வணிகம்

இன்றைய (ஆகஸ்ட் 4) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம் !

இன்றைய  பெட்ரோல் விலை  லிட்டருக்கு ரூ. 79.68 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.அதேபோல் டீசல் விலை  லிட்டருக்கு ரூ. 72.03 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 1 Min Read
Default Image
Default Image

ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசல், மதுபானங்களை  கொண்டு வந்தால் மாநில அரசின் வருவாய் பெரிதும்  பாதிக்கும்!அமைச்சர் கே.சி.வீரமணி

ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசல், மதுபானங்களை  கொண்டு வந்தால் மாநில அரசின் வருவாய் பெரிதும்  பாதிக்கும்  என்று அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார். மேலும்  கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவரக்கூடாது என்றும் கூறியுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 1 Min Read
Default Image
Default Image

வருமானவரித்துறை தொடர்ந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் குடும்பத்தினர் கட்டாயம் ஆஜராக வேண்டும்!

ஆகஸ்ட் 20 ஆம் தேதி வருமானவரித்துறை தொடர்ந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் குடும்பத்தினர் கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும் என்று  சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 1 Min Read
Default Image
Default Image

தமிழக அரசு சார்பில்  ஜிஎஸ்டி தொடர்பான விவரங்களை பெற செயலி அறிமுகம் !

தமிழக அரசு சார்பில்  ஜிஎஸ்டி தொடர்பான விவரங்களை பெற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ள்ளது .தமிழக வணிகவரித்துறை டிஎன் சிடிடி(TNCTD) & ஜிஎஸ்டி(GST)  என்ற செயலியை  அறிமுகப்படுத்தியுள்ளது.இதில் வணிகவிவரம் தேடல், மனுக்களின் நிலை அறிதல் உள்ளிட்டவைகளுக்கு செயலி பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 1 Min Read
Default Image

அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் GST குறித்த கலந்தாய்வுக் கூட்டம்!

சென்னையில் அமைச்சர்கள் ஜெயக்குமார்,பென்ஜமின் மற்றும் வீரமணி ஆகியோர் தலைமையில் தமிழ்நாடு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மற்றும் வணிகவரித்துறை சார்பில்  எம்எஸ்எம்இ (MSME) தொழில் நிறுவன சங்கங்களுடனான GST குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 1 Min Read
Default Image
Default Image

தற்காலிக அரசு செவிலியர்களுக்கான ஊதியம் ரூ.7,700ல் இருந்து ரூ.14 ஆயிரமாக உயர்வு!அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

தற்காலிக அரசு செவிலியர்களுக்கான ஊதியம் தமிழகத்தில் ரூ.7,700ல் இருந்து ரூ.14 ஆயிரமாக உயர்வு என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,முதலமைச்சர் பழனிசாமி  செவிலியர்களுக்கான ஊதியத்தை உயர்த்தி உத்தரவிட்டதாக  தகவல் தெரிவித்துள்ளார். ஊதிய உயர்வு 01.04.2018 முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 2 Min Read
Default Image

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆப்பு!வருமானத்திற்கு அதிகமாக சொத்து..!உயர்நீதிமன்றம் விசாரணை நடத்த உத்தரவு

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் குடும்பத்தினர் மீதான சொத்துக்குவிப்பு புகார் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்று  தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக திமுகவின்  ஆர்.எஸ்.பாரதி வருமானத்திற்கு அதிகமாக சொத்து  சேர்த்ததாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் குடும்பத்தினர் மீது தொடர்ந்த வழக்கை கடந்த ஜூலை 17 ஆம் தேதி  உயர்நீதிமன்றம் விசாரித்தது.விசாரித்த பின்னர்   கொடுத்த புகாரை விசாரிக்க 3 மாதமாக நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று  மாநில லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.அதேபோல்  ஓ.பி.எஸ் […]

#ADMK 4 Min Read
Default Image

தொடர்ந்து 6-வது நாளாக லாரி ஸ்டிரைக்!பல கோடி சரக்குகள் தேக்கம்!

