைத்திருப்பதாக கூறியுள்ள பிட்தம்ப் எனினும் வாடிக்கையாளர்கள் விவரங்கள் இணையதளத்துடன் […]
இந்தியா – பிரான்ஸ் நாடுகள் இடையிலான வர்த்தகத்தை 2020 ஆம் ஆண்டுக்குள் 1500 கோடி ஈரோக்களாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 4 நாடுகளின் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அறிவியல் தொழில்நுட்பம் உள்பட பல துறைகளில் இரு நாடுகளின் கூட்டுறவை வலுப்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்திய மாணவர்கள் வசிக்கும் விடுதிக்கு சென்ற […]
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ),ரூபாய் நோட்டுகள், நாணயங்களில் உள்ள நுண்கிருமிகள் தொற்றால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அனைத்து மாநில உணவு பாதுகாப்புத் துறை ஆணையர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி யுள்ளது. இதுதொடர்பாக எஃப்எஸ்எஸ்ஏஐ அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: ரூபாய் நோட்டுகளை எண்ணும்போது எச்சிலை பயன்படுத்துதல், அழுக்கு படிந்த கைகளால் நுண்கிருமிகள் அவற்றில் தொற்றிக் கொள்கின்றன. இவ்வாறான நோட்டுகள், நாணயங்களை பயன்படுத்தும்போது உணவு நஞ்சாதல், வயிறு, சுவாச கோளாறுகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, […]
இன்றைய(ஜூன் 20) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்: பெட்ரோல் விலை நேற்றைய விலையில் எவ்வித மாற்றமுமின்றி லிட்டருக்கு ரூ.79.16 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது . டீசல் நேற்றைய விலையிலிருந்து மாற்றம் எதுவும் இல்லாமல் லிட்டருக்கு ரூ.71.54 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
1 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் கோவையில் பிடிபட்ட வழக்கில் மேலும் இருவர் திருப்பூரில் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை தடாகம் சாலையில் கடந்த 1-ஆம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் இருசக்கர வாகனத்தில் வந்த ஆனந்தன் என்பவரிடம் சோதனையிட்டனர். அப்போது அவரிடம் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டன. அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் சுந்தர் மற்றும் கீர் முகமது என்ற இருவருடன் சேர்ந்து வேலாண்டிப் பாளையம் பகுதியில் அவர் கள்ளநோட்டு தயாரித்து […]
வாடிக்கையாளர் வங்கிக் கணக்கில் இருந்து சென்னை திருவொற்றியூர் அருகே 5, 13, 000 ரூபாயை திருடியதாக வங்கி துணை மேலாளர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர். விச்சூரை சேர்ந்த விவசாயி ரவீந்திரநாத் கடந்த ஆண்டு மணலி புது நகரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு தொடங்கியுள்ளார். தனது வருமானத்தை அந்த கணக்கில் சேமித்து வந்த ரவீந்திர நாத், பணம் எடுப்பதற்கு வங்கிக்கு சென்றார். ஆனால் அவருடைய கணக்கில் கடந்த மே மாதத்தில் ஆறு முறை மொத்தம் 5, […]
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி , பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் மீதான வரியை லிட்டருக்கு 25 ரூபாய் குறைக்க வேண்டுமென முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அண்மையில் வலியுறுத்தியிருந்தார். ஆனால், இது சாத்தியமில்லை என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். நாட்டு மக்கள் அனைவரும் வரிகளை நேர்மையாக செலுத்த வேண்டும் என்றும், அவ்வாறு செலுத்தினால் பெட்ரோல், டீசல் மீதாக வரிகளை […]
இன்றைய(ஜூன் 19) பெட்ரோல், டீசல் விலை: இன்றைய பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 8 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.79.16 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.டீசல் விலை நேற்றைய விலையிலிருந்து மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.71.54 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
இன்று ஐசிஐசிஐ வங்கி சி.இ.ஓ. பதவியில் சாந்தா கோச்சார் நீடிப்பாரா? இல்லையா? என்பது தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடனில் மூழ்கிய வீடியோகான் நிறுவனத்துக்கு 3 ஆயிரத்து 250 கோடி ரூபாய் கடன் வழங்கிய சர்ச்சையில் சாந்தா கோச்சார் சிக்கியுள்ளார். இதுதொடர்பாக பல்வேறு முடிவுகளை எடுப்பதற்காக ஐசிஐசிஐ வங்கியின் வாரியம் கூடுகிறது. இந்தக் கூட்டத்தின் போது சாந்தா கோச்சாரை பதவியில் இருந்து நீக்கி விட்டு, புருடென்சியல் லைஃப் இன்சூரன்சின் சி.இ.ஓ. சந்தீப் பாக்சியை நியமிக்க முடிவெடுக்கப்படும் என […]
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ.20 லட்சம் வரை செலுத்தத் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் உணவுப் பொருட்கள் விற்போரின் பதிவு சான்று அல்லது உரிமக் கட்டணத்தில் மாற்றம் வருகிறது. உணவுப் பொருட்கள் விற்கும் சிறிய வியாபாரிகள் முதல் பெரிய வணிகர்கள் வரை பதிவுச் சான்று அல்லது உரிமம் வைத்திருப்பதை உணவுப் பாதுகாப்புத் துறை உறுதி செய்து வருகிறது. இதன்படி ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை உணவுப் பொருட்கள் விற்பனை செய்தால் அதற்கு ரூ.100 செலுத்தி பதிவுச் […]
இன்று முதல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு தழுவிய அளவில் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் 75 லட்சத்திற்கும் மேற்பட்ட சரக்கு லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன. டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது, சுங்கச் சாவடி கட்டண உயர்வு, காப்பீடுத் தொகை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் லாரி தொழில் கடும் பாதிப்பை சந்தித்து வருவதாக லாரி உரிமையாளர்கள் கூறுகின்றனர். லாரி தொழிலை முடக்கும் வகையிலான பாதிப்புகளைக் களைய மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க […]