தொடர்ந்து 6-வது நாளாக நடைபெற்று வரும் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் பால், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகளும்  நிறுத்தத்தில் ஈடு பட்டு வருகின்றது. பிற மாவட்டங்களுக்கு நாமக்கல்லில் இருந்து அனுப்ப வேண்டிய ரூ.17 கோடி முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளது. ஆனால்  கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து கொண்டே இருக்கும், கைவிடும் எண்ணம் எங்களுக்கு இல்லை என லாரிகள் உரிமையாளர்கள் சங்கம் பகிரங்கமாக தெரிவித்துள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 2 Min Read
Default Image
Default Image

நாளை ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன் ஜாமீன் மீது விசாரணை!

நாளை ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன் ஜாமீன் மீது விசாரணை நடைபெறுகிறது. நாளை ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மீது டெல்லி உயர்நீதிமன்றத்தில்  விசாரணை நடைபெறுகிறது. ஐ.என்.எக்ஸ். நிறுவனம் அந்நிய முதலீடு பெறுவதற்கான அனுமதியை முறைகேடாக வழங்கியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 1 Min Read
Default Image

முறையாக பயிர்க்கடனை வழங்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை!அமைச்சர் செல்லூர் ராஜூ

முறையாக பயிர்க்கடனை வழங்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.மேலும்  விவசாயிகளுக்கு காவிரியில் நீர் திறக்கப்பட்டுள்ளதால் பயிர்க்கடன் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக விலைவாசி உயர்வை தடுக்க கூட்டுறவுத்துறைக்கு ரூ.5கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு மூலம் கூட்டுறவுத்துறையில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 2 Min Read
Default Image

இன்றைய(ஜூலை 23) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 8 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.79.25 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.   டீசல் விலை 9 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.71.70 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 1 Min Read
Default Image

ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு தமிழக பெண்கள் கடன் முத்ரா திட்டத்தின் கீழ்  பெற்றுள்ளனர்!மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

முத்ரா திட்டத்தின் கீழ் பெண்களை தொழில் முனைவோராக உருவாக்க  கடன் வழங்கப்பட்டு வருகிறது என்று  மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு தமிழக பெண்கள் கடன் முத்ரா திட்டத்தின் கீழ்  பெற்றுள்ளனர் என்றும் கூறியுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 1 Min Read
Default Image

24 ஆம் தேதி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில்  நாடாளுமன்றம் முற்றுகை !விக்கிரமராஜா

24 ஆம் தேதி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில்  நாடாளுமன்றம் முற்றுகை என்று  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.முற்றிலும் ஜிஎஸ்டியில் 18%, 28% வரி விதிப்பு முறையை  நீக்க வேண்டும்.வால்மார்ட் போன்ற நிறுவனங்கள் ஆன்லைன் வர்த்தகத்தில் மறைமுகமாக ஈடுபடுவதை எதிர்க்கிறோம் என்றும் கூறியுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.  

#ADMK 2 Min Read
Default Image

லாரிகள் வேலை நிறுத்தத்தை நியாயமான கோரிக்கைகளை ஏற்று  முடிவுக்கு கொண்டுவர வேண்டும்!பாமக நிறுவனர் ராமதாஸ்

லாரிகள் வேலை நிறுத்தத்தை நியாயமான கோரிக்கைகளை ஏற்று  முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று  பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்,  லாரிகள் ஸ்டிரைக்கின் பாதிப்புகள் வெளிப்படையாக தெரியத் தொடங்கிவிட்டன. வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று   மத்திய, மாநில அரசுகளுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 2 Min Read
Default Image

ஜிஎஸ்டியில் பெட்ரோலிய பொருட்களை  கொண்டுவரும் திட்டம்! இல்லை மத்திய அரசு

ஜிஎஸ்டியில் பெட்ரோலிய பொருட்களை  கொண்டுவரும் திட்டம் இல்லை என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.இதுவரை   பெட்ரோலிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி விதிக்க ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைக்கவில்லை  என்று  மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 1 Min Read
Default Image